
சனிக்கிழமை 03 12 2016 இரவு Black town Bowman Hall மண்டபத்தில் Australian Medical Aid Foundation வழங்கிய முத்தமிழ் மாலை 2016 நிகழ்வில் இன்னிசை மாலை நிகழ்வு இடம்பெற்றது மெல்பேர்ன் நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக்குழுவினரின் இசை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக இலங்கையின் சக்தி தொலைக் காட்சியின் 2014 ஆண்டுக்கான
"ஜூனியர் சுப்பர் ஸ்டார்" விருதினைத் தட்டிக் கொண்ட செல்வி வைசாலி யோகராஜனும் கர்நாடக இசைப்பாடகியும் வைசாலியின் தாயாருமான ஸ்ரீமதி நீதிமதி யோகராஜனும் சிறப்பு பாடகர்களாக வருகை தந்து பாடல்களை பாடினார்கள் . இவர்களோடு உள்ளூர் இசைக்கலைஞர்களும் இணைந்து அருமையான பாடல்களை பாடினார்கள் . பாடல்கள் முடியும் வரை ரசிகர்கள் இருந்து பார்த்தார்கள். வைசாலி "ஜூனியர் சுப்பர் ஸ்டார்" விருதினைத் தட்டிக் கொண்டபோது பாடிய பாடலான “என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே” என்ற பாடலைப் பாடியபோது சபை அதிர கரவொலி எழுந்தது.
.
No comments:
Post a Comment