பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி
ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி
உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை
பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா
தலைநகரில் சுஹ்ரவர்டி உடியன் பிராந்தியத்தில் அந்நாட்டின்
தந்தையான ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் 1971 ஆம் ஆண்டு ஆற்றிய வரலாற்று
முக்கியத்துவம் மிக்க உரையைக் குறிக்கும் வகையில் ஆளும் அவாமி லீக்
கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள
ஹஸினா சென்ற வேளையிலேயே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி
நன்றி வீரகேசரி
ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி
உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி
ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி
உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை
பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா
09/03/2015 பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸினா குண்டு தாக்குதல்களிலிருந்து மயிரிழையில் சனிக்கிழமை உயிர்தப்பியுள்ளார்.
தலைநகர் டாக்காவிலுள்ள கர்வன் பஸார் பிராந்தியத்தில் ஹஸினாவின்
வாகன தொடரணிகள் கடந்து சென்றதற்கு 10 நிமிடங்களின் பின்னர் பல
குண்டுகள் வெடித்துள்ளன.

மேற்படி குண்டு வெடிப்புக்களில் சிக்கி ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 5 ஆம் திகதி பங்களாதேஷ் எதிர்க்கட்சியான பி.என்.பி.
கட்சி தலைமையிலான 20 கட்சிகளின் கூட்டமைப்பால் வீதி மறியல்
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற வன் முறைகளில்
100க்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர். நன்றி வீரகேசரி
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி
10/03/2015 வட
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத குழுவால் செயற்படுத்தப்பட்டு வரும்
எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான
கூட்டமைப்பின் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 30
பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம்
திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
ரக்கா நகரிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் மீது
அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படையினர் இரு வான்
தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பின் படையினர் கடந்த செப்டெம்பர்
மாதத்திலிருந்து சிரியாவில் வான் தாக்குதல்களை
நடத்தியுள்ளனர்.அத்துடன் அயல் நாடான ஈராக்கிலும் ஐ.எஸ்.
தீவிரவாதிகளை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டு
வருகின்றன.
ஐ.எஸ். தீவிரவாதிகள் எண்ணெய் விற்பனை மூலம் நாளொன்றுக்கு ஒரு
மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருவதாக
கூறப்படுகின்ற நிலையில் அந்த தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும்
எண்ணெய் நிலையங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள்
நடத்தப்படுவது வழமையாகவுள்ளது.
அதேசமயம் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் அல் -
கொய்தாவுடன் தொடர்புடைய அல்-நுஸ்ரா போராளி குழுவை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த போராளி குழுவைச் சேர்ந்தது குறைந்தது
9 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் சிரிய தலைநகருக்கு வடகிழக் கேயுள்ள புறநகரப் பகுதிகளில்
அரசாங் கப்படையினர் நடத்திய வான் தாக்குதல் களில் இரு சிறுவர்கள் உட்பட
குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி
11/03/2015 ஆர்ஜென்டீனாவில் இரு உலங்குவானூர்திகள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 8 பிரான்ஸ் பிரஜைகளும் 2 ஆர்ஜென்டீன விமானிகளும் பலியாகியுள் ளனர்.
பலியானவர்களில் பிரான்ஸை சேர்ந்த ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான கமிலி முப்பட், ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரான அலெக்ஸிஸ் வஸ்ரின், படகோட்ட வீராங்கனையான புளோரன்ஸ் ஆர்தோட் ஆகிய 3 விளையாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
கமிலி (25 வயது) 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டி நிகழ்வில் 400 மீற்றர் நீச்சலில் தங்கப் பதக்கத்தை வென்றவராவார். அதேசமயம் அலெக்ஸிஸ் (28வயது) 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவராவார்.
அவர்கள் பயணம் செய்த உலங்குவானூர்தியானது சனல் ரி.எப்.1 தொலைக்காட்சி சேவைக்கான பிரபலங்கள் தொடர்பான படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. நன்றி வீரகேசரி
உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்
12/03/2015 ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 19 வயது இஸ்ரேலிய - அரேபிய பிரஜையொருவரை சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்வதை வெளிப்படுத் தும் புதிய வீடியோ காட்சியொன்று அந்தப் போராளி குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி இஸ்ரேலிய - அரேபியரான முஹமட் செய்த் இஸ்மாயில் முஸலம் என்ற மேற்படி பணயக்கைதி இஸ்ரேலிய புலனாய்வாளர்களால் சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரை உளவு பார்க்க அனுப்பப்பட் டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இஸ்மாயில் வெளிநாட்டுப் போராளி போன்று காண்பித்து தமது குழுவினருடன் இணைந்து கொண்டதாக ஐ.எஸ் தீவிரவாதக்குழு தெரிவித்துள்ளது.
இஸ்மாயில் இஸ்ரேலிய புலனாய்வு நிலை யமான மொஸாட்டிற்காக உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டிற்கு இஸ்ரேலும் அவரது குடும்பத்தினரும் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
''ஐ.எஸ் தீவிரவாத குழு தனக்கென ஒரு குறிக்கோளை கொண்டுள்ளதால், இதனை செய்கிறது. அது முழு உலகையும் அச்சப்படுத்த விரும்புகிறது'' என இஸ்மாயிலின் தந்தையான செய்த் முஸலம் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பை விட்டு இஸ்மாயில் தப்பிச் செல்ல முயற்சித்தமை காரணமாகவே அவரை உளவாளி என தீவிரவாதிகள் போலி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் அவர் உண்மையில் அப்பாவி எனவும் மேலும் அவர் கூறினார்.
தனது மகன் 2014 ஆம் ஆண்டு துருக்கிக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட போது, காணாமல் போனதாகவும் பின்னர் வட சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலம் பெற்று விளங்கும் ரக்கா நகரிலிருந்து அவர் தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்டதாகவும் செய்த் முஸலம் தெரிவித்தார்.
அந்த 13 நிமிட வீடியோ காட்சியில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து காணப்பட்ட இஸ்மாயில் இரு சீருடையணிந்த தீவிரவாதிகள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அந்த தீவிரவாதிகளில் ஒருவர் 12 வயதிலும் குறைந்த சிறுவன் போன்று காணப்படுகிறான்.
அவன் துப்பாக்கியை இஸ்மாயிலை நோக்கி தூக்கிப் பிடிப்பதும் பின்னர் அவரது தலையை நோக்கி குறி பார்ப்பதும் இஸ்மாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு நிலத்தில் சரிந்து கிடப்பதும் அந்த வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளன.
அந்த சிறுவனின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து பாய்ந்த ரவையால் இஸ்மாயில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியாத வகையில் அந்த வீடியோ காட்சி படமாக்கப்பட்டிருந்தது. நன்றி வீரகேசரி
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஹமட் நஷீட் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment