-சங்கர சுப்பிரமணியன்.
லிமரைக்கூ கவிதை: (ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில் வரும் லிமரிக் கவிதையை தமிழில் மூன்று மற்றும் ஐந்து அடிகளில் லிமரைக்கூ கவிதைகளாக விஞர்கள் எழுதினர். இது சென்ரியு போல் தோன்றினாலும் சிந்திக்க வைக்கும்.)
பறக்குது பட்டம் வாலுடன்
வாலில்லா மனிதர்களும் பறக்கிறார்கள்
வாலுள்ளபறவை தத்துகிறது
நிறைமாத கர்ப்பிணி துடிக்கிறாள்
கண்ணெதிரில் தனியார் மருத்துவமனை
பணமிருந்தால் துடித்திருக்கமாட்டாள்
காந்தியோ நேர்மையின் அடையாளம்
வராதபணத்தை காந்தி கணக்கென்பர்
சிரித்தாள் சிந்தை தள்ளாடினேன்
கையிலிருந்த பணத்தை இழந்துவிட்டேன்
சிரிப்பாய் சிரித்து என்பிழைப்பு
மீனின்துடுப்பை மீனே இயக்கும்
படகின் துடுப்பை படகே இயக்காது
ஒட்டியிருந்தால் உதவி தேவையில்லை
கனவில் வந்தவளால் செலவில்லை
நனவில் வந்தவளால் அதிகச்செலவானது
காரணம் என்னவெனில் நித்திரைதான்
No comments:
Post a Comment