ஆஸியில் ஆன்மிகத் தொடர் பேருரை நிகழ்த்த வரும் "சித்தாந்த கலாநிதி" திரு கி.சிவகுமார் பேசுகிறார்

 "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E


அவர்களது தொடர் பேருரைகள் 

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பெர்த் ஆகிய ஆஸ்திரேலிய மாநகரங்களில் 04-12-2022 முதல் 25-12-2022 வரை
நிகழவுள்ளது.



சிவமயம்

 

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற

எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்

கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.

 

-              ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்

 

சிவனடியார்கட்கு வணக்கங்கள்,

 

ஹெலென்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலயத்தில் 04/12/2022 அன்று  காலை 8:00 மணி முதல் நடைபெறவுள்ள பத்தாவது   திருத்தொண்டர் விழாவினை சிறப்பிக்குமுகமாக

இறைவனருளால் "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E. அவர்களை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலய நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து “சித்தா

 

ந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E. அவர்களது தொடர் பேருரைகள் ஆஸ்திரேலிய மாநகரங்களான சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் கீழ் காணும் தினங்களில் நடைபெறவுள்ளன.

 

1) 04/12/2022 முதல் 11/12/2022 வரை சிட்னி முருகன் கோவிலும் ஹெலென்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலயமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள "சிவத்தமிழ் பேருரைகள்" - முழு விபரங்கட்கு இணைப்பினை பார்க்கவும்.

 

2) 12/12/2022 முதல் 18/12/2022 வரை விக்டோரியா சைவ சித்தாந்த மையமும் ஹெலென்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலயமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள "சைவத்தமிழ் பேருரைகள்" - முழு விபரங்கட்கு இணைப்பினை பார்க்கவும்.

 

3) 20/12/2022 முதல் 25/12/2022 வரை பெர்த் சிவன் கோவிலும் ஹெலென்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலயமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள "ஞானத்தமிழ் பேருரைகள்" - முழு விபரங்கட்கு இணைப்பினை பார்க்கவும்.

 

இலவச அனுமதியுடன் நடைபெறும் இவ்வரிய நிகழ்வுகளில் அனைவரும் பங்குபற்றி இறையருள் பெறுவோம் - இச்செய்தியினை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வோம்.

 

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

No comments: