பிரான்ஸில் வரலாற்று மாற்றம் : ஜனாதிபதி தேர்தலில் அரசியல் அனுபவமில்லாத மக்ரோன் வெற்றி..!
20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்
எறிகணை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இராணுவத்தினர் பலி!
பிரான்ஸில் வரலாற்று மாற்றம் : ஜனாதிபதி தேர்தலில் அரசியல் அனுபவமில்லாத மக்ரோன் வெற்றி..!
24/04/2017 பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில் அரசியல் பிரச்சார அனுபவமில்லாதவரும், இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட எம்மானுவேல் மக்ரோன் அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரான்ஸின் 24ஆவது ஜனாதிபதியாகவுள்ள பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம், இம்மாதத்துடன் நிறைவடைவதனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்ற நிலையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு மொத்த வாக்காளர்களில் சுமார் 80 சதவீதமான வாக்காளர்கள் தாமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
மேலும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் பிலான், ஜீன் மெலன் சோன் மற்றும் பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்ட நிலையில், முதலாவது பெண் வேட்பாளர் மற்றும் வலதுசாரி தலைவர் மரின் லீ பென் மற்றும் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, கடந்த 60 வருடங்களாக ஆதிக்கத்திலிருந்து இரு பாரம்பரிய கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்துள்ளனர்.

இந்நிலையில் முதல்கட்ட தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரான பிரான்கோயிஸ் பில்லான் போட்டியிலிருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இரண்டு கட்டங்களாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் மே 7 திகதி இடம்பெறும். மேலும் அதிக ஆதரவை பெரும் வேட்பாளர் எதிர்வரும் மே 14 ஆம் திகதி பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
25/04/2017 சிவன் கோயிலுக்குள் உட் பிரவேசிக்கவும், வழிபாடுகளில் ஈடுபடவும் சுமார் 20 வருடங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலய பிரவேச மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் அப்போட்பாத் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்டத்தின் பெல்ஸார் உயர் நீதிமன்ற நீதிபதி அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வின் போது, சிவன் கோயிலில் வழிபடுவதற்கு குறித்த மக்களுக்கு உரிமை உள்ளதென 20 வருடங்கள் கடந்த நிலையில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் 20 வருடங்களுக்கு முன்பு குறித்த கோயில் மூடப்பட்டதாகவும், தற்போது குறித்த நிலம் கோயிலுடயதென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்
26/04/2017 வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக செயற்படுவதற்காக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது.


குறித்த பயிற்சியை காரணமாக கொண்டு அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ். மிசிகன்’ ஏவுகணை தாங்கு நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஏற்கனேவே விமானம் தாங்கி கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முதன்மை அணி நீர் மூழ்கி கப்பலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக, மற்றொரு பாரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் கொரியா நோக்கி பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் தோன்றியுள்ள போர் பதற்றநிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் மற்றும் ஜேர்மனி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளநிலையில், தற்போது அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எறிகணை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இராணுவத்தினர் பலி!
27/04/2017 ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான எறிகணை முகாம் ஒன்றின் மீது, இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அதிகாரி ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

அதிகாலையில் திடீரென்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், எறிகணைக் களஞ்சியத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் முயற்சித்ததாகவும், தமது எதிர்த் தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் தவிர்க்கப்பட்டதுடன் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோதிலும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment