
கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும்
முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு: சிப்பிக்குள்
முத்து.
இலங்கை தேசிய
சுவடிகள் திணைக்களம் மற்றும் பொது
நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்
தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம்
ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும்
ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும்
இடம்பெற்றுள்ளன.
477 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நூலை கி.லக்ஷ்மணன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன், தொகுத்துள்ளார்.
கி.லக்ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டு கடந்த மே மாதம்
தொடங்கியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந் நூல்
வெளியாகியிருக்கிறது.

இவர் 1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை
கண்டுள்ளதுடன் இலங்கை
தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும்
பெற்றது.
சிப்பிக்குள் முத்து நூலுக்கு சி.வி. விக்னேஸ்வரன், டி.எம். சுவாமிநாதன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.
சிப்பிக்குள் முத்து நூலின்
பிரதிகளுக்கு:
(லண்டன்) திரு. கஜேந்திரன்: +447 940 35 6863
(கனடா) திரு. எஸ்.இராமச்சந்திரன்: + 416 356 7859
(அவுஸ்திரேலியா) திருமதி மங்களம் வாசன் : (00 61 3) 9898 44 69
No comments:
Post a Comment