ஹைக்கூ கவிதை


-சங்கர சுப்பிரமணியன்.





மல்லிகை மலர்கள்
உதிர்ந்து மண்ணில் விழுகின்றன
மணம்பரப்ப மறப்பதில்லை

வரப்பில் நடக்கிறான்
சகதியில் விழுந்து நெளிகிறான்
மண்புழுக்கள் மடிகின்றன

கரைமோதும் அலைகள்
கரைக்கு வந்து செல்கின்றன
இருக்கத்தான் மனமில்லை

சிலந்தி வீடுகட்டுகிறது
பூச்சி வந்து சிக்குகிறது
வாழுமிடம் உயிரெடுக்கிறது

அற்பனுக்கு வாழ்வுவரும்
நள்ளிரவில் குடை பிடிப்பான்
மழையேதும் பெய்யாது

கடவுளுக்கு பாலபிசேகம்
கடவுள் தலையில் பால்
பூசாரி காலிலும்



No comments: