தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்
ஓயாமல் இருப்பாள் உழைப்பினை நல்குவாள்
சேயாய் இருப்பாள் சேவகி ஆகுவாள்
அவளே அவனியில் ஒளிவிளக் காவாள்
மகளிர் என்றுமே மகத்துவம் ஆவர்
மாநில வரமாய் வாய்த்தவர் மகளிர்
மண்ணின் பொறுமை மகளிர் பொறுமை
எண்ணிடும் வேளை கண்ணே மகளிர்
வீட்டினை ஆழ்கிறார் நாட்டினை ஆழ்கிறார்
விஞ்ஞான உலகில் விந்தைகள் செய்கிறார்
கல்வியில் உயர்கிறார் கண்ணியம் காக்கிறார்
நாட்டைக் காக்கிறார் வீட்டைக் காக்கிறார்
நல்லன கண்டு அல்லன ஒதுக்கிறார்
சத்தியம் காக்கிறார் சன்மார்க்கம் உரைக்கிறார்
இத்தரை வியக்க விளங்கிறார் மகளிர்
பக்குவம் பண்பின் வடிவம் மகளிர்
பாசம் நேசம் மிக்கவர் மகளிர்
இத்தரை யாவரும் போற்றிடும் வகையில்
இருக்கிறார் மகளிர் இமயமாய் என்றும்
No comments:
Post a Comment