கீதையுடன் பைபிள், குர்ஆன் சர்ச்சை
ஈராக் தூதரகத்தில் தாக்குதல்
அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யாவை விட்டு வெளியேற புட்டின் உத்தரவு
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 30 க்கும் மேற்பட்டோர் பலி
கீதையுடன் பைபிள், குர்ஆன் சர்ச்சை
31/07/2017 பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம்
சிலை முன்பு பகவத் கீதையுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித
நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை
முன்னிட்டு 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்டபத்தில் வீணை
மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத்
கீதை நூலும் இருந்தது.
ஆனால் , அப்துல்கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும்
வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம்
சிலை அருகே அவரது அண்ணன் பேரன் சலீம் குர்ஆன் மற்றும் பைபிளை நேற்று
வைத்தார். பின்னர் நேற்று மதியம் அவ் இரு நூல்களையும் அகற்றிய அவர்,
பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நூல்களும் அகற்றப்பட்டன. இதனை அரசியல் ஆக்க
வேண்டாம் என்றார். இதேவேளை கலாம் சிலை அருகே பை பிள் மற்றும் குர்ஆனை
அனுமதியின்றி வைத்ததாக சலீம் மீது இந்து மக்கள் கட்சியினர் பொலிஸில் புகார்
அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
ஈராக் தூதரகத்தில் தாக்குதல்
31/07/2017 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈராக் தூதரக அலுவலகம் அருகே இன்று கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வெடி குண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி அதை வெடிக்க செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுங்கின.
கட்டிடங்கள் இடிந்தன. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் மற்றும் காயம்
அடைந்தோர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. நன்றி வீரகேசரி
அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யாவை விட்டு வெளியேற புட்டின் உத்தரவு
01/08/2017 ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக
அதிகாரிகள் 755 பேரையும் உடனே நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி, ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும்
ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. இந்த நிலையில், ரஷ்யா
மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இதையடுத்து,
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பதிலடியாக, ரஷ்யாவில்
பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பலரை ஜனாதிபதி விளாடிமிர்
புட்டின் நாட்டை விட்டு வெளியேற்றுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது எதிர்பார்த்ததைப் போலவே விளாடிமிர் புட்டின்,
ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 755 பேரையும், உடனே
நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்
உருவாகியுள்ளது. நன்றி வீரகேசரி
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 30 க்கும் மேற்பட்டோர் பலி
02/08/2017 மத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரத்திலுள்ள ஜாவாடியா பள்ளிவாசலில் ஏற்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குண்டுவெடிப்புச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிதாரி ஒருவரால் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அப் பிரதேச அரச அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக இருந்ததாகவும் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் காயமடைந்தோர் 64 இற்கும் மேற்படலாம் எனவும் தெரிவித்தார்.
இத் தாக்குதலை மேற்கொண்ட இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் இது வரை குண்டு வெடிப்பு சம்பவத்தை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment