செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை
சீரற்ற காலநிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு
சீரற்ற காலநிலையால் 44 ஆயிரத்து 91 பேர் பாதிப்பு
மாத்தறையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு ஏற்படும் அபாயம்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியது
ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும் : மோடியுடனான சந்திப்பில் ஜெயலலிதா
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு
மொரட்டுவை விடுதியிலிருந்து வடபகுதி இளைஞர்கள் 13 பேர் கைது
புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
================================================================
செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை
02/06/2014 மட்டக்களப்பு செங்கலடி வர்த்தகர்களான சிவகுரு ரகு அவரின் மனைவியான சுந்தரமூர்த்தி விப்ரா இரட்டைக்கொலை வழக்கின் நான்கு எதிரிகளில் மூவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நான்காவது எதிரியான மேற்படி தம்பதியரின் மகளான ரகு தலக் ஷனாவின் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி. சந்திரமணியினால் இதற்கான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக தம்பதியினரான ரகு விப்ரா இருவரும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட ஏறாவூர் பொலிஸார் எஸ். அஜத், கு. நிலக்சன், பு. சுமன், ஆர். தலக் ஷனா ஆகியோரை கைது செய்ததுடன் அவர்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட இவ்வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
செய்யப்பட்ட இவ்வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கு முதலாவது எதிரியான எஸ். அஜந் 4ஆவது எதிரியான ஆர். தலக் ஷனா ஆகிய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரியந்தி வேல் முருகு மனு தாக்கல் செய்தார். 2ஆவது எதிரியான கு. நிலக்ஷன் 3ஆவது எதிரியான பு. சுமன் ஆகிய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிறேம்நாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து 1ஆம், 2ஆம், 3ஆம் எதிரிகளை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய அனுமதி அளித்து மட்டு. மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவர்கள் கடவுச் சீட்டு பெறவும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திங்கள் வியாழன் ஆகிய இரு தினங்களிலும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்தல் வேண்டும். அத்துடன் இவர்கள் நன்னடத்தையானது நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர்களால் கண்காணிக்கப்படவும் வேண்டும்.
2ஆம் 3ஆம் எதிரிகள் 50 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 10 இலட்சம் ரூபாவுக்கு சரீரப்பிணையும் செலுத்தல் வேண்டும். சரீரப்பிணையாளிகளில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும். முதலாவது எதிரிக்கு 75 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் விதிக்கப்பட்டது. சரீரப்பிணையாளிகளில் இருவர் அரச உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.
நன்றி வீரகேசரி
03/06/2014 நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சீரற்ற காலநிலை காரணமாக 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
சீரற்ற காலநிலையால் 44 ஆயிரத்து 91 பேர் பாதிப்பு
04/06/2014 நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 44 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 103 வீடுகள் முழுமையாகவும், 683 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டவர்கள் 23 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
மாத்தறையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு ஏற்படும் அபாயம்
04/06/2014 மாத்தறை மாவட்டத்திலே நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி அதிகாரி ரஞ்சித் ஜயசிங்க ஆரச்சி தெரிவித்தார்.

கொட்டப்பொல பஸ்கொட முலடிய பிடபெத்தர ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழையின் காரணமாக நில்வளா மற்றும் ஜின்கங்கை என்பன பெருக்கெடுத்துள்ளதோடு அதனை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது. குறிப்பாக அக்குரஸ்ஸ - உடுகம, அக்குரஸ்ஸ - மாத்தறை, அக்குரஸ்ஸ - தெனியாய, அக்குரஸ்ஸ - கம்புறுப்பிட்டிய ஆகிய பாதைகளில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்பட்டதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
நேற்று மாலை அக்குரஸ்ஸ நகரில் வியாபார நிலையங்களுக்கு வெள்ள நீர் உட்புகுந்தமையால் வர்த்தக நிலையங்களிலிருந்து பொருட்கள் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் 345 குடும்பங்களைச் சேர்ந்த 1118 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மழையுடன் கூடிய காலநிலையின் பொழுது தெனியாய – இரத்தினபுரி வீதி, தெனியாய – எம்பிலிப்பிட்டிய வீதிகளில் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை ஜின்கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இனிதும, உடுகம, தெல்லவ ஆகிய பிரதேசங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியது
04/06/2014 நாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலை வழமை நிலைக்கு திரும்பி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 22,500 ற்கும் அதிகமானோர் பதிக்கப்பட்டுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும் : மோடியுடனான சந்திப்பில் ஜெயலலிதா
04/06/2014 இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியிலும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புதுடில்லியில் சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,
இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கோரிக்கை கடிமொன்றையும் கையளித்தார். இலங்கை பிரச்சினை குறித்து அக்கடிதத்தில்இ ஜெயலலிதாஇ இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐ.நா.வில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்.
பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்இ 1974இ 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு இரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நன்றி வீரகேசரி
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு
03/06/2014 நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் எதிரான நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று செயலில் இறங்கியுள்ளது.

முஸ்லிம் சட்டத்தரணிகள், கல்வியியலாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், உளவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் என பல துறைகளைச் சேர்ந்த 30 பேர் இக்குழுவில் அங்கம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினரால் 24 மணிநேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு நாட்டில் எந்தப் பகுதியில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள், நாசகாரச் செயல்கள் என்பவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். குறிப்பிட்ட முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் அடங்கிய குழு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதுடன் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாட்டில் எப்பகுதியிலென்றாலும் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை உடனுக்குடன் அறியத்தருமாறு குறிப்பிட்ட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 24 மணி நேர சேவையிலுள்ள தொலைபேசி இலக்கங்களாவன 075 9700910, 075 9700911, 075 9700912, 075 9700913 இத்தொலைபேசி இலக்கங்களூடாகத் தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் தேவையேற்படின் குறிப்பிட்ட குழு ஸ்தலத்துக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பதற்றமான சூழ்நிலைகளை பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து தீர்த்துவைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும். வழக்கு தாக்கல் செய்யும் நிலைமையேற்பட்டால் இக்குழுவிலுள்ள சட்டத்தரணிகள் மூலம் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
மாவட்ட ரீதியில் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை வளர்ப்பதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிங்கள மக்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் சிங்கள, முஸ்லிம் இனங்கள் தொடர்பாகவும் இடம்பெறும் இனங்களுக்கிடையிலான முறுகல் சம்பவங்கள் தொடர்பாகவும் வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் காண்பதற்கு ஆலோசனை வழங்கப்படும். ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நன்றி வீரகேசரி
மொரட்டுவை விடுதியிலிருந்து வடபகுதி இளைஞர்கள் 13 பேர் கைது
06/06/2014 சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்வதற்காக மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லுனான பிரதேச விடுதியொன்றில் தங்கியிருந்த வடபகுதியைச் சேர்ந்த 13 தமிழ் இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல இந்த இளைஞர்கள் தலா 10 ஆயிரம் ரூபா பணம் செலுத்தியுள்ளதாகவும் இந் நிலை
யில் மொரட்டுவையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொரட்டுவை, லுனான பகுதியில் விடுதிக்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் இந்த 13 இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர், தம்மிடம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொண்டதாகவும் மொரட்டுவையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக அவர் தம்மிடம் உறுதியளித்த நிலையிலேயே தாங்கள் இப்பகுதிக்கு வந்து குறித்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரிடமும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரிபுலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
05/06/2014 காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக இன்று காலை திட்டமிட்டபடி நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு நேற்று முதல் இராணுவ புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவற்றை தகர்த்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லை மண்ணில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் அவ் உறவுகளின் குரல்களை பலப்படுத்தும் வகையில் இன்று முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
காணாமல் போனாருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்படவேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்pன் ஏற்பாட்டில் நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு முல்லைத்தீவில் ரவிகரன் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரனுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர்.
தனித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்லவேண்டாம் எனவும் தாம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வோம் எனவும் அவர்கள் கூறியதாகவும் இதனால் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளமுடியுமோ என்ற தமது ஐயங்களையும் மக்கள் தன்னிடம் வெளிப்படுத்தியதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் முயற்சிகளை தகர்க்கும் பொருட்டு ரவிகரனால் முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் முயற்சிகளை முன்னெடுத்தார்.
தொடர்ந்தும் இன்று முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இராணுவத்தினரால் குழப்பங்கள் விளைவிக்கப்படலாம். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலும் வந்து சேர அவற்றை மீறி ஆர்ப்பாட்டத்தினை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களின் அழுத்தங்களை மீறியதாய் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் ரவிகரன் சிவாஜிலிங்கம் அன்ரனி ஜெகநாதன் மேரி கமலா குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் மணிவண்ணன் ஆகியோருடன் வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்பவந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து ரவிகரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் தமது உரைகளையாற்றி 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment