உழைப்பாலே
இவ்வுலகில் உயர்ந்தோரும் பலருண்டே!
உழைப்போரை
நெருங்காதே ஒருநோயும் உணர்வீரே!
பிழைப்பிற்கே
உழைப்போரும் பெருமளவில் உள்ளாரே!
உழைப்பொன்றே
உறுதியினை உடலுக்கும் தந்திடுமே! (1)
வருமுன்னர்
காத்திடுவீர் வாராமல் நோய்களுமே!
மருந்துகளும்
தேவைதானே மாளாத நோயென்றால்!
அருமருந்தே
உடற்பயிற்சி அறிந்திடுவீர் வாழ்வினிலே!
மருந்துடனே
உடலுழைப்பும் மக்களைத்தான் காத்திடுமே!
(2)
தடுப்பூசி
என்பதுவும் தவறில்லை உணர்வாயே!
அடுக்கடுக்காய்
வருகின்ற அரியநோயும் அடங்கிடுமே!
எடுத்திடுவீர்
தடுப்பூசி எதிர்த்திடவே நோய்களையே!
விடுபடுவோம், வெற்றியினை விளைத்திடுவோம் ஒன்றுபட்டே! (3)
----------------------------
No comments:
Post a Comment