தீபாவளி திரு நாள் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

  தீபாவளி பல்வேறுபட்ட மதத்தவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே இருந்து வருகிறது. வேறுபட்ட மதத்தவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய பெருங்கண்டம் பூராவும் ஒரே நேரத்தில் கொண்டாடும் விழா தீபாவளி. விழாக்கள் உழைக்கும் மக்களுக்கு புத்துணர்வும் புதுபொலிவும் அளிப்பவை. தீபாவளி என்ற வட மொழி சொல்லின் பொருள் வரிவரியாக விழக்குகளை ஏற்றி வைபதாகும்.  வாழ்வின் இருளை போக்கி புத்துணர்வு அளிப்பவை யாக கொள்ளப்படும். அறியாமை, பசி பட்டினி, மூடநம்பிகை என்ற இருளை போக்கி புது பொலிவு பெறும் நாளாக நாம் இன் நாளை கொள்ளலாம் அல்லவா.

              மிக பழமையான இதிகாசமான வால்மீகி இரமாயணத்திலே தீபாவளி கொண்டாடியதற்கான சான்றுகளை காண முடிகிறது. பல்வேறு சமுகமும் தீபாளியை அமோகமாக கோண்டாடிய போதும் தீபாவளி என்றதும் எம் மனதிலே தோன்றுவது புத்தாடையே. தமிழ் நாட்டிலே தீபாவளி கொண்டாடுவதை பார்த்து இரசித்தவள் நன். கடைத்தெரு வெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதும். துணி கடைகள் எல்லாம் வர்ண ஜாலமாக அலங்கரிக்க பட்டிருக்கும் இரவிலே ஜோதி மயமான அலங்கார விளக்குகள் கண்ணை பறிக்கும். அந்த சமயத்திலே காஞ்சி பட்டுக்கு அமோக மவசு. பெண்கள் எல்லோரும் எங்கே புடவை எடுக்கிறாய் என்பதே பேச்சாக இருக்கும். தீபாவளிக்காக புது மோஸ்தரிலே காஞ்சிபுரம் சேலைகள் விற்பனைக்கு வரும். அதை உடுத்தும் பெண்கள் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் வலம் வருவதுபோல காட்சி தருவார்கள். இத்தனை அழகையும் தம் கை வண்ணத்தில் தயாரிப்பவர்கள் காஞ்சி பட்டு நெசவாழிகளே. இந்த கால கட்டத்திலோ பட்சணங்களுக்கு குறையேது. யாவரும் இனிப்பு பட்சணங்களை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகழ்வார்கள். முறிந்த உறவுகளும் இனிய பட்சணங்களை பரிமாறுவதால் மீண்டும் இனிமையா தொடர வேண்டும் என்பதே இதன் ஐதீகம்.

             நான் எனது ஆசான் ஆன வழுவூர் இராமையா பிள்ளை வீட்டிலே தங்கி கற்ற போளுது தமிழக தீபாவளியை முற்றாக அறிந்து கொண்டேன். அண்று யாவரும் கருக்கலிலே எழுந்து விட வேண்டும். வீட்டு தலைவியான அம்மா நிரையாக அமர்ந்திருக்கும் யாவர் தலையிலும் எண்ணெய் வைப்பார். முதலிலே தோய்ந்தவர் எனது ஆசான். தோய்ந்தவர் நேராக வந்து மத்தாப்பு கொழுத்தினார். என்ன 65 வயதை தாண்டியவர் மத்தாப்பு கொழளுத்தி விழையாடுவதா?  என ஆச்சரியப்பட்டேன். காரணம் கூறப்பட்டது, கங்கை நீராடி எமது பாவங்களை களைந்து மத்தாப்பு கொழுத்தி ஒழி மயமான வாழ்வை வரவேற்கும் நன்நாளே தீபாவளி, அதனாலேயே மத்தாப்பு கொளுத்துவது. அன்றய குளியல் கங்கா ஸ்நானமாத கொள்ள ப்படும். ஒருவரை ஒருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா என கேட்டுக் கொள்வார்கள். குளிப்பது என்னவோ குளாய் நீரிலேதான்.                     

              மேலே உத்திரபிரதேச டெல்கி திபாவளியை பார்போமா? எமது நண்பர் பட்நாகர் குடும்பம் டெல்கியிலே வந்து தம்முடன் தீபாவளியை கொண்டாடுமாறு அழைத்தார்கள். இவர்கள் தீபாவளியை லக்க்ஷிமி பூஜையாக கொண்டாடுபவர்கள். இங்கு வீட்டுத்தலைவி தெய்வங்களின் படங்களை வரைந்து வைத்து அதற்கே நெய்வேத்தியமாக பட்சணங்களை படைத்து பூஜை நடை பெறும். எமது தோழி நன்றாகவே வரையும் திறன் படைத்தவர். அழகாக வரைந்திருந்தார். வரைய முடியாதவர் கலண்டர் போன்றவற்றில் இருந்து படத்தை எடுத்து தீபாவளிக்கான பூஜை தெய்வமாக கொள்வார்களாம். அன்று பூஜையில் வெள்ளி நாணயமோ தங்க நாணயமோ வைப்பார்கள், இவ்வாறு வைக்கப்படும் நாணயம் வீட்டு பெண் திருமணமாகி போகும் போது சகோதரனால் அந்த நாணயங்கள் சகோதரிக்கு பரிசாக வளங்கப்படும்.  வீட்டு வாசல் லக்ஷிமியை வரவேற்பதற்காக மலர் அலங்காரங்களுடன் தீபங்கள் ஏற்றி அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரவிலே லக்க்ஷிமி வந்து தம்மை ஆசீர்வதிபார், என்பதாகக்கொண்டு வாசல் கதவு திறந்தே வைக்கப்படும். இரவு எமக்கு ஒரு அதிர்சி ஏற்பட்டது, வீட்டில் உள்ள யவரும் இரவு பூராவும் விளித்திருந்து சீட்டாடுவார்களாம்.  நல்ல நாளில் இப்படி சீட்டாடுவதா என கேட்டபோது, சீட்டாடுவதை தீய பழக்கமாக வடநாட்டவர் கொள்வதில்லை. அன்று லக்ஷிமி பூஜை ஆனதால் கைகளிலே பணம் புரள வேண்டுமாம் என விளக்கம் கூறினார்கள். மேலும் உலகமாதாவான உமை அம்மை அன்றய நாளிலே சிவனுடன் கலந்து இன்பம் அனுபவித்தாரும் என்றும் அனுபவியாத இன்பத்தை அவர் அன்று உண்ர்ந்ததால், உலகில் யவரும் அன்றய நாளை இன்பமாக கொண்டாட வேண்டும் என ஆனையிடாராம். 

                                   சீக்கியரோ தலைபாகை அணிந்து கையிலே வெள்ளி காப்பை அணிதிருபார்கர்கள், இவர்கள் மத கொள்கையாக ஆண்கள் கத்தி வைத்திக்கவேண்டும். பஞ்சாப் பிரதேச வாசிகள். இவர்கள் மத தலைவர்களில் ஒருவரான கர் கோவிந் சிங் குவாலியூர் சிறையில் இருந்து விடுதலையாகி தங்கக்கோயிலுக்கு வந்த நாளம் தீபாவளி நாள். ஆதனால் அவரை வரவேற்க வரிவரியாக தீபங்களை கொண்டு அலக்கரிக்கப்பட்டது. அதன் ஞாபகமாக வருடாவருடம் தீபாவளியை தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடுவார்கள்.

           ஒரு தீபாவளிக்கு நாம் வங்கத்திற்கு போய்இருந்தோம். வங்காளிகள் காளியையே வணங்குபவர்கள். அங்கு ஊர் பூராவும் பந்தல்கள் அமைத்து ஆள் உயர அம்மை சிம்ம வாகனம் ஏறி மகிஷனை கொல்லும் கோலத்திலே காட்சி கொடுப்பாள். அம்மைக்கு பூஜை ஆராத்தி நடைபெறும். பக்தர்களுக்கு தொன்னையிலே பிரசாதம் வளங்கப்படும். மாலையில் தெரு எல்லாம் மின் விளக்கு அலங்காரங்களாக ரம்மியமாக இருக்கும். பந்தலிலே பல வகை கலை நிகழ்சிகள் நடை பெறும். ஊரே விழா கோலம்பூட்டிருக்கும்.                         

இந்தியாவோ வேறுபட்ட பிரதேசத்தை கொண்ட பரந்த பூமி. கலாசாரத்தாலும் சுவாத்தியத்தாலும் வேறுபட்ட மக்களை கொண்டது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அதன் அடையாளமாக விளங்குவது இந்த தீபாவளியா? என எண்ணத் தோன்றுகிறது. றாஜஸ்தான் மானில்தில் வாழும் மக்கள் மார்வாடிகள். இவர்கள் ஜைன மதத்தவர். கொல்லாமையை கடைபிடிப்பவர்கள். ஈ எறும்பு போன்றவற்றையுமே கொல்லாதவர்கள். இவர்களே எமது நாயன்மார்களுடன் வாத பிரதி வாதங்களிலே ஈடு பட்டவர்கள். எமது நூல்களிலே சமணர் என வர்ணிக்கப் படுபவர்கள். இவர்களும் தீபாவளியை கொண்டாடுவார்கள். இவர்கள் மத ஸ்தாபகரான மகாவீர் அவர்கள் நிர்வானம் அடைந்த நாளே இது என அவர்களும் தீபாவளி தினத்தை தீப அலங்காரங்களுடனே கொண்டாடுவார்கள்.        

              வால்மீகி ராமாயணத்திலே ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாழ்விலே இராவணனை கொண்டு, சீதா பிராட்டியுடனும் தம்பி இலக்குவனுடனும் நாடு திரும்பும் போது மக்கள் தீபங்களை கொண்ட

அலங்காரங் களுடன் அவரை வரவேற்றனர் என் கூறப்படுகிறது.

அதையே அவர்கள் தீபாவளியாக கொணண்டாடுகிறார்கள்.

             தீபாவளியோ விரத அனுடானங்கள் எதுவுமே இல்லாது யாவராலும் குதூகலமாக கொண்டாடப்படும் விழாவாகும். இதற்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது.  இந்த காலம் இருண்ட மழை காலம், பூச்சி புழுக்கள் கொசு நிறைந்த காலம்,அவற்றின் உபாதையில்  இருந்து நிவாரணம் தேடவே தீபங்களை எரித்து பட்டாசுகளை கொளுத்துவதால்ஆகும். அவ்வாறு செய்வதால் இவற்றை ஓர் அளவு தடுகலாம். அதன் பொடுட்டு ஆரம்பமானதே, தீயை எரிக்கும் விளாவான தீபாவளி என்ற, விளக்கமும் உண்டு.

               எது எப்படியோ எத்தனையோ விளக்கமும் கூறலாம். இண்றோ தீபாவளி உலகம் பூரவும் வாழும் இந்திய பின்னணியை கொண்டவர் தாம் வாழும் நாடுகளிலும் அமோகமாக கொண்டாடுகிறார்கள். அந்த நாடுகளில் அவர்களின் அரசியல் பங்களிப்புக்களால், அந்த அந்த நிடுகளினின் பல முக்கிய கட்டடங்கள். தீபாவளிக்காக விசேஷ தீப அலங்காரங்களுடனு காட்சி தருகிறது. ரிஷி ஸனோக்கை பிரதமராக கொண்ட,பிருதானிய பிரதமர் வாசஸ் தலமானா 10 டவுனிங் ஸ்ரீட்டிலும்  சம்பிர தாயமாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டடப்பட்டது. இனியும் என்ன விளக்கம் நாமும் தீபாவளியை அமோகமாக கொண்டாடுவோமே.

 

No comments: