மனைவி

வெளிநாட்டில் வாழும் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. அவனுக்கு அங்கே ஒரு காதலியும் அமைகிறாள். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் இந்தியா திரும்ப தயாராகும் இவர்களை வில்லன் கோஷ்டி கடத்தி விஞ்ஞான உண்மைகளை அபகரிக்கத் திட்டமிடுகிறது. இந்த சம்பவத்தில் காதலி வில்லனிடம் அகப்படுகிறாள். கதாநாயகனோ தப்பிப் பிழைத்து இந்தியா திரும்புகிறான். இந்தியா வரும் அவனை தன் நண்பனின் மகளான டாக்டருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கிறார். கதாநாயகனின் தந்தை. விஷயம் அறியும் காதலி வில்லனின் கைப்பாவையாகி காதலனை பழி வாங்கத் திட்டமிடுகிறாள்.

வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற கலைஞர் சுப்பு ஆறுமுகம் படத்திற்கு கதை வசனத்தை எழுதியிருந்தார். அத்துடன் இணைத்தயாரிப்பாளராகவும் படத்தைத் தயாரித்தார்.
படத்தில் ஜெமினி கணேசனுக்கு இரண்டு ஜோடிகள். முனைவியாக விஜயகுமாரியும் காதலியாக ராஜஸ்ரீயும் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ஜெமினியுடன் பல படங்களில் ராஜஸ்ரீ தொடர்ந்து நடித்து வந்தார். அந்த வரிசையில் மனைவியும் இடம் பிடித்தது.
குணசித்திர நடிகையான விஜயகுமார் வழக்கமாக எஸ் எஸ் ராஜேந்திரனுடனேயே இணைந்து நடிப்பார். அவர்களிடையே பிரிவு வந்த பின் ஏனைய நடிகர்களுடனும் ஜோடியாக நடிக்கத் தொடங்கிளார்.
மனைவி படத்தில் ஜெமினி விஜயகுமாரி இணை சற்று வித்தியாசமாகவே ரசிகர்களுக்கு தென்பட்டது. ஆனாலும் தன் நடிப்பால் அதனை சரி செய்தார் விஜயகுமாரி.
படத்தின் பெரும் பகுதியில் வருபவர் நாகேஷ். டாக்டராக வரும் இவர் படத்தை தன் நகைச்சுவை மூலம் நகர்த்த உதவதி செய்கிறார். சுப்ப ஆறுமுகத்தின் வசனம் நாகேஷிற்கு உதவியது.
வி கே ராமசாமி டி எஸ் முத்தையா ரமாபிரபா ஆகியோரும் படத்தில் உள்ளனர். அசோகன் தான் வில்லன் குறையின்றி நடித்திருந்தார்.

பிரபல ஒளிப்பதிவாளராகவும் டைரக்டராகவும் திகழ்ந்தவர் ஜி கே ராமு. எம் ஜி ஆரின் வெற்றிப் படமான நாடோடி மன்னன் படத்தில் ஒளிப்பதிவாளரான ராமு இரட்டை வேடத்தில் எம் ஜி ஆர் தோன்றும் காட்சிகளை திறமையுடன் படமாக்கியிருந்தார். மனைவி படத்தை இயக்கியவர் இந்த ஜி கே ருhமுதான்.
மனைவி படம் வெளிவந்து நான்காண்டுகள் கழித்து ஒரு படம் கலரில் வந்தது. வெளிநாட்டில் வாழும் விஞ்ஞானி புதிய உண்மைகளை தன் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறான் வில்லன் விஞ்ஞானியையும் அவன் காதலியையும் கடத்துகிறான். வில்லனால் ஏவப்பட்ட மற்றுமொரு பெண்விஞ்ஞானியின் சகோதரனை ஒரு தலையாகக் காதலித்து கதாநாயகனுக்கு உதவுகிறான்.
மனைவி படத்தின் கதைக் கருவின் மறுபதிப்பாக வெளிவந்த உலகம் சுற்றும வாலிபவன் எம் ஜி ஆர் நடிப்பிலும் டைரக்ஷனிலும் மாபெரும் வெற்றி பெற்றது!
No comments:
Post a Comment