இலங்கைச் செய்திகள்

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது ; வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் தடைகளை விதிக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி இன்று ஆரம்பம் !

தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல,இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ –என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர்



இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

Published By: Digital Desk 3

28 Mar, 2025 | 11:03 AM

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 முதல் 4 ஆம் திகதிகளில் தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் பங்கேற்க உள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 




50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

Published By: Digital Desk 2

27 Mar, 2025 | 07:18 PM

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார்.

 தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு  தைராய்டு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ்  தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம்  தைராய்டு  தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம்  ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

தைராய்டு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார்.  நன்றி வீரகேசரி 

 


இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது ; வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் தடைகளை விதிக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Published By: Rajeeban

27 Mar, 2025 | 10:48 AM

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது..

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிஇயக்குநர் மீனாக்ஷி கங்குலி இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு போரின்போது அட்டுழியங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டநால்வருக்கு எதிராக தடைகளைவிதித்துள்ளதன் மூலம் பிரிட்டன் பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.

1983 முதல் 2009ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது இரு தரப்பும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்கள்யுத்த குற்றங்களில் ஈடுபட்டன.

எனினும் தொடர்ந்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை மறைப்பதற்கும்,அதற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்கும் முயற்சிசெய்துள்ளனர்.

சமூகத்தின் மீது தொடர்ந்து தாக்கத்தை செலுத்தும,மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறல் உட்பட, இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகாரசெயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பயணத்தடை சொத்துக்களை முடக்குதல் ஆகியநடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்டவர்களில் யுத்தத்தின் இறுதியில் 58வது படைப்பிரிவிற்கு தலைமைதாங்கிய ஓய்வுபெற்ற ஜெனரல்சவேந்திர சில்வாவும் உள்ளார்.பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் தமிழ்மக்களை கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.2025 ஜனவரி முதலாம் திகதி இவர் பாதுகாப்பு படை பிரதானியாக பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றார்.

தடை விதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி  வசந்த கரணாகொட.2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் இலங்கை கடற்படையால் இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு இவரை வடமேல்மாகாண ஆளுநராக்கியது.சில்வா கரணாகொட இருவருக்கும் எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்துள்ளது

.முன்னாள் இராணுவதளபதி ஓய்வுபெற்ற ஜகத்ஜெயசூரிய வவுனியாவின் ஜோசப் முகாமிற்கு பொறுப்பாகயிருந்தவர்,இங்கு பலர் சித்திரவதைகள், பாலியல்வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கேணல் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க தளபதி அந்த அமைப்பிலிருந்து விலகி, அரசசார்பு துணை இராணுவப்படையை2004 இல்உருவாக்கினார்.இரணடு தரப்பிற்காகவும் இவர் சிறுவர்களை படையணியில் சேர்த்தார் 

படுகொலைகளில் ஈடுபட்டார், யுத்தத்தின் பின்னர் இவர் அரசாங்க அமைச்சரானார்.

ஐக்கிய இராச்சியத்தின் தடைகளிற்கு புதன்கிழமை பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாகவே முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் அதனை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையி;ல் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, ஆதாரங்களை சேகரிப்பதற்கான தொடர்தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய இணைத்தலைமை நாடுகளில் பிரி;ட்டனும் ஒன்று.

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது.   







ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி இன்று ஆரம்பம் !

Published By: Digital Desk 2

29 Mar, 2025 | 07:15 PM
image

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பளமானது இவ்வளவு காலமும் குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் உப்பு தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக இன்றில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படவுள்ளது.

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடற்தொழில்  அமைசர் இராமலிங்கம் சந்திரசேகரன்,  பா.ம.உறுப்பினர் இளங்குமரன், வட மாகான ஆளுனர் நா. வேதநாயகன்,  மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.   

நன்றி வீரகேசரி 









தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல,இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ –என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர்

Published By: Rajeeban

29 Mar, 2025 | 05:49 PM
image

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

வலிகாம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை,இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டுவாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது

இராணுவம் அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பெரிய விகாரையை கட்டியுள்ளது,அது தொடர்பில் நாங்களிள் ஆளுநரிடம் போயிருக்கின்றோம். முன்னைய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் போயிருக்கின்றோம்.

இது முன்னைய அரசாங்கங்கள் இனவாதமாக செயற்பட்ட விடயம் என நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் தெரிவித்திருந்தீர்கள்-இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

எமது ஆட்சியில் இது இடம்பெறாது என  எமக்கு வாக்குறுதிகள் தந்திருந்தீர்கள்.

ஆளுநரும் அறிக்கை எழுதுகின்றார் எழுதுகின்றார் இன்றுவரை எழுதிமுடியவில்லை.

கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.

அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?

பிரதேச செயலகம் தொடர்பாகவோ அல்லது இந்த பிரதேசத்திலிருந்து மக்கள் தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட தாங்களோ இது தொடர்பாக அறிந்திருக்கின்றீர்களா அல்லது இன்றுவரை இது தொடர்பில் எதுவும் தெரியாது என்ற பதிலைதான் கூறப்போகின்றீர்களா?

இது தொடர்பான நடவடிக்கை என்ன கட்டத்தில் உள்ளது என்பதை இந்த இடத்தில் மக்களிற்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை,இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டுவாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது,

இதற்கு உடனடியாக தீர்வைதரவேண்டும், இது சம்பந்தமாக தங்கடை பதிலை தரவேண்டும்.

நீங்கள் சட்டத்தினால் செய்ய முடியும் என தெரிவிக்கின்றீர்கள் எங்களிற்கு இந்த நாட்டின் சட்டத்திலேயோ நீதியிலோ நம்பிக்கை இல்லை.நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட பல விடயங்களை ஏதேச்சதிகாரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்,நாங்கள் குறுந்தூர் மலையை உதாரணமாக பார்க்கலாம், மேலதிக கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லியும்,கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள், சட்டத்திடம் அந்த பிரச்சினையை விட்டுவிட்டால் பின்னர் அதனை பொதுவெளியில் கதைக்க முடியாது.

அதனை விடு;த்து ஏன் நீங்கள் மற்றபக்கமாக பார்க்ககூடாது சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவோ அல்லது பௌத்தசாசன அமைச்சோ நாங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றோம் என சிறையில் போடலாம் ஏன் போடவில்லை,உங்கள் பக்கத்தில் உறுதிகளோ ஆவணங்களோ இல்லை என்று நிச்சயமாக தெரிந்தும் வழக்கு தொடரகோருகின்றார்கள் என்றால்,உங்களுக்கு நன்கு தெரியும் அந்த இடத்தில தீர்ப்பொன்று வரும்போது நீங்கள் அதிகாரதுஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு உங்களிற்கு சார்பாக சட்டத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான் வழக்கிற்கு கூப்பிடுகின்றீர்கள்.

உங்களிடத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லை எங்களிடத்தில் உறுதி இருக்கின்றது ஏன் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டும்.

பிரதேச செயலகத்தில், கச்சேரியில் சகல ஆவணங்களும் உள்ளன. ஆதனை எடுத்துபாhருங்கள், காணி அமைச்சின் ஊடாக இந்த பிரச்சினையை தீருங்கள்.    நன்றி வீரகேசரி 






No comments: