உலகச் செய்திகள்


போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு

ஈராக்­கிய சிறு­வர்­க­ளுக்கு இரா­ணுவ பயிற்சி

அமெரிக்க பெர்குஷன் நகரில் தொடர்ந்து இரண்டாவது இரவாக கலவரம்; பலர் கைது

போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு

25/11/2014 அமெ­ரிக்­காவில் கிளேவ்லாண்ட் நக­ரி­லுள்ள விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் போலி துப்­பாக்­கி­யுடன் விளை­யா­டிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ளான்.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்­படி சிறுவன் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யா­டிய வேளை, தனது கையில் இருந்த விளை­யாட்­டுத்­துப்­பாக்­கியை ஏனை­ய­வர்­களை குறி­பார்ப்­பது போன்று தூக்­கிப்­பி­டித்­துள்ளான்.


 இந்­நி­லையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்­பாக்கி இருப்­ப­தாக தவ­ற­தாக கரு­திய ஒருவர் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் அறி­விக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது இரு தட­வைகள் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.
இதன் போது ஒரு துப்­பாக்கி ரவை தாமிரின் வயிற்றை துளைத்துச் சென்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்­லப்­பட்ட தாமிர் சிகிச்சை பலன் அளிக்­காத நிலையில் உயி­ரி­ழந்­துள்ளான்.
மேற்­படி, துப்­பாக்கிச் சூட்­டுடன் தொடர்­பு­பட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களில் ஒருவர் உள்ளூர் பொலிஸ் படையில் ஒரு வரு­டத்­திற்கு முன்பே இணைந்துள்ளார். ஏனையவர்கள் பொலிஸ் துறையில் 10 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர்களாவர்.  நன்றி வீரகேசரி 







ஈராக்­கிய சிறு­வர்­க­ளுக்கு இரா­ணுவ பயிற்சி

26/11/2014   ஐ.எஸ். போரா­ளிகள் சின்­னஞ்­சி­றார்கள் இரா­ணுவப் பயிற்­சி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.


 'த பிளட் ஒப் ஜிஹாத் 2' என்ற தலைப்­பி­லான இந்த வீடியோ காட்சி ஈராக்கில் ஐ.எஸ். போரா­ளி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள நினெவெஹ் மாகா­ணத்தில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.
இளம் சிறார்கள் வரி­சையில் நின்று துப்­பாக்கிச் சூட்டை நடத்­து­வது, சண்டைப் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது ஆகிய காட்­சி­களை இந்த வீடியோ காட்சி உள்­ள­டக்­கி­யுள்­ளது.
அந்த வீடியோ காட்­சியில் தோன்றும் சிறு­வர்கள் 12 வயது அல்­லது 13 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடையவர்கள என நம்பப்படுகிறது.   நன்றி வீரகேசரி 












அமெரிக்க பெர்குஷன் நகரில் தொடர்ந்து இரண்டாவது இரவாக கலவரம்; பலர் கைது

அமெ­ரிக்க பெர்­குஷன் நகரின் புற­ந­கரப் பகு­தி­யான சென். லூயிஸில் இரண்­டா­வது இர­வாக செவ்­வாய்க்­கி­ழமை இரவு உக்­கிர மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன.
 பெர்­குஷன் நகரில் நிரா­யு­த­பா­ணி­யாக வந்த கறுப்­பின இளை­ஞ­ரான மைக்கேல் பிற­வுணை சுட்டுக் கொன்ற வெள்ளை இன பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான தரென் வில்­ஸ­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு எத­னையும் சுமத்­து­வ­தில்லை என நீதி­மன்றம் தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து மேற்­படி பிராந்­தி­யத்தில் வன்­முறை ஆர்ப்­பாட்­டங்கள் கிளர்ந்­தெ­ழுந்­துள்ளன.

ஆரம்­பத்தில் பெர்­குஷன் நக­ரிலும் அதை அண்­டி­யுள்ள பிர­தே­சங்­க­ளிலும் கிளர்ந்­தெ­ழுந்த ஆர்ப்­பாட்­டங்கள் தற்­போது நாட­ளா­விய ரீதியில் விரி­வாக்கம் அடைந்­துள்­ளன.
நியூ­யோர்க்­கி­லி­ருந்து சியட்டில் வரை எதிர்ப்பு ஊர்­வ­லங்கள் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யாக இடம்­பெற்­றன.ஆனால், கலி­போர்­னிய ஒக்­லாண்டில் கல­வரம் கிளர்ந்­தெ­ழுந்­துள்­ளது.
சென்­ லூ­யிஸின் புற­ந­கரப் பகு­தி­களில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற பிர­தான கல­வ­ரத்­தை­ய­டுத்து, அங்கு மேலும் பதற்ற நிலை ஏற்­ப­டு­வதைத் தடுக்க 2200 தேசிய காவற்படை­யினர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 18 வய­தான மைக்கேல் பிறவுண் கொல்­லப்­பட்­டமை பிராந்­தி­யத்தில் இன ரீதி­யான கடும் பதற்­ற­நி­லையை தோற்­று­வித்­துள்­ளது.மைக்கேல் பிற­வுணை சுட்டுக் கொன்ற தரென் வில்ஸன் விப­ரிக்­கையில், "நான் எனது பணியை செய்­துள்ளேன்" என்று கூறினார்.
அந்த நகரைச் சேர்ந்த ஆபி­ரிக்க– அமெ­ரிக்க சமூ­கத்­தினர் தரென் வில்ஸன் மீது படு­கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­ப­டு­வதை எதிர்­பார்த்­துள்­ளனர்.பெர்­குஷன் நகரில் பெரு­ம­ளவு படை­யினர் குவிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு செவ்­வாய்க்­கி­ழமை பகல் பொழுதில் பெரு­ம­ளவு அமைதி நில­வி­யது.எனினும் அன்­றைய தினம் மாலை மீண்டும் பதற்றநிலை அதி­க­ரித்­தது.
இதன்­போது, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களால் பொலிஸ் வாகனம் ஒன்று தீ வைத்து கொளுத்­தப்­பட்­டுள்­ளது.மத்­திய சென் லூயி­ஸி­லுள்ள பிர­தான வீதி­யொன்றை சிறிது நேரம் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் முற்­று­கை­யிட்­டி­ருந்­தனர்.அத்­துடன் நீதி­மன்றக் கட்­ட­டத்­துக்கு வெளி­யிலும் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன.
பொலிஸார் புகைக் குண்­டு­க­ளையும் கண்ணீர் புகை­யையும் பிர­யோ­கித்து ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடுப்­பட்­டனர்.அத்­துடன் பெரு­ம­ள­வானோர் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­டனர்.
ஒக்­லான்டில் சான்­பி­ரான்­ஸிஸ்கோ பிர­தே­சத்தில் கல­கத்தில் ஈடு­பட்­ட­வர்கள் பொலிஸ் கார்­க­ளுக்கும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் தீ வைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.
அங்கு கார் விற்­பனை நிலையம், கைய­டக்கத் தொலை­பேசி விற்­பனை நிலையம் உள்­ள­டங்­க­லாக பல இடங்­களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை சிக்காகோ நகரில் உரையாற்றுகையில், நாச வேலைகளிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது எனவும் அவர்கள் விசாரணைக் குட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.   நன்றி வீரகேசரி 





No comments: