கவியரசு கண்ணாதாசனின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு , நேற்று ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதி மாலை விக்ரோரியா
கேசி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் காணொளி நினைவுப்பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூத்தோர் முற்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
வழமையான இந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது, கடந்த வாரத்தைப்போன்று எழுத்தாளர் திரு. ஆவூரான் சந்திரன் தனது கேசி தமிழ் மன்ற வானொலி நிகழ்ச்சியாக ஒருங்கமைத்து வழங்கும் பொங்கும் பூம்புனல் நிகழ்வுடன் கண்ணதாசன் நினைவுப்பகிர்வு ஆரம்பமானது.

அவரது உரையைத் தொடர்ந்து, ஆவூரான் சந்திரன், கண்ணதாசன் பற்றிய பல தகவல்களை , கேள்வி - பதில் மூலமாக அவரிடமிருந்து வெளிவரச்செய்து அனைவரும் அறியும்படி இந்நிகழ்ச்சியை தொய்வின்றி ரசித்து மகிழும் வண்ணம் நடத்தினார்.
இருபத்தேழு அங்கத்தவர்களுடன் இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஆவூரான் சந்திரனுக்கு பாடல்கள் தொகுத்துக் கொடுப்பதற்கு செல்வன் ஆரூரன் மதியழகன் துணையாற்றினார்.
இந்த இளம் தலைமுறைக்கும் அனைவரும் கைதட்டல் மூலம் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியைத் தரமாக தொகுத்து வழங்கிய திரு. ஆவூரான் சந்திரன் அவர்களையும், கண்ணதாசன் பற்றிய பல விடயங்களையும் தங்குதடையின்றி அள்ளி வழங்கிய திரு . முருகபூபதி அவர்களையும் அங்கத்தவர்கள் அனைவரும் பாராட்டி தமது நன்றிகளையும் கூறினர்.
அங்கத்தவர்கள், “ மீண்டும் அடுத்த காணொளி ஒன்றுகூடலில் சந்திப்போம் “ எனக்கூறி கண்ணதாசன் பாடல்களின் நினைவுகளைச் சுமந்த வண்ணம் முற்றத்திலிருந்து விடைபெற்றனர்.
No comments:
Post a Comment