ஐ.எஸ். தீவிரவாதிகளால் உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரணதண்டனை
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 படைவீரர்கள் பலி
இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்
40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு

29/06/2015 ஐ.எஸ். தீவிரவாதிகள், உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். சிரிய ரக்கா நகரில் இந்த மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வீதிகளினூடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அந்த இருவரும் 'மிக்21' விமானமொன்றின் சிலைக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து இரு முகமூடி அணிந்த இரு துப்பாக்கிதாரிகள் அந்த இருவரதும் தலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவர்களைக் கொல்கின்றனர்.
ஆயுதம்தாங்கிய பெருமளவு பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் முன்பாகவே இந்த மரணதண்டனை நிறைவேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
சிவப்பு நிற பிளாஸ்டிக் ஆடைகள் அணிவிக்கப்படும் அந்த நபர்களது சடலங்கள் சிலுவையொன்றில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் 14 இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அவற்றில் 4 தாக்குதல்கள் துருக்கிய எல்லையிலுள்ள கொபேன் நகரில் இடம்பெற்றுள்ளன.
கொபேன் நகரை கைப்பற்றும் முகமாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 145 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நன்றி விரகேசரி
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 படைவீரர்கள் பலி
30/06/2015 ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹேரத் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 ஆப்கான் படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.
காருக் மாவட்டத்தில் படையினர் பய ணம் செய்த வாகனத் தொடரணியை இல க்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 6 க்கு மேற்பட்ட படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து படையினருக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்களை நட த்தி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் இந்த வருட த்தில் முந்திய வருடங்களை விடவும் மோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலான நேட்டோவின் படை நடவடிக்கை 13 வருடங்களின் பின் கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் உள்நாட்டுப் படையி னருக்கு பயிற்சி மற்றும் ஆதரவுகளை வழங்கும் முகமாக சொற்ப படையினர் மட்டும் அந்நாட்டில் தொடர்ந்து தங்கியுள் ளனர். நன்றி விரகேசரி
இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
01/07/2015 இந்தோனேசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் தயாரிப்பான ‘சி–130 ஹெர்குலிஸ்’ என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தோனேசிய நேரப்படி நேற்று மதியம் 12.08 மணிக்கு சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேட்டுனா தீவுக்கு 113 பேருடன் புறப்பட்டு சென்றது.
இதில் 3 விமானிகள் , சிப்பந்திகள் உட்பட 101 பேர் பயணிகள் இதில் பயணித்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்கள் விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர்.
இந்நிலையில், குறித்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 நிமிடங்களில் விமானப்படை தளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து பலத்த சேதம் அடைந்தன.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
பின்னர் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இறுதியில் விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் பலியாகி விட்டதாகவும் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் அகப்பட்ட பொதுமக்களும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்ததுள்ளது. விமான விபத்துக்கு இயந்திரக்கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்குள்ளான விமானம் 51 ஆண்டுகால பழமை வாய்ந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி விரகேசரி
யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்
02/07/2015 யேமனிய ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பொதுமக்கள் பலியானதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
அல் மன்சூரா பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலிலேயே இவ்வாறு பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் சிறைச்சாலையொன்றிலிருந்து அல் கொய்தா சந்தேகநபர்கள் உட்பட சுமார் 1500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய தாயிஸ் நகரிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களையடுத்தே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை. நன்றி விரகேசரி
40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு
02/07/2015 அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பதற்கு 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கமராக்களில் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெல் ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, புகைப்பட துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் இனி வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், பிளாஷ், வீடியோ மற்றும் நேரடி ஒளிபரப்புகளுக்கு தடை நீக்கப்படவில்லை. ஓரிரண்டு சாதாரண புகைப்படங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்ள முடியும். நன்றி விரகேசரி
No comments:
Post a Comment