தமிழ் சினிமா


ஆரஞ்சு மிட்டாய்



கேட்கும் போதே சுவைக்க தூண்டும் பெயரை தலைப்பாய் வைத்துக்கொண்டு, டீஸர், ட்ரெய்லரை பார்த்தவுடனே முழு படத்தையும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைத்து, ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு, ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கிடையில் வந்திருப்பதுதான் “ஆரஞ்சு மிட்டாய்”.
கதை:
108 ambulance ல் EMT வேலை பார்க்கும் ரமேஷ் மற்றும் ஓட்டுனர் ஆறு பாலாவிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. இதுவரை 27 முறை மாரடைப்பு வந்த (ஆம் நம்புங்கள்) முதியவரான விஜய் சேதுபதிக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வர ரமேஷ், ஆறு பாலா அங்கு செல்கிறார்கள். பின் அடம் பிடிக்கும் பெரியவாரான விஜய் சேதுபதியை வண்டியில் ஏற்றிக்கொண்டு இவர்கள் படும் பாடு தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஒரு முரனான அல்லது யாரும் எதிர்ப்பார்க்காத பயணத்தை எடுத்துக்கொண்டு அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்து, மனித உறவுககளையும் கையாண்டு மிக அழகாக தெளிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜு விஸ்வநாத்.
படத்தில் வரும் மூன்று பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். முதியவராக வரும் விஜய் சேதுபதி அவரின் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் முக பாவனைகளிலும் தான் ஒரு கைத்தேர்ந்த நடிகர் என ஆணி அடித்தார் போல் நிருபித்திருக்கிறார். இவர் ரமேஷ்மிடமும் பாலாவிடமும் வாக்குவாதம் பண்ணும் காட்சிகளில் பவுண்டரிகளாக விளாசுகிறார். அதிலும் குறிப்பாக ஆட்டோவிலிருந்து இறங்கி நடு இரவில் குத்தாட்டம் போடும் இடம் “செம கைலாசம் (விஜய் சேதுபதி) சார்”.
தன் வேலையை மிகவும் நேசிக்கும் ரமேஷ் ஒரு பொறுப்பான கதாப்பாத்திரத்தில் வந்து என்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார். குறிப்பாக Emotional காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக்கிற்க்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அட்டக்கத்தியில் சிறு கதாப்பாத்திரத்தில் வந்த பாலா இந்த படத்தில் ஒரு முழு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வந்து தன் பங்கை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறார், “Welcome பாலா”. ரமேஷிற்கு ஜோடியாக வரும் ஆஷ்ரிதா தன் முதல் படமான இதில், குறைவான நேரமே வந்தாலும் தன் வேலையை சரியாக செய்திறுக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
தன் வசனத்தின் மூலம் படத்திற்க்கு மேலும் பலம் கூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கு முன் தான் இயக்கிய எல்லா படங்களிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் பிஜு விஸ்வநாத் இப்படத்திலும் நகைச்சுவையையும், உணர்ச்சிகளும் சரியான கலவையாக தந்திருக்கிறார். இவரே எடிட்டிங் ஒளிப்பதிவு செய்ததினால் தனக்கு என்ன வேண்டுமோ அதை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.
படத்தின் மற்றுமொரு பெரிய பலம் ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான் என்றால் அது மிகையாகாது. பாடல்களிலும் சரி பின்னணியிலும் சரி பின்னி எடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு வித்தியாசமான படைப்புகள் தான் தமிழ் சினிமாவிற்கு மற்றும் ஒரு பரிமானத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமமும் இல்லை.
கிளாப்ஸ்:
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. படத்தின் வித்தியாசமான கதைக்களமும் அதை கையாண்ட விதமும் மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை. படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக அமைத்ததும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதை தவிர விஜய் சேதுபதியின் சிகையலங்காரம்.
பல்ப்ஸ்:
சில காட்சிகளில் அழுத்தம் இன்னும் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் தந்தை-மகன் பாசத்தை மட்டும் கையாளாமல், வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை புளிப்பு-இனிப்பு சுவையுடன் சொல்லியிருக்கும் இந்த ஆரஞ்சு மிட்டாயை அனைவரும் கட்டாயம் சுவைக்கவேண்டும்
.
Rating: 3.25/5
நன்றி cineulagam  




No comments: