தீபாவளி பல்வேறுபட்ட மதத்தவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே இருந்து வருகிறது. வேறுபட்ட மதத்தவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய பெருங்கண்டம் பூராவும் ஒரே நேரத்தில் கொண்டாடும் விழா தீபாவளி. விழாக்கள் உழைக்கும் மக்களுக்கு புத்துணர்வும் புதுபொலிவும் அளிப்பவை. தீபாவளி என்ற வட மொழி சொல்லின் பொருள் வரிவரியாக விழக்குகளை ஏற்றி வைபதாகும். வாழ்வின் இருளை போக்கி புத்துணர்வு அளிப்பவை யாக கொள்ளப்படும். அறியாமை, பசி பட்டினி, மூடநம்பிகை என்ற இருளை போக்கி புது பொலிவு பெறும் நாளாக நாம் இன் நாளை கொள்ளலாம் அல்லவா.
மேலே உத்திரபிரதேச டெல்கி திபாவளியை பார்போமா? எமது நண்பர் பட்நாகர் குடும்பம்
டெல்கியிலே வந்து தம்முடன் தீபாவளியை கொண்டாடுமாறு அழைத்தார்கள். இவர்கள் தீபாவளியை
லக்க்ஷிமி பூஜையாக கொண்டாடுபவர்கள். இங்கு வீட்டுத்தலைவி தெய்வங்களின் படங்களை வரைந்து
வைத்து அதற்கே நெய்வேத்தியமாக பட்சணங்களை படைத்து பூஜை நடை பெறும். எமது தோழி நன்றாகவே
வரையும் திறன் படைத்தவர். அழகாக வரைந்திருந்தார். வரைய முடியாதவர் கலண்டர் போன்றவற்றில்
இருந்து படத்தை எடுத்து தீபாவளிக்கான பூஜை தெய்வமாக கொள்வார்களாம். அன்று பூஜையில்
வெள்ளி நாணயமோ தங்க நாணயமோ வைப்பார்கள், இவ்வாறு வைக்கப்படும் நாணயம் வீட்டு பெண் திருமணமாகி
போகும் போது சகோதரனால் அந்த நாணயங்கள் சகோதரிக்கு பரிசாக வளங்கப்படும். வீட்டு வாசல் லக்ஷிமியை வரவேற்பதற்காக மலர் அலங்காரங்களுடன்
தீபங்கள் ஏற்றி அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரவிலே லக்க்ஷிமி வந்து தம்மை ஆசீர்வதிபார்,
என்பதாகக்கொண்டு வாசல் கதவு திறந்தே வைக்கப்படும். இரவு எமக்கு ஒரு அதிர்சி ஏற்பட்டது,
வீட்டில் உள்ள யவரும் இரவு பூராவும் விளித்திருந்து சீட்டாடுவார்களாம். நல்ல நாளில் இப்படி சீட்டாடுவதா என கேட்டபோது, சீட்டாடுவதை
தீய பழக்கமாக வடநாட்டவர் கொள்வதில்லை. அன்று லக்ஷிமி பூஜை ஆனதால் கைகளிலே பணம் புரள
வேண்டுமாம் என விளக்கம் கூறினார்கள். மேலும் உலகமாதாவான உமை அம்மை அன்றய நாளிலே சிவனுடன்
கலந்து இன்பம் அனுபவித்தாரும் என்றும் அனுபவியாத இன்பத்தை அவர் அன்று உண்ர்ந்ததால்,
உலகில் யவரும் அன்றய நாளை இன்பமாக கொண்டாட வேண்டும் என ஆனையிடாராம்.
ஒரு தீபாவளிக்கு நாம் வங்கத்திற்கு போய்இருந்தோம். வங்காளிகள் காளியையே வணங்குபவர்கள். அங்கு ஊர் பூராவும் பந்தல்கள் அமைத்து ஆள் உயர அம்மை சிம்ம வாகனம் ஏறி மகிஷனை கொல்லும் கோலத்திலே காட்சி கொடுப்பாள். அம்மைக்கு பூஜை ஆராத்தி நடைபெறும். பக்தர்களுக்கு தொன்னையிலே பிரசாதம் வளங்கப்படும். மாலையில் தெரு எல்லாம் மின் விளக்கு அலங்காரங்களாக ரம்மியமாக இருக்கும். பந்தலிலே பல வகை கலை நிகழ்சிகள் நடை பெறும். ஊரே விழா கோலம்பூட்டிருக்கும்.
இந்தியாவோ வேறுபட்ட பிரதேசத்தை கொண்ட பரந்த பூமி. கலாசாரத்தாலும் சுவாத்தியத்தாலும் வேறுபட்ட மக்களை கொண்டது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அதன் அடையாளமாக விளங்குவது இந்த தீபாவளியா? என எண்ணத் தோன்றுகிறது. றாஜஸ்தான் மானில்தில் வாழும் மக்கள் மார்வாடிகள். இவர்கள் ஜைன மதத்தவர். கொல்லாமையை கடைபிடிப்பவர்கள். ஈ எறும்பு போன்றவற்றையுமே கொல்லாதவர்கள். இவர்களே எமது நாயன்மார்களுடன் வாத பிரதி வாதங்களிலே ஈடு பட்டவர்கள். எமது நூல்களிலே சமணர் என வர்ணிக்கப் படுபவர்கள். இவர்களும் தீபாவளியை கொண்டாடுவார்கள். இவர்கள் மத ஸ்தாபகரான மகாவீர் அவர்கள் நிர்வானம் அடைந்த நாளே இது என அவர்களும் தீபாவளி தினத்தை தீப அலங்காரங்களுடனே கொண்டாடுவார்கள்.
வால்மீகி ராமாயணத்திலே ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாழ்விலே இராவணனை கொண்டு,
சீதா பிராட்டியுடனும் தம்பி இலக்குவனுடனும் நாடு திரும்பும் போது மக்கள் தீபங்களை கொண்ட
அலங்காரங் களுடன் அவரை வரவேற்றனர் என் கூறப்படுகிறது.
அதையே அவர்கள் தீபாவளியாக கொணண்டாடுகிறார்கள்.
தீபாவளியோ விரத அனுடானங்கள் எதுவுமே இல்லாது யாவராலும் குதூகலமாக கொண்டாடப்படும் விழாவாகும். இதற்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது. இந்த காலம் இருண்ட மழை காலம், பூச்சி புழுக்கள் கொசு நிறைந்த காலம்,அவற்றின் உபாதையில் இருந்து நிவாரணம் தேடவே தீபங்களை எரித்து பட்டாசுகளை கொளுத்துவதால்ஆகும். அவ்வாறு செய்வதால் இவற்றை ஓர் அளவு தடுகலாம். அதன் பொடுட்டு ஆரம்பமானதே, தீயை எரிக்கும் விளாவான தீபாவளி என்ற, விளக்கமும் உண்டு.
No comments:
Post a Comment