July 21, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் நீதிமன்ற சச்சரவு எதிர் பார்த்தது போன்று முடிவுறவில்லை – இலகுவில் முடிவுறுமா? இந்தக் கேள்வி தொடர்பில் கட்சியினரும் அச்சம் கொண் டிருக்கின்றனர். கட்சிக்கான புதிய தலைவர் தெரிவைத் தொடர்ந்து கட்சிக்குள் மிகவும் தெளிவாகவே இரண்டு அணிகள் உருவாகிவிட்டன.
அது மிகவும் வெளிப்படை யானது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை எதிர்கொள்ளுவதில் பிளவு தெளிவாகவே தெரிந்தது. தற்போதுள்ள சூழலில், பாராளுமன்ற தேர்தலை முன்னர் போன்று கட்சியால் எதிர்கொள்ள முடியுமா என்னும் கேள்வியுமுண்டு. ஒப்பீட்டடிப் படையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள கட்சியென்னும் தகுதிநிலையும் முன்னர் போன்றில்லை.
இந்த நிலையில் தனித்து தேர்தலை எதிர்கொண்டால் முன்னர் போல் கட்சியால் வெற்றியை தக்கவைக்க முடி யுமா என்னும் கேள்வியுமுண்டு. தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைமை ஒரு விட யத்தை தெளிவுபடுத்துகின்றது – அதாவது, தமிழ் தேசிய அரசியல், தனிநபர்களின் பதவி நிலைப் போட்டிகளுக்குள் சிக்கியிருக்கின்றது.
இதற்கு தமிழரசு கட்சியின் இன்றைய நிலைமை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழரசு கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளுமே சில நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக் கின்றன. குறித்த தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப் புக்களை அடிப்படையாகக் கொண்டே கட்சிகளின் எதிர் காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அடிப்படையில் இது ஒரு அரசியல் பலவீனம். ஏனெனில் அரசியல் கட்சிகள் என்பது, மக்களை வழிநடத்துவதற்கான அரசியல் ஸ்தாபனங்கள். ஆனால், தமிழ் சூழலில் இயங்கிவரும் கட்சிகள் எவையுமே, மக்களுக்கான அரசியல் ஸ்தாபனங்களாக இல்லை.
இவ்வாறானதொரு நிலையில்தான் தமிழரசு கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அடுத்த தேர்தலை கட்சி எதிர்கொள்ள முடியுமா என்னும் கேள்வி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கட்சி முற்றிலுமாக முடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கட்சியின் நிலைப்பாட்டை, கட்சியாக ஒன்றுபட்டு தீர்மானிக்க முடியுமாக இருக்குமானால், அந்தக் கட்சி ஏற்கனவே செயலிழந்துவிட்டது. இந்த நிலையில், தமிழரசு கட்சியின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவசரமாக தீர்மானிக்க வேண்டும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment