.

தமிழ் சினிமாவில் என்றுமே கமர்ஷியல் படங்களுக்கு ஒரு வரவேற்பு இருந்து
கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சுந்தர்.சி என்றால் சொல்லவா வேண்டும்,
ஏற்கனவே விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகிய மதகஜராஜா படம் இன்னும்
வெளிவரவில்லை.
ஆனால், அதெல்லாம் பார்த்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல
முடியாது என தன் சொந்த தயாரிப்பிலேயே விஷால் களம் இறங்கியிருக்கும் படம்
தான் ஆம்பள. பூஜை போட்ட முதல் நாளே கூறியது போல் இந்த பொங்கலுக்கு
வெளிவந்தது.
கதை
கதையாக ஆம்பள படத்தை
பார்த்தோம் என்றால் புதிதாக ஒன்றுமில்லை, பிரிந்த குடும்பத்தை சேர்த்து
வைக்கும் தமிழ் சினிமாவின் 75 வருட ஹிட் பார்முலா கதை தான். இதை சுந்தர்.சி
அவர்களே பல படங்களில் கையாண்டுள்ளார்.
விஷாலுக்கு மூன்று அத்தைகள்,
அவர்கள் எல்லோருக்கும் ஒரு பொண்ணு, அந்த பெண்ணை தான் நீ திருமணம் செய்ய
வேண்டும் என பிரபு கட்டளையிடுகிறார். அண்ணன், தம்பி என ஒரு பட்டாளத்துடன்
தன் ஊருக்கு கிளம்புகிறார் விஷால்.
அங்கு தன் அத்தைகளுக்கு
தெரியாமல் அத்தை பெண்களை கடத்த நினைக்கும் விஷாலின் முடிவு விபரீதமாகிறது.
இதை தொடர்ந்து தன் அத்தை பெண்களை விஷால் பிரதர்ஸ் குருப் கைப்பிடித்ததா?
என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஆம்பள
என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் விஷால் மிரட்டுகிறார். ஹன்சிகா வழக்கம்
போல் என்று சொல்வதை விட வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கவர்ச்சி
காட்டியிருக்கிறார். சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சமே
இல்லை, தனக்கு கொடுத்த வேலையை கலக்கலாக செய்து கொடுத்துள்ளார்.
அதிலும்
தன் வழக்கமான கவுண்டர் ஸ்டைலில் ’காவி டிரஸ் போட்டவன் எல்லாம் கலர் கலரா
பிகரை கரெக்ட் பண்ணும்போது காக்கி சட்டை போட்ட நான் கரெக்ட் பண்ணக்கூடாதா?’
என கேட்கும் இடத்தில் கைத்தட்டல் அடங்க நேரமாகிறது.
சதீஸ், வைபவ்
எல்லாம் சைடிஸ் போல தான் உள்ளனர். அத்தை பெண்களை பார்ப்பதா? அல்லது
அத்தைகளையே பார்ப்பதா? என ரம்யா கிருஷ்ணன், கிரண் என்று சுந்தர்.சி செம்ம
விருந்து வைத்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழன் ஆதி இசை இளைஞர்களை கண்டிப்பாக
கவரும், பாடல்களில் பழகிக்கலாம் மட்டும் ஓகே.
க்ளாப்ஸ்
விஷாலின்
துறுதுறு நடிப்பு+ஹன்சிகா கிளாமர், இதையெல்லாம் தன் ஒரு வரி கவுண்டர்
வசனத்தால் ஓரங்கட்டுகிறார் சந்தானம். ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக
இருக்கிறது.
பல்ப்ஸ்
பார்த்து கசந்து போன
திரைக்கதை, யூகிக்கும் அடுத்தடுத்த காட்சி.மொத்தத்தில் இந்த ஆம்பள இன்னும்
கொஞ்சம் கம்பீரமாக இருந்திருக்கலாமோ? என கேட்க வைக்கிறது.
ரேட்டிங்-2.5/5
நன்றி cineulagam
No comments:
Post a Comment