.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 32 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நினைவுப் பேருரை 15.02.2015 மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6 ல் உள்ள தர்மராம மாவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.'பண்பாட்டின் தன்மைகளும் இலங்கைத் தமிழர்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு உரையாற்றினார்.

செல்வி திருச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மண்டபம் நிறைய கல்விமான்களும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் நிறைந்திருந்த சிறப்பான கூட்டம்.
திருமதி கைலாசபதி அவர்களும் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.செல்வி திருச்சந்திரன் பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு மூன்று நிலைப்பட்டது என்றார்.
தனது மூத்த அண்ணனுடன் நெருங்கிய நட்பாக இருந்ததில் அறிமுமாகியது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கடைசி சில மாதங்கள் அவரது மாணவியாக கற்ற முடிந்தமை இரண்டாவது நிலை. தனது தந்தையாரை பேராசரியர் தனது ஞானகுருவாக போற்றியமை மூன்றாவது நிலை என்றார்.
பேராசிரியர் மௌனகுருவும் தனது நினைவுப் பேருரையை ஆரம்பிக்கும் முன்னர், பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு பற்றிக் கூறிப்பிட்டார்.
பலவிடயங்களைக் குறிப்பட்டபோதும் நாட்டுக் கூத்து முதலான கிராமியக் கலைகளில் தன்னை ஈடுபட வைத்தமை பற்றிக் கூறிப்பிட்டமை மனதில் நிற்கிறது.
அவரது உரையானது பண்பாடு என்றால் என்ன? தமிழகத்தின் பண்பாண்டு கோலங்கள், இலங்கையின் பண்பாடு ஆகிய மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது.
பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையானது அல்ல. அது பன்முகம் கொண்டது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் என வேறுபட்டதை அழகிய உதாரணங்களுடன் குறிப்பட்டார்.
பிரதேசங்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு சிறுகுழுவினருக்கும் தனித்துவமான பண்பாடுகள் உள்ளன. அவை நிலையானவை என்று சொல்ல முடியாது. காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதையும் வலியுறித்தினார்.
மதரீதியான மாறுபட்ட பண்பாட்டுக் கோலங்களையும் சுட்டிக் காட்டினார்.
பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒருமைப்படுத்த முயல்வார்கள். உதாரணத்திற்கு சோழர் காலத்தில் பல்வேறு வழிபாட்டுமுறைகளுக்கு மாறாக சைவம் சிவ வழிபாடு போன்றவை முன்னிலைப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பல வேறுபட்ட பண்பாட்டுக் கோலங்களை விளக்கியபோது அவற்றில் பலவற்றை நான் அறியாது இருந்ததை உணரமுடிந்தது.
சிறப்பான கூட்டம். 6 மணியளவில் நிறைவுற்றது.
அவரது பேருரையின் முழுமையான வடிவம் எப்பொழுது படிக்கக் கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கச் செய்கிறது.
NANTRI suvaithacinema.blogspot.com
No comments:
Post a Comment