ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
தீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி
மறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி
விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..!
31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்
2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்
பல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்
ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
10/11/2015 ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே பேதங்கள் எதுவுமற்ற ஐக்கியம் அரசாட்சி செலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜை மூலம் வலியுறுத்தும் நன்நாளே தீபாவளித்திருநாள் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் இதய பூர்வமான பக்திப்பெருமித தீபாவளி பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் உலகிலிருந்து தீய செயல்களைப் போக்கி நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் ஏனைய உலக மக்களுக்கும் இந்திருநாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்படுகிறது.
உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனித நாகரிகத்தின் ஆரம்பகால யுகங்களிலும் மனிதனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடியதாயுள்ளது.
ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுவதைப் போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதன் காரணமாக அவர்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது.
அது பேதங்கள் எதுவுமற்ற ஐக்கிய அரசாட்சி செலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜையின் மூலம் எமக்கு வலியுறுத்துகிறது.
இவ்வாறான நற்செயல்களை நோக்கமாகக் கொண்ட பொதுவான பழக்கவழக்கங்களினூடாகவே மானிடப் பரிணாம வளர்ச்சியானது பயனுறுதிவாய்ந்ததாக இன்றுவரை வியாபித்துள்ளது. இவ்வாறு அனைத்து காலங்களுக்கும் பொருந்துகின்ற தீபாவளி போன்ற விழாக்கள் ஆன்மீக வழிபாட்டுப் பழக்கவழக்கங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும். இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதய பூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன். நன்றி வீரகேசரி
தீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்
09/11/2015 மலரவுள்ள தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை கொண்டாட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகிவருகின்றனர்.


நன்றி வீரகேசரி
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி
11/11/2015 உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு காணித்துண்டையும் விவசாயத்திற்கு உட்படுத்தி இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுவகைகளிலான உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்காலத்தில் நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜயம் செய்து இவ்வேலைத்திட்டத்தின் செயற்றிறன் தொடர்பில் ஆராயவுள்ளேன்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளேன்.
உள்நாட்டு உணவு உற்பத்தியை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக சிறந்த விவசாயியை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய உணவு உற்பத்திக்கான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் விவசாயிகளை பலப்படுத்துதல் நடவடிக்கைகளை கமத்தொழில் அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுடன் கூட்டிணைந்து மேற்கொள்வது முக்கியமானதாகும். உணவுவகைகளை இறக்குமதி செய்வதற்காக 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமானதொகை செலவாகிறது. எனவே உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
இரசாயனப் பொருட்கள், கிருமி நாசினிகள் பாவனையை குறைத்து சூழலுக்கு உகந்த முறைமைகளை முன்னெடுத்து உள்ளூர் உற்பத்தியை முன்னெடுப்பதே உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். நன்றி வீரகேசரி
மறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி
11/11/2015 மறைந்த சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் முக்கிய இடங்களில் மஞ்சள் கொடிகளை பறக்க விடப்பட்டுள்ளதுடன் அவரது ஞாபகார்த்த பதாதைகளும் தேரரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.
தேரர் ஒருவரின் மறைவிற்காக இவ்வாறு இம்மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். நன்றி வீரகேசரி
விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..!
11/11/2015 பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 அரசியல் தமிழ் கைதிகளை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வராதமையால் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. நன்றி வீரகேசரி
31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்
12/11/2015 தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு நிபந்தனையுடனான 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப் பிட்டிய நேற்றைய தினம் அனுமதியளித்துள்ளார்.
எனினும் ஆட்பிணைக்கான கையொப்பமிடுவதற்கு நேற்றைய தினம் எவரும் சமுகமளித்திருக்காததன் காரணமாக இன்றைய தினம் அந்நடைமுறைகள் நிறைவேற் றப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட வர்கள் வீடு திரும்புவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 ஆண்கள்இ 2 பெண்கள் உள்ளிட்ட 26 தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் ஐந்தாம் இலக்க மன்றில் நீதிபதி அருணி ஆட்டிகல முன்னிலையில் விசாரணைக்கு நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான பி.கிரிஷாந்தன், வி.நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க கூடாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெ ளியாகியுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களமும் பிணைவழங்கும் செயற்பாடுளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே எமது தரப்பினருக்கு பிணை வழங்கவேண்டுமென சட்டத்தரணிகள், கோரினர்.
இதன்போது நீதிபதி அருணி ஆட்டிக்கல பிரதிவாதிகளுக்கு விடுதலையளிப்பது தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் அதிகாரியின் கருத்தை வினவினார். அதன்போது பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் அதிகாரிஇ சட்டமா அதிபர் திணைக்களத்தால் தமக்கு எவ்விதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே பிரதிவாதிகளுக்கு பிணையளிப்பதற்கு அனுமதியளிக்க முடியாதென குறிப்பிட்டனர்.
இதனையடுத்து நீதிபதி அருணி ஆட்டிக்கல எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
இதன்போது வாக்குறுதிகளை வழங்கி எம்மை ஏமாற்றி விட்டார்கள், நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். எமக்கு விடுதலையளியுங்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள், நல்லாட்சியில் எமக்கு இதுவா நிலைமையென கோஷமெழுப்பியவாறு சிறைச்சாலை வாகனத்திற்குள் சென்றனர். வாகனத்திற்குள் சென்றும் தமது விடுதலையை வலியுறுத்தி பலத்த சத்தத்தில் கோஷமெழுப்பினர்.
அதேநேரம்இ தமது உறவுகளுக்கு இன்று(நேற்று) விடுதலையளிக்கப்படுமென்ற பாரிய எதிர்பார்ப்புடன் நீதிமன்ற வாயிலில் கூடியிருந்த உறவுகளும் தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு கோஷங்களை எழுப்பினர். அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் உள்ளிட்டோரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலையளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதனால் அவ்விடத்தில் பொலிஸாருக்கும் கோஷமெழுப்பியவர்களுக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டதால் பதற்றநிலையொன்று உருவானது. எனினும் பொலிஸார் நீதிமன்ற முன்றலில் குழுமியிருந்தவர்களை அகற்றியதுடன் தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றியனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நண்பகலுக்கு பின்னர் மீண்டும் நீதிவான் நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பித்தவேளை சட்டமா அதிபர் திணைக்களம் 31தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான அனுமதியை அளித்து நகர்த்தல் பிரேரணையொன்றை சமர்ப்பித்தது. இதன்போது மூன்று பெண்கள் உட்பட 31 தமிழ் அரசியல் கைதிகள் நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான மன்றில் பிரதம நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சிரேஷ்ட அரச சட்டத்தரணி நவாவி, பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர், நீதிமன்ற அலுவகர் உள்ளிட்ட அதிகாரிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். பிரதிவாதிகள் தரப்பில் பி.கிரிஷாந்தன்இ மங்களா சங்கர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழவினர் ஆஜராகியிருந்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பிரேரணை மீதான விசாரணையின் போது சட்டமா அதிபரின் அனுமதியைக் கருத்திற் கொண்ட நீதிவான் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய கைதிகளை பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் குறித்த 31பேரும் பிணையில் செல்வதானால் 10 இலட்சம்ரூபா பெறுமதியில் தலா இருவர் ஆட்பிணைக்கான கையொப்பமிடவேண்டியது அவசியம்இ எவரிடத்திலாவது கடவுச்சீட்டு காணப்படுமானால் அது நீதிமன்றில் ஒப்படைக்கப்படவேண்டும். கொழும்பு அல்லது வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் 14நாட்களுக்கு ஒருதடவை 9மணி முதல் 12 மணி வரையிலான காலவேளையில் கையொப்பம் இடவேண்டியது அவசியம் ஆகிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனவரி மாதம் இவ்வழக்கு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்தார்.
எனினும் பிணையில் செல்வதற்கான அனுமதி குறித்த 31பேருக்கும் வழங்கப்பட்டபோதும் அவர்களுக்கான ஆட்பிணைக் கையொப்பமிடுவதற்கான நபர்கள் இன்மையால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்றைய தினம் அவர்களின் பிணை தொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு வீடு செல்வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்
12/11/2015 அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர்.
இதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இரட்டை பிராஜவுரிமை வழங்கும் வைபவம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலமையில் நடைப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்
12/11/2015 மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதியுமான மாதுலு வாவே சோபித தேரரின் பூதவுடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற மைதானத்தில் பல்லாயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் சற்றுமுன்னர் அக்கினியில் சங்கமமானது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment