பிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல்: 8 பேர் காயம்
மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணியுமாறு உகாண்டா அரசாங்கம் உத்தரவு
விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு
பிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல்: 8 பேர் காயம்
03/07/2017 பிரான்ஸின் தொன்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில்
முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8
பேர்காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணியுமாறு உகாண்டா அரசாங்கம் உத்தரவு
05/07/2017 அரசாங்க உத்தியோகத்தர்கள் கண்ணியமாகவும் ஒழுக்கத்துடனும் உடையணிந்து வரவேண்டும் என உகாண்டா அரசாங்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பாக பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணிந்து தொழிலுக்கு வரவேண்டும் என்றும் உகண்டா அரசாங்கத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவு அரச உத்தியோகத்தில் கடமை புரியும் பெண்களை இலக்குவைத்தே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எண்ணத்தேன்றுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முழங்காலுக்கு மேலாக இருக்கும் குட்டைப் பாவாடைகளை அணிந்து பெண் ஊழியர்கள் சமுகமளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பளிச்சென்று இருக்கும் வர்ணங்களில் தலைமுடியை ஒய்யாரமாக பின்னிக்கொண்டு வேலைக்கு வரவேண்டாம் எனவும் உகண்டா அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் ஆடவர்கள் தலைமுடியை ஒட்டவெட்டி, தலைச்சாயம் மற்றும் கோட் அணிந்து வேலைக்கு வரவேண்டும். ஆனால் கண்ணைப்பறிக்கும் வர்ணத்தில் உடை அணிந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் கையில்லாத சட்டை அணிவது, உள்ளாடைகள் தெரியும் வகையில் உடையணிவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் மார்பகங்கள், தொப்புள், முழங்கால் மற்றும் பின்புறங்கள் தெரியாத வகையில் ஆடை அணிந்து கடமைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நகங்களை மூன்று செ.மீ நீளத்துக்கு மேல் வளர்க்கக் கூடாது என்றும் உகண்டா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நகம் நீளமாக இருக்க கூடாது என்றும் பூச்சு ஒரே வண்ணத்தில் இருக்க வேண்டும் எனவும் பல வர்ணங்களில் நகப்பூச்சு அணிந்து வருவது அரச அலுவலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு பணியில் உள்ள பெண்கள் முக அலங்காரத்தை எளிமையாக செய்துகொள்ளவும், ஆண் பணியாளர்கள் தலைமுடியை ஒட்டவெட்டியிருக்கவும் உகண்டா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு
03/07/2017 கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது.

இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரிதாபமாக இறந்துபோனார்கள். தென்மேற்கு லண்டனை சேர்ந்த கென் எனப்படும் கேணுகன் சத்தியானந்தன்(18), இவரது சகோதரான, கோபி எனப்படும் கோபிகாந்தன் சத்தியநாதன் (22), மற்றும் இவர்களது நண்பர்களான, நிதர்சன் ரவி (22), இந்துசன் சிறிஸ்காந்தராசா (23), குருசாந்த சிறிதவராஜா (27) ஆகிய நண்பர்களே இந்த சம்பவத்தில் இறந்து போனவர்களாவர்.

இம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் இவர்கள் சார்பில், சட்டவாளர்களான, பற்றிக் றொச்சி, மாசியா வில்ஸ் ஸ்ருவேட், கிலாரி நெல்சன், ரொலு அக்பிலுசி மற்றும் கீத் குலசேகரம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பாக கடந்த ஐந்து நாட்கள் சட்டவிசாரணையில் ஈடுபட்ட மூத்த மரணவிசாரணை அதிகாரியான அலன் கிறேஸ் தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்தார்.

”கடற்கரையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2013 இல் றோயல் தேசிய உயிர்காப்புப் படகு நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளில் உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதும் அடங்கியிருந்தது. ஆனால் இப்பரிந்துரை அமுல்ப்படுத்தப்படவில்லை. அவ்வாறு பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால், இம்மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது உண்மையில் தெரியாது, ஆனால் தற்போது அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்றார்.

இதனிடையே கருத்து தெரிவித்த சட்டத்தரணி கீத் குலசேகரம்,
”சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழைத்த பாரதூரமான தவறை சுட்டிக்காட்ட மறுத்தது மட்டுமல்லாமல், இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் தனது தீர்ப்பை வழங்கியிருப்பது மரணவிசாரணை அதிகாரியின் மீது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார். அத்துடன் ”உயிர்களைக் காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும், உண்மையை மறைக்க முயன்ற மரண விசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்” எனவும் தெரிவித்தார்.

இறுதியில் விளையாட்டு வினையானது என் இறுதித்தீர்பினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்துள்ளதுடன் குறித்த தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment