-சங்கர சுப்பிரமணியன்.
(இதுவும் ஒருவகை ஹைக்கூ கவிதையே. ஆனால் இதற்கு கவிதை இலக்கணம் பெரிதாகத் தேவையில்லை என்றாலும் சிறிதாவது நக்கல் எட்டிப்பார்க்க வேண்டும்)
பலநாளாக பின் சென்றான்
ஒருநாள் காதலைச் சொன்னான்
கன்னத்தைத்தொட்டது காலணி
பெரிய எழுத்தாளராம்
நூல் பல வெளியிட்டாராம்
விற்றது பத்தேதானாம்
வழிமேல் விழிவைத்தான்
காத்திருந்த கன்னி வந்தாள்
சென்றதோ வேறொருவனுடன்
வீராதிவீரன் அவன்
வேங்கையையே வெட்டிச் சாய்ப்பான்
விரலை வெட்டிக்கொண்டான்
கண்ணகிக்கு கோயில்செய்வான்
கன்னியர்மேல் அன்பு கொள்வான்
கற்பென்றால் என்னவென்பான்
எதிரில் போலிஸ்அதிகாரி
காலை உதைத்து பயிற்சிசெய்தான்
காலரைப்பிடித்து இழுத்துச்சென்றார்
No comments:
Post a Comment