மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதப்போராட்டம்
வலிவடக்கில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உயர்பாதுகாப்பு
வலயத்திற்குள் உள்ள தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வீடுகள் கடந்த 23
வருடங்களுக்கு மேலாக இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்
அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்று
வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப்போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



நன்றி வீரகேசரி
எனது பங்கேற்பு இலங்கைக்கு ஆதரவு என்ற அர்த்தம் தராது:ஜோன் கீ
12/11/2013 இலங்கை அரசினால் புரியப்பட்டதாகக்
கூறப்படும் போர்க்குற்றங்களைக் காரணங்காட்டி பொதுநலவாய அரச
தலைவர்கள் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு பிரயோகிக்கப்பட்டுள்ள
அழுத்தங்களுக்கு இந்தியப் பிரதமர் முகம் கொடுக்க நேர்ந்துள்ள
போதிலும் மேற்படி உச்சி மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதாக நியூஸி
லாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளாரென ஏ. எவ். பி. செய்தி
ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

நியூஸிலாந்தின் தொலைக்காட்சி சேவைக்கு அவர் அளித்துள்ள
செவ்வியொன்றில் இந்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள்
மாநாட்்டிலான எனது பிரசன்னமானது கடந்த 2009ஆம் ஆண்டில்
இடம்பெற்றிருந்த உள்நாட்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது
பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று. குவித்ததாகக்
கூறப்படும் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வரும் இலங்கை அரசுக்கு
ஆதரவு வழங்குவதாக அர்த்தமாகாது இலங்கைக்கு நாங்கள் ஆதரவு
தெரிவிக்கப் போவதில்லை.
இது இலங்கையுடனான இருதரப்பு மாநாடொன்றல்ல, பொதுநலவாய அரச
தலைவர்கள் மாநாட்டை நடத்துபவர்களாகவே அவர்கள் உள்ளனர். எமது நாடு
பொதுநலவாய அமைப்பின் முக்கியமானதோர் உறுப்பு நாடாக
விளங்குவதாலேயே நான் இதில் பங்கேற்கவுள்ளேன் எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் மற்றும் தமிழர்
அமைப்புக்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் பிரதமர் மன்மோகன்
சிங் கொழும்பில் எதிர்வரும் 15 - 17 ஆம் திகதி காலப்பகுதியில்
நடைபெறவுள்ள மேற்படி உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டாரென இந்தியா
நேற்று முன்தினம் அறிவித்தது. கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும்
மேற்படி மாநாட்டை தான் புறக்கணிக்கப்போவதாக ஏற்கனவே
தெரிவித்துள்ளார்.
ஆயினும் உயர் மட்ட அரச தலைவர்களின் பிரசன்னமற்ற நிலையானது மேற்படி
மாநாட்டில் கலந்து கொள்வதென்ற தனது எண்ணத்தை மாற்றப்
போவதில்லையெனவும் கூறிய ஜோன் கீ. 50க்கும் மேற்பட்ட உறுப்பு
நாடுகளைக் கொண்ட பொதுநலவாய மாநாட்டில் ஒவ்வொரு நாடும்
பங்கேற்கவுள்ளது. இதனைப் புறக்கணிக்க எங்களாலும் முடியும். ஆயினும்
அது சரியான நடவடிக்கையென நான் கருதவில்லை.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலங்கையின்
வடபுலத்திற்கு நான் வெளிநாட்டமைச்சர் முர்ரே மக்கலியுடன் விஜயம்
செய்து நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளேன். மேற்படி மாநாட்டிற்கென
இலங்கை செல்லும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் உரிய முறையில்
மதிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் எனவும் மேலும்
குறிப்பிட்டார்.
எது எப்படியிருப்பினும் பசுமைக்கட்சியின் இணைத்தலைவர் ரசெல் நோர்மன் இது குறித்து தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் விவகாரம் குறித்து கேள்வியெழுப்பும் எவரும் அரசின்
கழுகுப்பார்வைக்கு இலக்காகும் வாய்ப்புக்களே அதிகமுள்ளதாகவும்
பொதுநலவாய மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்
தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தகைய தடையை மீறிச் செயற்படும்
எவரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படும்
சாத்தியமுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்
குறித்து கடந்த ஞாயிறன்று செயலாளர் மாநாடொன்றை நடத்துவதற்கு முன்பாக
பசுமைக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொகீ மற்றும் அவுஸ்திரேலிய
செனட்டர் லீ ரையனென் ஆகியோர் விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்
பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்
தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்தே நோர்மனின் இத்தகைய கருத்துக்கள் வெளி
வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல : கெலும் மெக்ரே விமான நிலையத்தில் தெரிவிப்பு
12/11/2013 தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள செனல் -4 தொலைக்காட்சியின்
தயரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும்
தெரிவித்துள்ளார்.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான
ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து
கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும்
மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே,
தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த
அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை
எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது தொடர்பிலும் தான்
ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தான் ஒரு நிர்மாணி என்ற வகையில் தனக்கு எந்தவொரு
நிர்மாணத்தினையும் படைக்கும் உரிமை உள்ளது என குறிப்பிட்ட அவர், தற்போது
தான் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாடு
தொடர்பில் செய்தி சேகரிப்பது மட்டுமே தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தில் விடுதலைபுலிகளின்
நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
குடிநீர் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்
11/11/2013 கண்டி- குருநாகல் வீதியில் கலகெதர பகுதியைச் சேர்ந்த மக்கள் தமக்கு குடிநீர் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி-குருநாகல் பிரதான பாதையை அண்மித்துள்ள கலகெதர கல்வெட்டிகந்த என்ற
மலைப் பாங்கான பகுதிக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நீர் விநியோகத்
திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட போதும் குழாய் மூலம் நீர் வருவது கிடையாது.
தண்ணீர் தொட்டிகள் வெறுமையாகவே உள்ளன. பிரதேச மக்கள் சுமார் ஒரு
கிலோமீற்றர் தூரம் இறங்கியே குடி நீரைப் பெற்று 160 படிக்கட்டுக்களை ஏறி வர
உள்ளதாகத் தெரிவித்தனர். இந்நிலையிலேயே தமக்கு குடிநீர் பெற்றுத் தரும்படி
கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நன்றி வீரகேசரி
பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பம்
10/11/2013 பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பமானது. அதனடிப்படையில்,
பொதுநலவாய இளைஞர் மாநாடும், மக்கள் மன்ற மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர்
மாநாடு அம்பாந்தோட்டையிலும் மக்கள் மன்ற மாநாடு ஹிக்கடுவயிலும்
நடைபெறுகின்றது.



















பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20
கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்ற அதேவேளை,
இலங்கை சார்பாக 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி
உறுப்பினர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் 8 முக்கியத் தலைப்புக்கள் தொடர்பில் ஆராயப்படுவதுடன்
இலங்கை அரச தலைவர்களுடன் இளைஞர் மாநாட்டின் தலைவர்கள் விசேட
கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Pics By: J.Sujeewakumar






















நன்றி வீரகேசரி
கொழும்பிற்குச் சென்ற காணாமல்போனவர்களது உறவினர்கள் தடுத்து வைப்பு
13/11/2013 மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சென்ற காணாமல் போனவர்களது உறவினர்கள்
இன்று புதன்கிழமை காலை மன்னார் கட்டையடம்பன் பகுதியில் தடுத்து
நிறுத்தப்பட்டமையினால் அந்த மக்கள் இன்று மதியம் வரை வீதி மறிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித
உரிமைகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னாரில் இருந்து
காணாமல் போன உறவுகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் இன்று
கொழும்பிற்கு செல்ல முற்பட்ட போது இன்று காலை 6.45 மணியளவில் மன்னார்
மதவாச்சி பிரதான வீதியில் உள்ள கட்டையடம்பன் சந்தியில் படைத்தரப்பால்
தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மன்னார் பிரஜைகள் குழுவும்,காணாமல் போனரை தேடும் குடும்பங்களின் சங்கமும்
இணைந்து ஏற்படு செய்திருந்த குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக
மன்னாரில் இருந்து காலை 6 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் காணாமல்
போனவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள்
கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது காலை 6.30 மணியளவில் மன்னார் மதவாச்சி பிரதான வீதி கட்டையடம்பன்
பகுதியில் இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் குறித்த மக்கள் தடுத்து
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அந்த மக்கள் தமது பயணத்தை தொடர அனுமதி மறுக்கப்பட்டமையினால்
குறித்த பேருந்தில் இருந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் காலை 9.15 மணி
முதல் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடான போக்குவரத்துகள் நீண்ட நேரம்
பாதிக்கப்பட்டது. சுமார் 10 மணிவரை வீதி மறியல் போராட்டம் இடம் பெற்றது.
பொலிஸார் விபரங்களை பதிவு செய்து உடனடியாக தமது பயணத்தை தொடர அனுமதி
வழங்குவதாக கூறியதனை தொடர்ந்து வீதி மறிப்பு போராட்டம் கை விடப்பட்டது.
எனினும் அனைவருடைய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர்கள் செல்ல
அனுமதி வழங்கப்படாமையினால் மீண்டும் காலை 10.30 மணிமுதல் காணாமல்
போனவர்களது உறவினர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 11.30 மணிவரை குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் பொலிஸார்
அவர்களின் பயணத்தை தொடர அனுமதி வழங்கிய போதும் இராணுவத்தினர் அனுமதி
மறுத்துள்ளனர்.
புலனாய்வுத்துறையினர் அதிகளவில் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்ததோடு
இராணுவத்துடன் இணைந்து அவர்கள் காணாமல் போனவர்களது உறவினர்களை கடுமையாக
அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் மக்கள் அஞ்சாது தொடர்ந்தும் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு இராணுவத்தினருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.
இதனால் மதவாச்சி- மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் நீண்ட நேரம் பாதிப்படைந்ததோடு வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
காலை 11.30 மணிளவில் வவுனியாவிற்கு செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.
ஏனைய இடங்களுக்காண அனுமதி மறுக்கப்பட்டதோடு பொலிஸ் பாதுகாப்புடனே செல்ல முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காணல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தமது
பயணத்தை நிறுத்தி மடு திருத்தலத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு தமது
இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், பெற்றோர் கொழும்பிற்கு
செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண சபை
உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா ஆகியோர் தமது வன்மையான
கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி


நன்றி வீரகேசரி








நன்றி வீரகேசரி
நன்றி வீரகேசரி


நன்றி வீரகேசரி
கெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்
13/11/2013 செனல் - 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே வடக்கு நோக்கிப் பயணித்த ரயிலை
அனுராதபுரத்தில் வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமென கெலும் மெக்ரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11.04 AM - ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலை இடைமறித்திருக்கிறார்கள்.
11.12 AM- நாம் இந்த ரயிலில் பயணிக்கும் செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கூறினார்கள்?
11.42 AM- ரயில் முன்னோக்கிச் செல்ல முடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
12.11 PM- நூற்றுக்கணக்கானோர் தடையாக இருக்கிறார்கள்.
12.34 PM- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வருகை தந்தார். நாம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையாக இருப்பதால் மீண்டும் கொழும்புக்குத் திரும்புமாறு கூறினார்.
12.36 PM- அடுத்துள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
1.24 PM- நாம் ரயிலிலிருந்து இறங்கிவிட்டோம். கருத்து சுதந்திரத்துக்கும் பொதுநலவாயத்தின் பெறுமதிக்கும் என்னவாயிற்று?
2.40 PM- தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கிறோம்.(விருப்பத்தின்பேரில் அல்ல)
11.12 AM- நாம் இந்த ரயிலில் பயணிக்கும் செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கூறினார்கள்?
11.42 AM- ரயில் முன்னோக்கிச் செல்ல முடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
12.11 PM- நூற்றுக்கணக்கானோர் தடையாக இருக்கிறார்கள்.
12.34 PM- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வருகை தந்தார். நாம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையாக இருப்பதால் மீண்டும் கொழும்புக்குத் திரும்புமாறு கூறினார்.
12.36 PM- அடுத்துள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
1.24 PM- நாம் ரயிலிலிருந்து இறங்கிவிட்டோம். கருத்து சுதந்திரத்துக்கும் பொதுநலவாயத்தின் பெறுமதிக்கும் என்னவாயிற்று?
2.40 PM- தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கிறோம்.(விருப்பத்தின்பேரில் அல்ல)




ஸ்ரீகொத்தாவில் பதற்றம்
14/11/2013 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான
ஸ்ரீகொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம்
நடத்துவதாகவும் இதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர்
தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல்
நிலை தோன்றியுள்ளதுடன் ஸ்ரீகொத்தாமீது கல்வீச்சு தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
(படம் : எஸ்.எம். சுரேந்திரன்)










பிரித்தானிய இளவரசர் இலங்கை வந்தார்
14/11/2013 பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பிரித்தானியவில் இருந்து விசேட விமானமொன்றின் மூலம் இன்று மாலை 4.20
மணியளவில் இவருடன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக 52 பேரடங்கிய
குழுவினரும் வருகைதந்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு
14/11/2013 மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியர்கள் மற்றும்

வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கான
மேலதிக நேர கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று காலை 9 மணி
முதல் 10 மணிவரை வைத்தியசாலை வளாகத்தினுள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு
போராட்டம் இடம்பெற்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ற
அளவிலேயே மேலதிக நேரக் கொடுப்பணவு வழங்கப்பட்டு வந்தது. அதற்கு மேலதிகமாக
உள்ள கொடுப்பணவுகள் வெட்டப்பட்டன. மே மாதம் முதல் தற்போது வரை அடிப்படைச்
சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றது.
மேலதிகக் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நாங்கள் பல முறை
உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். எனினும் இது வரை எவ்வித
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டோர்
தெரிவித்துள்ளனர்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் வைத்தியசாலையின்
வைத்திய அத்தியட்சகரிடம் தாதியர்கள் கையளித்ததையடுத்து வைத்தியசாலையின்
பணிகள் வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கையில் ஊடக சுதந்திரம் உள்ளதா : மெக்ரே கேள்வி
15/11/2013 ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி செனல் -4 இக்கு மறுக்கப்பட்டுள்ளது அப்படியானால் இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என கெலும் மெக்ரே கேள்வியெழுப்பினார்.
பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கென பிரித்தானிய
பிரதமரின் ஊடகக்குழுவின் ஊடாக இலங்கை வந்துள்ள கெலும் மெக்ரே இன்று மாலை
பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ்
சர்மா ஆகியோரால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் மாநாட்டில் தனக்கு அனுமதி
மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு ஆவேசம் அடைந்தார். இதனால் பொதுநலவாய
ஊடக மத்திய நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை பரபரப்பு நிலை
காணப்பட்டது.
ஊடகமத்திய நிலையத்திற்கு வருகைதந்திருந்த மெக்ரே அங்கு
காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பட்டியலை பார்வையிட்டதன் பின்னர்
ஊடகமுகாமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு
கூடிநின்ற ஊடகவியலாளர்கள் மெக்ரேயை சுற்றி வளைத்து வீடியோ மற்றும்
புகைப்படங்களை எடுத்ததுடன் கேள்விக்கணைகளையும் தொடுத்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள்
எனக்கு கிடைத்திருந்தால் அது குறித்து ஆவணப்படத்தை தயாரிக்கவும் நான்
தயங்க மாட்டேன். செனல்-4 என்பது எப்போதும் உண்மைகளையே வெளியிடும்.
ஜனாதிபதி மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோர் நடத்தும்
செய்தியாளர் மாநாட்டுக்கு செனல் -4 குழுவில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறப்படும் நாட்டில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு
அனுமதிவழங்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கு காணப்படுகின்றது. என்னைப்
புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதற்கு நான் அஞ்சப்
போவதில்லை. அதேநேரம் உண்மையை வெளிக்கொணர்வதற்கும் தயங்கப்போவதில்லை
என்றார். நன்றி வீரகேசரி
கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?": தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
17/11/2013 'கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" என பல கோசங்களை எழுப்பி காணாமல் போன உறவுகளால் தீப்பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும்
காணாமல் போனோரை தேடும் உறவுகளின் சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இந்த தீப்பந்த போராட்டம் வவுனியா கந்தசாமி கோவிலில்
பகுதியில் இடம்பெற்றது.
கார்த்திகை தீப தீருநாளான இன்று மேற்கொள்ளப்பட்ட இத் தீப்பந்தம் ஏந்திய
போராட்டத்தில் காணாமல் போனேரின் உறவுகள், சிறைச்சாலைகளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment