மீண்டும் தொடங்கும் மிடுக்கு-2 - பேராசிரியர் மௌனகுரு



எங்கட மியூசியம்- 124 வருட கனவு நனவாகிறது


இன்று மாலை ( 25.01.2020) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ள அரும் பொருட் காட்சியகம் பற்றி கடந்த சிலம் தினங்களாக முக நூலில் பல பதிவுகள் வந்த வண்ணமுள்ளன   

மரபுரிமையை நிலை நிறுத்தும் வகையில் அவ்வரும்பொருள் காட்சியகம் அமைக்கபடவுள்ளதாக அறிகிறேன்

அறுதிரு முருகன் அதில் என்னையும் கலந்து கொள்ளும் படி அன்புரிமையோடு கேட்டிருந்தார்
என்னால் வரமுடியாத நிலை

ஆறுதிருமுருகனை அவரது
17 ஆவது வயதிலிருந்து அறிவேன்

அச்சிறு பையன் இன்று கனிந்து முதிர்ந்து பலருக்கும் பயன் தரு
பழ மரமாக காட்சி தருகிறார்

,அவரது பணிகளுள் ஒன்று
இந்த தமிழரின் மரபுரிமை கூறும் அரும் பொருட் காட்சியகம்

அவரது சமயப்பணியானது விரிந்து
சமூகப்பணியாகவும்
பண்பாட்டுப்பணியாகவும் அகன்றுள்ளது

கண்முன் அவரையும் அவரின் வளர்ச்சியையும் பணிகளையும் கண்டுகொண்டிருக்கும் வாய்ப்பை இயற்கை எனக்கு அளித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் அரும் பொருட் காட்சியகம் என்றதும் நமது மனதில் வரும் முதல் தமிழ் இலங்கையர்

கலாயோகி ஆனந்த குமாரசாமி ஆவர்,

அவர் யாழ்ப்பாணத் தமிழரான முத்துக்குமாரசாமிக்கும் இங்கிலாந்துப் பெண்ணான எலிசபெத்துக்கும் பிறந்தவர்

1906 ஆம் ஆண்டு அவர் யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் பண்பாட்டுக்கல்வி பற்றி அழுத்திக்கூறி

ஒரு தொல் பொருள் காட்சியகத்தின் அவசியம் பற்றியும் கூறினார் எனக் கேள்விப்பட்டுள்ளேன்

அவர் பின்னாளில் அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் இருந்த அரும்பொருட் காட்சியகத்தின் கீழைத்தேயப் பிரிவிற்குப் பொறுப்பாளராக இருந்தார்

1941 களில் அரும் பொருட் காட்சியகம் பற்றிச் சிந்தித்தவர்களுள் முக்கியமானவர்
கலைப்புலவர் க, நவரத்தினம்

அவரதுஇந்தியச் சிற்ப வடிவங்கள் எனும் நூல்
1941 இல் வெளிவருகிறது

அவரும் அரும்பொருட் காட்சியகம் பற்றிச்
சிந்தித்த முன்னோடி




பின்னால் இது பற்றிச் பலர் சிந்தித்துள்ளனர் பேசியுள்ளனர்

1976 களில் யாழ் பல்கலைக்கழகத்துள் ஓர் அரும்பொருட்காட்சியகம் அமைக்க நினைத்தோருள் முக்கியமானவர் இருவர்

ஒருவர் பேராசிரியர் இந்திரபாலா( கலைபீடாதிபதி)

மற்றவர் பேரா. கைலாசபதி( வளாகத் தலைவர்)

உதவியாக நின்ற வரலாற்று மாணவர்கள்
விசாகன்,
குணசிங்கம்

. யாழ்ப்பாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று ஸ்தாபித்து இதனைத் தொடர்ந்தோருள்
சிவனேச் செல்வன் முக்கியமானவர்

,இப்போது வயது சென்று
பழைய நினைவுகளுடன் சிவனேச் செல்வன் கனடாவிலும்

இந்திரபாலா, விசாகன் குணசிங்கம் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலும் வதிகிறார்கள்

1980 களில் ஆனைக்கோட்டை அகழ்வாய்வு நடந்த பின்னர் அத்தகையதொரு அரும் பொருட் காட்சியகம் யாழ்பல்கலைக்ழகத்தில்
நிறுவப்பட் டது

பேராசியர் ரகுபதிக்கு இதில் பெரும் பங்குண்டு

அவர் இப்போது நோர்வேயில் வதிகிறார்

பின்னால் இதுபற்றி சிந்தித்துச் சிலர் செயலாற்றிய பல்கலைக் கழகத்தவர்களுள்
பேராசிரியர்களான
பத்மநாதன்
சிற்றம்பலம்
கிருஸ்ணராஜா,
புஸ்பரட்ணம்
ஆகியோர் முக்கியமானவர்கள்

கலைஞானி போன்றோர் தம் அளவில் சில சேகரங்களை வைத்திருந்தனர்

இக்காலங்களில் நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம்
சாட்சியும் ஆனோம்

யுத்தம் இராணுவக் கெடுபிடி எல்லாவற்றையும் அழித்து விட் ட து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சேகரித்து வைத்திருந்த ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த
கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி யாழ் மனிதனின் எலும்புக்கூடு,
,அம்மனிதர்கள் பாவித்த அரும்பொருட்கள்
யாவும் அழிக்கப்பட்டு விட்டன

பொருட்களை அழிக்கலாம்

மனதில் உள்ள கருத்துகளை அழிக்கமுடியுமா?

மீண்டும் மரபுரிமை அரும்பொருள் காட்சியகம் பற்றிய சிந்தனைகளும்ம செயற்பாடுகளும்
2000 ஆண்டின் பின் நடைபெற ஆரம்பித்தன

யாழ் பல்கலைக்ழகத்துள்
கலாநிதி சனாத னன்,
கலாநிதி அகிலன் ஆகியோர் இதனை முன்னெடுத்தனர்

வெளியே புதிய சொல் இளைஞர்களான கிரிசாந்த்
யதார்த்தன்
சதீஸ்
ஆகியோர் இதனை முன்னெடுத்தனர்

அவர்கள் ந ட த்திய
தொன்ம யாத்திரையும் மரபுரிமை தேடி மக்களிடம் சென்ற அரும் பொருள் காணும் ஓர் பயணம்தான்

இதோ ஆறு திருமுருகனுக்கூடாக மீண்டும் அந்தக்குரல் கேட்கிறது

அது குரலாக மத்திரமன்றிச் செயலாகப் பரிணமிக்கிறது என்பதுதான் முக்கியம்

பலரையும் அணைத்து
மரபுரிமை பேணும் அல்லது காட்டும் ஓர் அரும் பொருட் காட்சியகத்தை அமைக்கின்றார் ஆறுதிருமுருகனார்

பலத்த அழிவுகளுக்குப் பின்னும் மீண்டும் அந்த மிடுக்கு ஆறு திருமுருகனுக்கூடாக எழுகிறது

அதன் கட்டிட அமைப்பையும் அவர் சேகரித்த பொருட்களையும் காண

மனமோ மிகவும் மகிழ்கின்றது.

மேற்கு நாடுகளிலே அரும் பொருட் காட்சியகங்கள் அதிகம்

,அந்த நாட்டின் வரலாற்றை
பண்பாட்டை
சமூகத்தை
குவி மையப்படுத்தி அவை காட்டும்

நான் வெளி நாடுகள் சென்றால் முதலில் பாரவையிடுவது இந்த அரும் பொருட் காட்சியகங்களைத்தான்

யாழ்ப்பாண்ம் வந்தால் இனிச்சிலர் சிவபூமியில் ஆறுதிருமுருகனார் அமைத்த இந்த அரும்பொருட் காட்சியகத்தைத்தான் முதல் முதல் சென்று பார்ப்பர்

ஒரு அரசு செய்ய வேண்டியதை

,ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டியதை

தனிமனித நிறுவனமாக நின்று சாதித்துள்ள ஆறுதிருமுகனை நினைக்கையில்

15 வயதில் கட்டைக் காற்சட்டையுடன் கண்ட ஆர்வமும் வேகமும் மிக்க அந்த இளைஞனின் துரு துரு என்ற முகம் ஞாபகம் வருகிறது

காலம் தனக்கிட்ட கட்டளையை கணக்காக நிறைவேற்றுகிறார் ஆறு திருமுருகன்

.அதைக் காண நாமும் சாட்சியாக இருக்கிறோம்

அதில் உள்ள நிறை குறைகளையும்
அவரே அறிவார்.

பூரணத்துவம் என்று ஒன்றில்லை

பூரணத்தும் என்ற ஒன்றை நோக்கிய பயணமே செய்கிறோம்

மேலும் மேலும் அதனை பூரணத்துவம் நோக்கிக் கொண் டு செல்லும் பாரிய பொறுப்பும் அவருக்குண்டு

அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கையுமுண்டு

இப்போது நாம் அனைவரும் அவரை மனதார வாழ்த்துவோம்.

மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்
அவருக்கு மனோவலிமை அளிப்போம்

அவரோடு இச்செயலில் பங்குகொள்வோம்

1906 ஆண்டில் உலகப் புகழ் பெற்ற
கலாயோகி ஆனந்த குமாரசாமி கண்ட கனவு
124 வருடங்களின் பின் ஆறுதிருமுருகனால் செயலாக்கம் பெறுகிறது என்று கூறி மகிழ்வோம்

பாறை பிழந்து பயன் விளைக்கும்
விவசாயி வாழும் மண்
அந்த யாழ்ப்பாண மண்

புயல்
அழிவு
வெள்ளம்
எதுவும் அவனை/அவளை அசைக்காது என்பதற்கு

இன்னுமோர் உதாரணம்

சிவபூமியில் இன்று திறந்து வைக்கப்படும் அரும்பொருட் காட்சியகம்

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆறுதிரு முருகன் அவர்களே

மௌனகுரு




.

No comments: