கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Silverwater C3 Church Hall இல் இடம்பெற்றது. அறிவித்தது போல் சரியாக 5.30 மணிக்கு எமது சிம்ம குரலோன் மகேஸ்வரன் பிரபாகரன் மேடையில் இசைக்குழுவுடன் தோன்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
Drummer செல்வாவின் தலைமையிலான Shastra இசைக்குழு எனும் மிகவும் திறமைவாய்ந்த இசைக்குழுவினருடன், சோனியா, ஜிதின், சக்தி மற்றும் ரேஷ்மா பாடல்களை மிகவும் இனிமையாக பாடி அசத்தினார்கள்
சோனியா மேடையில் தோன்றி ஆனந்த ராகம் பாடலை தனது வசீகர குரலால்
பாடி சபையோரின் பாராட்டை பெற்றார். அடுத்து ஜித்தின் பெரியோனே என்னும் அவரின் குரலில்
ARR கு பாடிய பாடலை பாடினார். நான் இதற்கு முன் எந்த மேடை நிகழ்ச்சியிலும் இவரை பார்த்திருக்கவில்லை.
மிகவும் திறமை வாய்ந்த பாடகர். நல்ல குரல் வளம் கொண்டவர். அதன் பின் ரேஷ்மா வா வாத்தி
என்னும் பாடலை பாடினார். அதை தொடர்ந்து அத்தித்தோம் என்னும் பாடலை ஷக்தி பாடினார்.
இவர் திருச்சி லோகநாதனின் பேரன் என்பதை இங்கு
குறிப்பிட விரும்புகின்றேன். தனது தாத்தாவின் பாடலை சபையினர் கேட்டவுடன் பாடி மகிழ்வித்தார்.
மிகவும் கனமான குரல் வளம் கொண்ட சிறந்த பாடகர்.
முதல் பாதியில் நிறைய பழைய மற்றும் இடைக்கால பாடல்களை பாடினார்கள். விழியே கதை எழுது, காலங்களில் அவள் வசந்தம், நிலவே என்னிடம் நெருங்காதே, வானிலே தேனிலா, பாடவந்ததோர், ஒ மானே மானே, தங்கமகன் என பல இனிமையான பாடல்களை நான்கு பாடகர்களும் மிகவும் இனிமையாகவும் திறமையாகவும் பாடி அசத்தினர்.
இடை வேலையின் போது புட்டு கொத்து விற்கப்பட்டது.
இடைவேளையின் பின் புதிய பாடல்களையும் இடைகாலப் பாடல்களையும்
பாடி அசத்தினர். அதில் என் மனம் கவர்ந்த பாடல் ஆயிரம் தாமரை மொட்டுகளே. அடங்காத அசுரன்,
ரஞ்சிதமே, வாட்டர் பாக்கெட், புல்லட் எங்கேயும் எப்போதும். இதில் கோரஸ் இசையை ரேஷ்மாவும்,
சோனியாவும் மிகவும் திறமையாக வழங்கி இருந்தனர். 40 பாடல்கள் பாடப்பட்டது. எல்லா பாடல்களில்
வரும் கோரஸ் இசையை வழங்கியது இந்த பாடகர்கள் மட்டும் தான். பாடல்களையும் பாடி கோரஸும்
பாடி அசத்தினர்
நேர் விருப்பம் என்னும் ஒரு பகுதியை வைத்து இசை பிரியர்களின்
மனம் விரும்பிய பாடல்களை கேட்கும்படி சொன்னார்கள். பலர் தமது விருப்பமான பாடல்களை கேட்டார்கள்.
அநேகமான வேண்டுகோள்களை ஷக்தி மிகவும் திறம்பட பாடி மகிழ்வித்தார்.
இறுதியில் சோனியா ஒரு சிங்கள பைலா பாடலை பாடி சபையோரை எழுந்து
ஆட வைத்து விட்டார். தானும் மேடையில் இருந்து கீழே வந்து அவர்களுடன் ஆடியும் பாடியும்
அனைவரது பாராட்டையும் பெற்றார். அதை தொடர்ந்து குத்து medley யில் பல குத்து பாடல்களை
தொடர்ச்சியாக பாடி நிகழ்ச்சியை முடித்தார்கள்.
என்ன தான் பாடகர்களும் இசை வாத்திய கலைஞர்களும் பாடியும் இசையை வாசித்திருந்தாலும் ஒலி வழங்குபவர்கள் திறமையாக செய்யவில்லை என்றால் அந்த நிகழ்ச்சி சிறப்படையாது. எந்த வித பிசகும் இல்லாமல் மிகவும் திறமையாக ஒலியை வழங்கிய பத்மசிறி தலைமையிலான அபி மாஸ்டர் productions பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நல்லதொரு இசை நிகழ்ச்சியை கண்டு கழித்த சந்தோஷத்துடன், மன நிறைவுடன் வீடு திரும்பினோம். யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சிட்னி கிளையினர் மீண்டும் தம்மால் சிறந்த ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி காட்ட முடியும் என்று பெருமை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
No comments:
Post a Comment