அடிமைப் பெண்

படத்தின் தயாரிப்பாளரான எம்.ஜி.ஆர் படத்தயாரிப்பிற்கான செலவைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதை படத்தின் காட்சிகளும் பிரம்மாணடடமும் எடுத்துக் காட்டின. சரித்திரக் காலக்கதை என்ற போதும் பலவித அரங்குகளை அமைத்து அசத்தியிருந்தார் கலை இயக்கனர் அங்கமுத்து.
நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்த போது நிதி நெருக்கடிக்கு எம்.ஜி.ஆர் ஆளாகியிருந்தார். இதன் காரணமாக கேவா கலரில் படமாக்கியிருந்தார். ஆனால் 1969ல் வெளிவந்த அடிமைப் பெண்ணை முழுநீள ஈஸ்ட்மண் கலரில் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.
ஆரம்பத்தில் அடிமைப் பெண் படத்தை எம்.ஜி.ஆரே டைரக்ட் செய்வதாக இருந்தது. ஆனால் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் டைரக்ட் செய்யும் பொறுப்பை கே. சங்கரிடம் ஒப்படைத்தார். எம்.ஜி.ஆர் வெளிப்புறப் படப்பிதடிப்பிற்கான சென்ற நடிகர்கள் கலைஞர்களளை மட்டுமன்றி அவர்களுடன் வந்த நண்பர்களையும் எவ்விதக் குறையுமின்றி எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டதை சோ பல தடவைகள் பாராட்டி எழுதியுள்ளார். அதேபோல் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருந்த சந்திரபாபுவுக்கும் கணிசமான தொகை படத்தில் நடிப்பதற்கு வழங்கப்பட்டது.
படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது. ராஜஸ்;தான் அரண்மனை, பாலைவனம் என்ற அனைத்தையும் தனது கமிராவின் மூலம் அள்ளிக் கொண்டார் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர் போடும் சண்டை விறுப்விறுப்பாக இருந்தது.. எஸ. டி. பாலசுப்பிரமணியம் இந்தப் படத்தில் தான் முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு ஆயிரம் நிலவே வா என்று பாடியிருந்தார். கே. சங்கர் படத்தை இயக்க கேஷ மகாதேவன் இசையமைத்தார். தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் டி.எம்.எஸ் குரலில் ஜொலித்தது. எம்.ஜி.ஆர் நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளருமாக இருந்து உருவாக்கிய அடிமைப் பெண் இருபத்தைந்து வாரங்கள் ஒடி வெள்ளிவிழா கண்டது. இலங்கையிலும் நூறு நாட்கள் ஒடி ரசிகர்களை கவர்ந்தது.
உலகம் இவ்வளவுதான்


ஒரு நாள் நல்லவனாகவும் மறு நாள் கெட்டவனாகவும் மாறி மாறி வாழும் கதாநாயகன் பாத்திரத்தை நாகேஷ் ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் என்ற பாடலும் விஜயஸ்ரீயின் நடன அசைவுகளும் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தேவதாஸ் வெற்றிப் படத்தை டைரக்ட் செய்த வேதாந்தம் ராகவையா இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
குழந்தை உள்ளம்
நடிகையாகவே தமிழ்த் திரையில் வலம் வந்து கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் இயக்குனராக அவதாரம் எடுத்த படம் குழந்தை உள்ளம். முதல் படத்திலேயே தன் கணவர் ஜெமினி கணேசனை டைரக்ட்

குழந்தை உள்ளம் படத்தில் எஸ். பி. புp. சுசிலாவுடன் சேர்;ந்து பாடிய முத்துச் சிப்பிக்குள் ஒரு பூவண்டு என்ற பாடல் இலங்கை வானொலி மூலம் பிரபலமானது.
தங்கச் சுரங்கம்


சிவாஜியின் நாட்டுப்பற்றை விளக்கும் நான் பிறந்த நாட்டிற்கு எந்த நாடு பெரியது, கிணற்றிற்குள் படமாக்கப்பட்ட சந்தனக் குடத்திற்குள்ளே பந்துகள் உருண்டு வந்து போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. படம் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த போது போலித் தங்கமாவது செய்வதாவது என்று அலட்சியமாக சிலர் பேசினார்கள். ஆனால் சில காலத்திற்கு முன் சீனாவில் போலித்தங்கம் வந்த போது தங்கச் சுரங்கம் படத்திற்கு மூலக்கதையை எழுதிய ஜி. பாலசுப்பிரமணியத்தின் கற்பனையை பாராட்டடாமல் இருக்க முடியவில்லை! வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் அனல் பறக்கும் வசனங்களை எழுதிய பிரபல வசன கர்த்தா சக்தி கிருஷ்ணசாமிதான் இந்தப் படத்திற்கும் நவீனமான முறையில் வசனங்களை எழுதியிருந்தார். கலரில் வெளிவந்த தங்கச் சுரங்கம் ஸ்டைல் மன்னனாக சிவாஜியை காட்டியது.
No comments:
Post a Comment