ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
சிவசக்தி ஆனந்தனை சந்தித்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டு இராஜதந்திரி
நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம்
வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் - வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
சிவசக்தி ஆனந்தனை சந்தித்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டு இராஜதந்திரி
நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம்
வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் - வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
24/09/2019 ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இழுபறி நிலையில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதசவை களமிறக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவ்வாறெறினும் நாளை மறுதினம் இடம்பெறும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
சிவசக்தி ஆனந்தனை சந்தித்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டு இராஜதந்திரி
24/09/2019 இலங்கைக்கான ஜப்பான் நாட்டினுடைய தூதுவராலயத்தின் அரசியல் தலமையின் இரண்டாம் செயலாளர் Takeshi Ozaki க்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் இன்றைய தினம் (24) சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\

இச் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களினதும் குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினரால் வவுனியா பல்கலைக்கழகத்திற்கான நிதி உதவியும்,வன்னி மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜப்பான் நாட்டின் தூதுவர் தங்கள் நாட்டின் அரசாங்கத்துடன் பேசி பொருத்தமான திட்டங்களின் அடிப்படையில் நிதி உதவி வழங்குவதாகவும், பல்கலைக்கழகத்திற்கான குறுகிய நீண்டகால திட்ட முன்மொழிவுகளை தரும் பட்சத்தில் தங்கள் நாட்டின் அரசாங்கத்துடன் பேசி அதற்கான நிதி உதவியை பெற்றுதருவதாகவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம்
23/09/2019 புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை விதித்து கட்டளையிட்டது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை காலமானார்.
அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

தகவலின் பிரகாரம் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பிள்ளையார் ஆலயத்தைச் சேர்த்தவர்கள், பௌத்த பிக்குவின் உடலை இந்து ஆலயத்திற்கு அருகில் தகனம் செய்வது இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடு எனவும் அதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியின்மை ஏற்பட சந்தர்பங்கள் உள்ளமையால், முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
அதுதொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
நிரந்த நீதிவான் விடுப்பில் இருந்தமையால் பதில் நீதிவான், இன்று திங்கட்கிழமை வரை பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் புதைக்கவோ, தகனம் செய்யவோ முடியாது என இடைக்காலக் கட்டளை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு நிரந்தர நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர். இதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்று மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
UPDATE
இந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவு வெளியாக முன்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கான வேலையை ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து முன்னெடுத்த நிலையில் நீதிமன்றின் தீர்ப்புடன் நீராவியடி ஆலய பகுதிக்கு சென்று பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்யும் இடத்தை அடையாளம் காட்ட சென்ற சட்டத்தரணிகளுடன் தர்க்கம் புரிந்த பிக்குகள் உடலை வேறு எங்கும் எரிக்க முடியாது ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் மாத்திரமே எரிக்க முடியும் என தெரிவித்து ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் உயிரிழந்த பிக்குவின் உடலத்தை நீதிமன்றின் தீர்ப்பையும் மதிக்காது எடுத்துச்சென்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான புராதன தீர்த்த கேணியில் தகனம் செய்தனர்.
இதனால் நீதிமன்றின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் மக்கள் நீதியை மதிக்காது ஆலய வளாகத்திலேயே உடலம் எரிக்கப்பட்டதற்காக கண்ணீர் விட்டு கதறியழுத்தனர் . நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் உடலத்தை நீதிமன்று காட்டிய இடத்துக்கு புறம்பான இடத்தில் எரிப்பதனை வேடிக்கை பார்த்ததோடு தகனம் முடியும் வரை பூரண பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர் .
மேலும் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற சட்டதரணிகள் மீதும் பௌத்த பிக்குகள் தாக்குதல்களை மேற்கொண்டமையை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் அனைவரும் இடை நேரத்துடன் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர் .
இதனால் நீதிமன்றின் பணிகள் யாவும் மதியத்துடன் கைவிடப்பட்டன . சட்டதரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட போவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர் .
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சட்டதரணிகளான சுகாஸ் , மணிவண்ணன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவுசெய்துள்ளனர் .
வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் - வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !
24/09/2019 பௌத்த மதகுருவின் உடலம் எரிப்பது தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன்,நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்து இன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி பௌத்த மதகுருவின் உடலம் எரிக்கப்பட்டமை சட்டத்தரணிகள் மற்றும் ஆலயபூசகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து மக்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தி மாவட்ட செயலம் வரை சென்றடைந்துள்ளனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துண்டை கட்டி தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்
வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றின் முன்பாக ஒன்று கூடினோம்.
நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டோம். இந்த சந்தர்பத்தில் நீதிமன்றத்தின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதற்கு இன்று தங்கள் நீதியினை கோரி திரண்ட மக்களுக்கு சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களுக்கு தோழோடு தோழ் நின்று பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சேர்ந்த சங்க சட்டத்தரணி நண்பர்கள் நண்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இன்றையதினம் வடக்கினை சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுகூடி நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.
தென்னிலங்கையில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில சிங்கள நாளிதழ்களில் நேற்று நடைபெற்ற சம்பவம் திரிவு படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவே அது தொடர்பான தெளிவான அறிக்கை வெளியிடுவது.
நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது.மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது எமது தாய்ச்சங்கத்திற்கு இங்கு நடைபெற்ற விடையங்கள் தொடர்பில் எடுத்துக்கூறுவது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற வழக்கு தொடர்பாக இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பபது நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும் இதனை கருத்தில் கொண்டு சட்டத்தரணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.காலை 9.30 தொடக்கம் 10.30 மணிவரை சட்டத்தரணிகள் தங்களை சேர்ந்த நீதிமன்றங்களுக்கு முன்னால் ஒரு அடையாள எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் இந்த நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கியமான நோக்கம் என்னவென்றால்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது,நீதிமன்ற அவமதிப்பு நடைபெற்றிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலத்தில் எங்கேயும் இடம்பெறக்கூடாது என்பதை சட்டத்தரணிகள் அனைவரும் எடுத்துரைத்தார்கள் இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்து வெளியுலகத்திற்கு கொண்டுவந்த அனைத்து ஊடகங்களுக்கும் சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்
24/09/2019 நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை 11 மணிக்கு முன்னனெடுக்கப்பட்டது .
தமிழர் மரபுரிமை பேரவையினரின் அழைப்பின் பேரில் இந்த கண்டன போராட்டம் இடம்பெற்றிருந்தது . நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பொலிஸாரின் பூரண ஆதரவோடு பழைய செம்மலை நீராவிடய பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும் , பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராகவும் சட்டதரணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும் இந்த மாபெரும் கண்டன போராட்டம் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்து நீதிமன்ற வீதியூடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது
போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கைது செய் கைது செய் ஞானசார தேரரை கைதுசெய் , இலங்கை பொலிஸாரே தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா ? ஒழிக ஒழிக பௌத்த அராஜகம் ஒழிக ,வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , பௌத்தருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா என்ற கோஷங்களை எழுப்பியவாறும் ,பதாதைகளை தங்கியவாறும் மாவட்ட செயலக வாயில் வரை சென்றனர் .
இறுதியில் தமிழர் மரபுரிமை பேரவையினர் மதத்தலைவர்கள் இணைந்து ஜனாதிபதிக்கும் , ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கையளிப்பதற்கான மகஜரை முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகஸ்தரிடம் கையளித்தனர் .
இந்த கண்டன போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள் , சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், சிவில் அமைப்புகள் வர்த்தகர்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் இளைஞர்களும் மாவட்ட செயலகம் முன்பாக ஞானசார தேரரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் .
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக முல்லைத்தீவு வணிகர்கள் தமது கடைகளை அடைத்து பூரண ஆதரவை வெளியிட்டிருந்தனர் .
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
25/09/2019 இந்து- பெளத்த மோதலை உருவாக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகவே தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட விடயம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஜானசார தேரரின் தலையீட்டில் இடம்பெற்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து அவர் கருத்து கூறுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் கூறியதானது,
இந்து -பெளத்த மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் எம்மத்தியில் இல்லை. கொழும்பிலும் ஏனைய சிங்கள பகுதிகளிலும் தமிழ் சிங்கள மக்கள் மிகவும் நல்ல உணர்வுடன் ஆலய மத நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் அந்த நிலைமைகள் இல்லாது பௌத்தம் புறக்கணிக்கப்பட்டு இனவாதம் பரப்பப்பட்டு அரசியல் தூண்டுதல்கள் மற்றும் அரசியல் சுயநலம் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.
அதுமட்டும் அல்ல அந்த பூமி விகாரைக்கு உரித்தான பகுதியாகும். இந்துக்களுக்கு எவ்வாறு அங்கு சகல உரிமையும் உள்ளதோ அதேபோல் பௌத்தர்களுக்கும் சம உரிமை உண்டு. அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த நாட்டில் பெளத்த சிங்கள முதன்மைத்துவம் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்குக்கு பொருந்தாது என்றே அவர்கள் நினைக்கின்றனர். இந்த விடயத்தில் சட்டத்துறையை நாடிய சட்டத்தரணிகளும் அவ்வாறான ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் இருந்தே வாதாடவும் முன்வருகின்றனர். அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு பிரிவினைகளை தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் நாம் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
கேள்வி:- எனினும் யுத்தத்திற்கு பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு பகுதியில் விகாரை அமைத்து பழமைவாய்ந்த விநாயகர் ஆலய பகுதியை புறக்கணிப்பது ஏற்றுகொள்ள முடியாதென்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உள்ளதே?
தேரர்:- யுத்தகாலத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறுவது தவறு. இங்கு மேதாலங்கார தேரர் நீண்டகாலமாக இருந்தார். ஏன் வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைக்கக்கூடாதா. அதனையா தமிழ் சமூகம் சார்பில் வலியுறுத்துகின்றீர்கள்.
கேள்வி:- இல்லை, இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்ததையே தவறென மக்கள் கூறுகின்றனர். இது இந்துக்களை வேதனைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதே?
தேரர்:- ஆலயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. விகாரைக்கு உரிய இடத்திலேயே நாம் அவ்வாறு செய்தோம். அத்துடன் நீதிமன்றத்தை அவமதிக்கவும் இல்லை. தீர்ப்பு வரும்வரை உடலை வைத்திருக்க முடியாது. ஆகவே நாம் அவ்வாறு நடந்துகொண்டோம். இதனை இந்து பெளத்த மோதலாக பார்க்க வேண்டாம்.
கேள்வி :- தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் எவ்வாறு தொடர்புபட்டது? நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைகூற காரணம் என்ன ?
தேரர்:- அவர்கள் தான் மக்களை தூண்டிவிட்டு இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது. அனைவரும் இதனை அரசியலாக மாற்றவே முயற்சிக்கின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment