இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி
5 சதவீத யுரேனிய செறிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு
இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்!
நீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்
இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி
12/11/2019 பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் தலைநகர் டாக்காவிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் பிரஹ்மன்பாரியா என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரதங்கள் நேருக்குநேர் மோதியமையினால் சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மூன்று பெட்டிகள் முற்றாக சிதைவடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் உறக்கத்திலிருந்தவேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சத்தமொன்று கேட்டது, பயணிகள் அலறுவதை நான் பார்த்தேன் என ஒரு பயணி தெரிவித்துள்ளார்.
இரு புகையிரதங்களும் ஒரே தண்டவாளத்தில் எப்படி பயணித்தன என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
5 சதவீத யுரேனிய செறிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு
11/11/2019 ஈரான் தற்போது தனது நாடு 5 சதவீத யுரேனிய செறிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதாக நேற்று முன்தினம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் தான் அளித்த உறுதிப்பாடுகளிலிருந்து படிப்படியாக விலகும் செயற்கிரமத்தை முன்னெடுத்து வரும் ஈரான் தற்போது அந்த உடன்படிக்கையின் கீழ் யுரேனிய செறிவூட்டலை 3.67 சதவீதமாக வரையறை செய்வதற்கு தன்னால் அளிக்கப்பட்ட உறுதிப்பாட்டை மீறியுள்ளது.
அமெரிக்கா ஒருதலைப்பட்சமான முறையில் அந்த உடன்படிக்கையிலிருந்து கடந்த வருடம் தன்னை வாபஸ் பெற்றுக் கொண்டு ஈரானுக்கு எதிராக தடைகளை மீள விதித்துள்ள நிலையிலேயே ஈரான் அந்த உடன்படிக்கை தொடர்பான உறுதிப்பாடுகளிலிருந்து மீறும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
''எங்கள் தேவைகளின் அடிப்படையில் எமக்குத் தேவையானதை மேற்கொள்ள உத்தரவிட்டு வருகிறோம். தற்போது நாம் 5 சதவீத யுரேனிய செறிவாக்கத்தை மேற்கொண்டுள்ளோம்'' என ஈரானிய அணுசக்தி அமைப்பின் பேச்சாளர் பெஹ்ரோஸ் கமல்வண்டி தெரிவித்தார்.
ஈரானுக்கு 5 சதவீத, 20 சதவீத, 60 சதவீத அல்லது எந்தவொரு சதவீத அளவி லும் செறிவாக்கப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வல்லமை உள்ளதாக அவர் கூறினார். அணுசக்தி உற்பத்தி உபகரணங்கள் செயற்படுவதற்கு தேவையான எரிபொருளை உற்பத்தி செய்யும் மேற்படி யுரேனிய செறிவாக்க செயற்கிரமத்தைப் பயன்படுத்தி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம் என மேற்குலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
எனினும் தற்போது ஈரானால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 5 சதவீத யுரேனிய செறிவாக்க மட்டமானது அணுசக்தி உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்ட யுரேனிய செறிவாக்க மட்டத்தை விடவும் அதிகம் என்ற போதும் அது மேற்படி உடன்படிக்கைக்கு முன்னர் ஈரானால் மேற்கொள்ளப்பட்ட 20 சதவீத யுரேனிய செறிவாக்கத்தை விடவும் குறைவாகும். அதேசமயம் அணு ஆயுதமொன்றை தயாரிக்க 90 சதவீதம் அளவான யுரேனிய செறிவாக்கத்தை மேற்கொள்வது தேவையாகவுள்ள நிலையில் அதனுடன் ஒப்பிடுகையில் மேற்படி செறிவாக்க அளவு மிகக் குறைவானதாகும்.
ஈரான் அணுசக்தி உடன்படிக்கை தொட ர்பில் தனது நான்காவது கட்ட மீறலாக தலைநகர் தெஹ்ரானின் தெற்கேயுள்ள போர்டோவ் அணுசக்தி நிலையத்திலான யுரேனிய செறிவாக்கல் செயற்கிரமத்தை கடந்த வியாழக்கிழமை மீள ஆரம்பித்திருந்தது. அந்நாடு ஏற்கனவே நடான்ஸிலுள்ள அணுசக்தி நிலையத்தில் யுரேனிய செறிவாக்கத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்!
11/11/2019 இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

ஹைதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையம் நம்மூர் எக்மோர் ரயில் நிலையத்தை போல் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் இன்று காலை பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.
மின்சார ரயில் ஒன்று மற்றொரு ரயில் மீது பயங்கரமாக மோதிக்கொண்டது
இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தும் உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி
நீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்
14/11/2019 இத்தாலியின் வெனிஸ் நகரை கடந்த 50 வருட காலத்தில் இல்லாதவாறு மிகவும் உயரமான கடல் அலை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளது.

இதனால் அந்நகரின் பல பகுதிகள் கடல் நீரில் மூழ்கியதால் இயல்பு வாழ்க்கை பாதி க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது நகரில் சில பிராந்தியங்களில் சுமார் 6 அடி (1.87 மீற்றர்) உயரத்துக்கு கடல் அலை பிரவேசித்துள்ளது.

இந்த வெள்ள அனர்த்தத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேற்படி வெள்ள அனர்த்தத்தையடுத்து வெனிஸ் நகர மேயர் லுயிகி புறுக்னரோ அவசரகால நிலைமையொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 78 வயது நபரொ ருவர் தனது வீட்டுக்குள் பிரவேசித்த கடல் நீரால் மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்துள்ளார். 1966 ஆம் ஆண்டில் தாக்கிய 1.94 மீற்றர் உயர கடல் அலையே இதற்கு முன் னர் வெனிஸ் நகரை தாக்கிய உயரமான கடல் அலையாகவுள்ளது.
No comments:
Post a Comment