பார் போற்றிட வாழ்வாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)


உன்றன் வழிதான் ஒழுக்கமாய் என்றும் அமைந்தே இருந்திடில் உன்னைப் போற்றும் உலகம்தான், பொன்னைப் போன்றே பொலிந்திடு! (1) உன்றன் எண்ணமும் உயர்வாய் என்றும் நிலைத்தே இருந்திடில், நன்றே செய்வாய் நாட்டினிற்கே நன்மை எங்கும் நிலைத்திட! (2) தன்னலம் தன்னைத் தவிர்த்தே நன்றாய் பிறர்நலம் நாடுவோர் இன்றும் எம்மிடை இருக்கின்றார் நன்றே அவர்வழி நடந்திடு! (3) நிலமகள் அளித்தநல் லறிவே உலகினில் காக்குமே உன்னையும் உலகிலுன் மாண்பை உயர்த்திநீயும் நிலமதில் வாழ்வாய் நீடு! (4)

No comments: