அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
கைவிடப்பட்ட நிலையில் மொனராகலை தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள்
மலையகத்தின் விடிவௌ்ளி
ஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்
ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்
மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்
மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்
அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை
ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சொந்த ஊருக்கு
கொட்டகலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்
சுகாதார விதிமுறை பேணி ஆறுமுகன் தொண்டமானின் நல்லடக்கம்
மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்தே உள்ளன
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சொந்த ஊருக்கு
கொட்டகலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்
சுகாதார விதிமுறை பேணி ஆறுமுகன் தொண்டமானின் நல்லடக்கம்
மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்தே உள்ளன
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
Tuesday, May 26, 2020 - 9:12pm
- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி


அவர், திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு காலமானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1964ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் சௌமியமூர்த்தி ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான், மரணிக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.
1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆறுமுகன் தொண்டமான், 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதுடன் அதன் பின்னர் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றதுடன் கடந்த காலங்களிலும் தற்போதும் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1993ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த அவர், பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்தார்.

அந்த வகையில் அவர் இறுதியாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார். நன்றி தினகரன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இன்று (26) மாலை பத்தரமுல்லையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து திடீரென சுகவீனமுற்ற அவர், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று பிற்பகல் சந்தித்திருந்தார்.
இது தொடர்பில் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இடப்பட்டுள்ளதோடு அதில்,
"இதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1964ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் சௌமியமூர்த்தி ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான், மரணிக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.
1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆறுமுகன் தொண்டமான், 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதுடன் அதன் பின்னர் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றதுடன் கடந்த காலங்களிலும் தற்போதும் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1993ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த அவர், பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்தார்.

அந்த வகையில் அவர் இறுதியாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார். நன்றி தினகரன்
கைவிடப்பட்ட நிலையில் மொனராகலை தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள்
Tuesday, May 26, 2020 - 11:22am
வைப்பக படம்
மொனராகலை மாவட்டத்தில் காணப்படும் பெருந்தோட்டங்களில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக அரசியல் அநாதைகளாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். ஆடிக்காத்துப் போன்று எப்போதாவது தமிழ் அரசியல் தலைவர்கள் இங்கு வந்துச் செல்வது மற்றுமே வாடிக்கையாகும்.
இவ்வாறான பின்புலத்தில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராகவிருந்த பழனி திகாம்பரம், சில வீடமைப்புத் திட்டங்களை மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் ஆரம்பித்திருந்தார்.
கும்புக்கனை, பாராவிலை, வெள்ளச்சிக்கடை, நக்கல, மரகலை மற்றும் முப்பனவெளி போன்ற தோட்டப்பகுதியில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஏறத்தாழ 80 வீடுகள் இந்த வேலைத்திட்டங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட போதும் அதில் 30 வீடுகள் மாத்திரமே இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளும் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டவையாக இல்லை.
மொனராகலை தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற முதல் சலுகையாகவும் அபிவிருத்தித் திட்டமாக இது கருதப்பட்டபோதும் இன்று அந்த விடயமும் முழுமைப்பெறாமையால் இந்த மக்கள் கவலலையடைந்துள்ளனர்.
பாதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இவ் வீடமைப்புத் திட்டங்களுக்கு பொறுப்புக்கூறப் போவது யார்? என்ற வினாவுக்கு விடை தெரியாது மக்கள் புலம்புகின்றனர். இங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடம் பழமை வாய்ந்த அதே லயன் அறைகளிலே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். எந்த வித அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு செய்துகொடுக்கப்படுவதில்லை. இங்குள்ள தோட்டங்களுக்கான பாதைகள் புனரiமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால் பல கிலோ மீற்றர் கால்நடையாகவே தங்களது பயணங்களை இவர்கள் மேற்கொள்கின்றார்கள். இது பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல.
ஆகவே துறைசார்ந்தவர்கள் மொனராகலை மாவட்ட தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளுமாறும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டங்களை முழுமைப்படுத்தி தமக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய தோட்ட உட்கட்டமைபபு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(மொனராகலை நிருபர்) - நன்றி தினகரன் மலையகத்தின் விடிவௌ்ளி
Wednesday, May 27, 2020 - 7:56am
மலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.
இவர் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகவும் ஒரு வருடத்துக்கு பின்னர் 1994 இல் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இதே 1994 ஆம் ஆண்டில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு 75,000 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இது அவரின் அரசியலில் முதலாவது பிரவேசம் எனலாம்.
1999 இல் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் காலஞ்சென்ற பின் அவர் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குராமதுங்கவுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு அமரர் தொண்டமானின் வெற்றிடத்தை திருப்திகரமாக நிறைவு செய்தார்.
2000 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற அவர் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையினூடாக 20% சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தார்.
2000 ஆம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு முதல் முறையாக போட்டியிட்டாலும் கூட பாராளுமன்ற தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்று அவ்வரசிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக இ.தொ.கா. விளங்கியது. இப்பாராளுமன்றத்தில் 17வது யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது முதல் முறையாக இந்திய வம்சாவளி மக்கள் ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை நிலைநாட்டினர்.
2001 ஆம் ஆண்டு ஐ.தே.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு அந்த அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பெற்று அரசிலே ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக விளங்கினார்.
2002 ஆம் ஆண்டில் மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 121/= ரூபாவாக இருந்த நாட் சம்பளத்தை 147/= ரூபாவாக உயர்த்தினார்.
இதைத் தொடர்ந்து அரசாங்கம் தனியார் துறைக்கு அறிவித்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஹற்றன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். இப்போராட்டத்தை ஏளனமாக நோக்கிய எதிரணியினர் கூட இறுதியில் போராட்டத்தில் தாமும் பங்குகொள்ள முன்வந்தனர். இப்போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2003 ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிரஜாவுரிமை விடயத்தில் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களையும் இலங்கை பிரஜைகளாக அங்கீகரிக்கும் விசேட சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தார்.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு முதன் முறையாக 8 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குக் காரணமாக இருந்தார். அத்தேர்தலைத் தொடர்ந்து பொ.ஐ.மு. அரசை அமைத்த போது அவ்வரசிலே தான் இணையாவிட்டாலும் அப்போதைய நிதிச் செயலாளர் முத்துசிவலிங்கத்தை அமைச்சராக்கினார்.
லயச்சிறைகளில் இருந்த தோட்ட மக்களை கெளரவமான வாழ்க்கைக்கு தயார் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மாடி வீட்டுத் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் என மலையகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட அனைத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உள்ளத்தில் உதித்தவைகள்தான்.
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்று - எதிர்காலத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டங்களை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் ஊடாக செயற்படுத்தி னார். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் 65,000 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை அவருக்கு முக்கிய அமைச்சுகளில் ஒன்றான கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு பதவியை 2010 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். இதைத் தவிர நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.கா.வின் தலைமை பொறுப்பை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்திற்கு வழங்கியிருந்தாலும் பொதுச் செயலாளராக பதவி வகித்து இ.தொ.கா.வின் ஆணிவேராக இருந்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா. எடுத்த முயற்சிகளின் பலனாகவே மலையக இளைஞர், யுவதிகள் அரச துறை தொழில் வாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு ஆசிரியர் நியமனங்கள், தபால் சேவை ஊழியர்கள், தொடர்பாடல் உத்தியோகத்தர்கள், மற்றும் மலையகத்தின் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச திணைக்களங்களில் அரசாங்கம் தொழில் வாய்ப்பினை வாரி வழங்கியமைக்கு இ.தொ.கா.வே பின்னணியில் நின்றது.
இதன் மூலம் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்த மலையக இளைஞர், யுவதிகள் தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கப்பட்டது மாத்திரமின்றி மலையகத்தில் இந்த நியமனங்கள் கல்வித்துறையிலும் வரலாற்று திருப்பங்களை ஏற்படுத்தியிருக் கின்றது. மலையகத்தில் வளமான எதிர்காலம் நோக்கிய பயணத்திற்கு இ.தொ.கா.வின் அச்சாணியாக விளங்கியவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான். நன்றி தினகரன்
ஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்
Wednesday, May 27, 2020 - 9:54am
நேற்றிரவு (26) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.
அவருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினகரன்
ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்
மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்
“அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான திட்டங்கள் தீட்டியவர். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமானால் மிகச் சிறப்பாகப் புடம் போடப்பட்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து, சுமார் இருபது வருடங்கள் மலையக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், அமரர் ஆறுமுகம் தொண்டமானின் ஆளுமைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
மலையகம் ஒரு சாணக்கிய தலைவனை இழந்து வேதனைப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அமரர் சந்திரசேகரனின் இழப்பை மலையகம் சந்தித்தது போலவே தற்போது அமரர் ஆறுமுகம் தொண்டமானையும் இழந்து தவிக்கிறது.
தமது தலைமைத்துவத்தை திடீரென இழந்துத் தவிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வுகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துங்கள் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும்” - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் எம்.பியுமான வேலுகுமார் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்
அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

அமைச்சரின் பூதவுடல் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று (28) முற்பகல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணிக்குழாமினர் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.








(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்




அவருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினகரன்
ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்
Wednesday, May 27, 2020 - 11:57am
- பாராளுமன்றம், சௌமியபவன், தொண்டமான் பங்களா, சி.எல்.எவ். வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்



நாளை மறுதினம் (29) கொத்மலை வேவண்டனிலுள்ளதொண்டமான்'பங்களாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி, கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்திற்குகொண்டு செல்லப்படும். எதிர்வரும் 31ஆம் திகதி, இறுதிச் சடங்குகள் நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
(ஹற்றன்சுழற்சிநிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்
மாரடைப்புக் காரணமாக காலஞ்சென்ற, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எஸ். சத்தியவேல் தெரிவித்தார்.
நேற்று (26) திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் காலமானார்.

03 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின்னர், 1999ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1964.05.29ஆம் திகதி பிறந்த அவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு, 1994ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களில் பல்வேறு அமைச்சுகளை வகித்திருந்தார்.

கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் இன்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று (27) பூராகவும் பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுவதோடு, நாளை (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டதன் பின்னர், பூதவுடல் கொழும்பு -03 மல்வத்தை வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்
Thursday, May 28, 2020 - 8:03am
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்திகள் வருமாறு;
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறிப்பாக மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, வட கிழக்கிலும் நாடெங்கிலும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு மத்தியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் பேரிழப்பாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் தானைத் தளபதியாக பல தசாப்த காலங்களாக கோலோச்சிய மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் அடுத்த அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பியதோடு நில்லாது, பெரும்பாலும் தான் சார்ந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீகப் போராட்டத்தில் ஆட்சியாளர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவராக விளங்கினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவராகக் காணப்பட்ட நண்பர் ஆறுமுகன் பொதுவாகவே ஸ்தாபகத் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் அரசியல் களத்தில் ஏற்படும் உடைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் துணிச்சலுடன் முகம் கொடுத்து தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத் தொழிலாளர் பரம்பரையின் சமூக அரசியல் செல்நெறியை முன்கொண்டு செல்வதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.
மலையக மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை உரியமுறையில் வென்றெடுப்பதற்காக அவர்களிலிருந்து தோற்றம் பெற்றுள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும், இறுதி மூச்சுவரை தனது மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும், விமோசனத்திலும் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கண்ணும் கருத்துமாக இருந்ததற்கு அவரது அரசியல் நகர்வுகளும், நடவடிக்கைகளும் சான்று பகர்கின்றன.
தொண்டமானின் மறைவு மலையகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.
அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

சிறுபான்மை சமூகமொன்றின் தலைவரான அவர், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலே சமூகத் தலைவனுக்குரிய ஆளுமைகளை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் ரூபா சம்பளத்தை வென்றெடுக்கும் அவரது பிரயத்தனங்கள், அன்னாரின் இறுதி மூச்சு அடங்கும் வரை இருந்தமை, நேற்று மாலை முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.”
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு
முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்
சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான் பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் ஒரு போதும் முற்றுப்பெறாது.
இந்த இயக்கத்தின் தொடர் செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன்.
‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு மலையக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமைத்துவத்தை மலையகம் இழந்துள்ளமை துர்பாக்கியமானது.
ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலைமையை இழந்து தவிக்கிறது இ.தொ.கா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவினை அடுத்து விடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பிலேயே தமது கட்சியினதும் தொழிற்சங்கத்தினதும் ஆதரவாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியோடு கருத்தியல் சார்ந்த முரண்பாடுகளை எமது அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருந்த போதும் தனிப்பட்ட அவரது ஆளுமையை எதிரணியினர் என்றவகையில் எப்போதும் அவதானித்து வந்துள்ளோம். எதிரணியை கவனித்து கண்டுகொள்ளாது விடும் அரசியல் ராஜதந்திரம் அவருடையது.
சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையை ஆட்சி செய்யும் எந்த அரசாங்கத்திலும் ‘தொண்டமான்’ எனும் பெயருக்கு ஒரு அங்கீகாரம் இருந்தது.
அவர்கள் கொண்டிருக்கக் கூடிய அரசியல் கருத்து நிலைப்பாட்டுக்கு அப்பால் தொண்டமான் எனும் பெயர் ஒரு தேசிய அடையாளத்தைப் பெற்றிருந்தது.
பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற வேண்டும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகத் தமிழர்களின் ஆளுமைமிக்க அரசியல் தலைவராக அமரர்.ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார். மக்களுக்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் பேரம் பேசக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. ஆட்சியாளர்களும் அவரை ஒரு தேசிய இனத்தின் தலைவராக அங்கீகரித்திருந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில்கூட சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையிலும் ஒரு சமூகத்தின் குரலாக அவர் ஒலித்தார்.
எவ்வளவுதான் நெருக்கடிகள், சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து தான் சார்ந்த கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றுள்ளார். பூரண அரச மரியாதையுடன் அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இடம்பெற வேண்டும். அன்னாரது இழப்பால் துயருறும் அனைவரது துயரிலும் நானும் பங்கேற்கிறேன். நன்றி தினகரன்
மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்
Thursday, May 28, 2020 - 6:54am
இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவால் மலையக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரசியல் பேதங்களுக்கு அப்பால் மலையகச் சமூகத்திற்கு தலைமைக்கொடுத்த ஆளுமைமிக்க ஒரு தலைவராக ஆறுமுகன் தொண்டமானை மலையக மக்கள் பார்க்கின்றனர்.
மலையக நகரங்களிலும், தோட்டப்பகுதிகளிலும் வீடுகளுக்கு முன்னாலும், பொது இடங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு தமது சோகத்தை கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அனைவரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், மலையகத் தமிழர்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிட்டு தமது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சோகமயத்துக்கு உள்ளானதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் தொழிலுக்கும் செல்லவில்லை.
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பில் இன்றைய தினம் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்படும். நாளை காலை கண்டி பாதையின் ஊடாக புசல்லாவைக்கு எடுத்துவரப்பட்டு வெவன்டன் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு சனிக்கிழமை கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படும். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நோர்வூட் பொது மைதானத்தில் இறுதி கிரியைகள் நடத்தப்படவுள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்தறை என மலையகத் தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் நேற்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, பூண்டுலோயா, நோர்வூட், டயகம, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவை என அனைத்து மலையக பிரதேசங்களிலும் வெள்ளிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், அஞ்சலிக்காக புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் பசறை, மடூல்சீமை, லுணுகலை, ஹாலிஎல, கந்தேகெதர பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது வீட்டில் இருந்தபடியே மறைந்த தலைவருக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.
பதுளையில் தோட்டங்கள் தோறும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருப்பதுடன் வெள்ளை நிற இறப்பர் சீட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணியில் கட்சி பேதமின்றி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.
பசறை, மடூல்சீமை, லுணுகலை, ஹாலிஎல, கந்தேகெதர மற்றும் மீதும்பிட்டிய போன்ற நகரங்களில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு மறைந்த தலைவரின் படத்துடன் அஞ்சலி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து கருத்து தெரிவித்த பசறை வெரலபத்தன தமிழ் வித்தியாலய அதிபர் ஆ. ரமேஷ்;,
ஆளுமை மிக்க மக்கள் தலைவனை இழந்து விட்டோம். தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மலையக கல்வி துறைக்கும் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்றார்.
இ.தொ.காவின் நீண்டகால தோட்டக் கமிட்டி தலைவரான ஆசைத்தம்பி கருத்து வெளியிடுகையில், அவருடைய ஒரு வார்த்தைக்கு மலையகம் கட்டுப்படும். வேலை நிறுத்தம், ஏனைய போராட்டங்கள் அனைத்திலும் அவர் எங்களுடன் இருக்கிறார் என்ற தைரியத்தில் இறங்கினோம். மறைவை ஜீரணிக்க முடியவில்லை என்றார். நன்றி தினகரன்
அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை
Thursday, May 28, 2020 - 7:18pm
காலம்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) முற்பகல் இறுதி மரியாதையை செலுத்தினார்.

அமைச்சரின் பூதவுடல் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று (28) முற்பகல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணிக்குழாமினர் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.








ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சொந்த ஊருக்கு
Friday, May 29, 2020 - 12:21pm
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் சொந்த ஊருக்கு இன்று (29) காலை எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்கு வைப்பதற்காக அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட ஹெலிகொப்டரில் இன்று காலை கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர் ஆறுமுகனின் பூதவுடலை எடுத்துச் சென்ற ஹெலிகொப்டர், கம்பளையிலுள்ள மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் ரம்பொடை, வேவண்டனுக்கு ஊர்வலமாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்

அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்கு வைப்பதற்காக அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட ஹெலிகொப்டரில் இன்று காலை கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர் ஆறுமுகனின் பூதவுடலை எடுத்துச் சென்ற ஹெலிகொப்டர், கம்பளையிலுள்ள மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் ரம்பொடை, வேவண்டனுக்கு ஊர்வலமாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்
கொட்டகலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்
Saturday, May 30, 2020 - 3:33pm
- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட அன்னாரின் பூதவுடல் நேற்று (29) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை அன்னாரின் ஆத்ம சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.
நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன.
ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை (31) மாலை 4.00 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் –ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்
சுகாதார விதிமுறை பேணி ஆறுமுகன் தொண்டமானின் நல்லடக்கம்
Sunday, May 31, 2020 - 12:08pm
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று (29) பிற்பகல் 2.00 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
ரம்பொடை, வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் நேற்று (30) கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள் மாத்திரமே, உடலின் உஷ்ணத்தை அளவிட்ட பின்னர் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்றையதினமும் காலை முதல் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து நோர்வூட் மைதானம் நோக்கி பிற்பகல் 2 மணியளவில் சடலம் எடுத்து செல்லப்படும்.
சுகாதார ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, அவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள, குறைந்த எண்ணிக்கையிலானோரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட்டில் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அளவானோர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இராணுவம், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55ஆவது வயதில் காலமானார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்) நன்றி தினகரன்
மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்தே உள்ளன
Sunday, May 31, 2020 - 12:58pm
- நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சஜித் தரப்பு முஸ்தீபு
ஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாவட்ட அமைப்பாளர்கள் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 99 உறுப்பினர்களின் அங்கத்துவத்தை இரத்துச் செய்வதற்கு கட்சியின் செயற்குழு நேற்று அனுமதி அளித்துள்ளது.
இதன் பிரகாரம் அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி இணைத்துக் கொள்ளப்படும் எனவும், அதற்காக ஐ.தே.கவின் கதவுகள் திறக்கப்பட்டே உள்ளன எனவும், அவ்வாறு வருவேர்களின் கோரிக்கையை கட்சி செயற்குழு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நேற்று (29) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாவட்ட அமைப்பாளர்கள் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 99 பேர் இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி விதிகளை மீறிய இவர்களிடம் விளக்கம் கோரிய போதிலும் அவர்கள் விளக்கம் அளிக்கத் தவறியதன் காரணமாக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய 99 பேரையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேறு கட்சிகளில் அணிகளிலும் இணைந்திருப்பதை துறந்ததற்கான உத்தரவாதத்தை அவர்கள் எழுத்து மூலம் சமர்ப்பித்து மன்னிப்புக் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி வழங்கத் கட்சி தயாராக உள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறு இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன எவரிடமும் பழிவாங்கும் எண்ணம் கட்சிக்குகு கிடையாது என தெரிவித்தார்.
நேற்றுக் காலை 10 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசிய கட்சி விசேட செயற்குழு கூட்டத்தில் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாக செயற்படுபவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயற்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்தற்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கட்சி உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைமைக்கே கட்சிக்கே களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது எனவும் எதிர்வரக்கூடிய தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செயற்குழு எடுத்திருக்கும் இத் தீர்மானத்திற்கு அமைய அவர்களை மீள இணைவதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அதற்குப் பின்னர் நீக்கப்பட்ட அமைப்பாளர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய ஏற்பாடுகளை கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.
செயற்குழு கூட்டம் நடைபெற்ற வேளையில் கட்சித் தலைமையகத்துக்குள் செயற்குழு உறுப்பினர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் அப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன, கட்சி அங்கத்துவத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இணைய முடியும் எனவும், கட்சியின் பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்கவும் செயலாளராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நேற்று கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தங்களை நீக்குவதற்கு எடுத்த முடிவு தொடர்பாக இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.
ஐ.தே.க. முக்கியஸ்தர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவும் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
Sunday, May 31, 2020 - 7:03pm
இ.தொ.க. வின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், பூரண அரச மரியாதையுடன் இன்று (31) பிற்பகல் 5.15 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது.

கடந்த 26 ஆம் திகதி மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமைக் காரியாலயம் சௌமியபவனில் வைக்கப்பட்டு, அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டகலைக்கு கொண்டு வரப்பட்டு இ.தொ.க. காரியாலயமான CLF இல்வைக்கப்பட்டது.

படையினரின் பலத்த பாதுகாப்போடு இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி உரை நிகழ்த்திய பின்னர், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் அக்கினியுடன் சங்கமமாகியது.

இறுதி அஞ்சலி நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி , உரை நிகழ்த்தினர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – கிருஸ்ணா, தலவாக்கலை குறூப் நிருபர், நுவரெலியா தினகரன் நிருபர்) நன்றி தினகரன்
No comments:
Post a Comment