துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்
கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி
நவாஸ் - ஒபாமா பேச்சு
ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்
-----------------------------------------------------------------------------------------------------
24/10/2013 அமெரிக்காவில் பள்ளி ஆசிரியையை அடித்துக் கொன்ற 14 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி
நவாஸ் - ஒபாமா பேச்சு
ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்
-----------------------------------------------------------------------------------------------------
துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்
21/10/2013 துருக்கியில் இதுவரை 6 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
இத்தகவலை துருக்கி நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கழகம் வெளியிட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பானது ஹஜ் விடுமுறைகளுக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்டதாக அக் கழகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவுடன் 900 கிலோ மீற்றர் எல்லைப் பகுதியை பகுதியைக் கொண்டுள்ள
துருக்கி நாடானது சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்துடன் எதிர்ப்புக்
கொள்கையை கடைபிடித்து வருகின்றது.
மேலும் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவும் வழங்கி வருகின்றது துருக்கி.

சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களிலிருந்து தப்பித்து வரும் அகதிகளுக்கு துருக்கியானது தொடர்ச்சியாக தஞ்சம் அளித்து வருகின்றது.
அங்கு 21 அகதி முகாம்களில் 2 இலட்சம் பேர் வரை வசித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி
22/10/2013 கனடாவில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ்
மாணவர் ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் ஐவர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின்
ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர்
குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேதலிலேயே குறித்த மாணவர்
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் ரொறொன்ரோவிலிருந்து கல்விகற்பதற்காக வந்த கௌதம் (கெவின்) குகதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர்
வளாகத்தின் அருகே வசித்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வின்ட்சர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேதலிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் ரொறொன்ரோவிலிருந்து கல்விகற்பதற்காக வந்த கௌதம் (கெவின்) குகதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
நவாஸ் - ஒபாமா பேச்சு
24/10/2013 ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள்களை
நிறுத்துமாறு பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரீப் அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே நேற்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அதனை பலப்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையால் இடம்பெற்றுள்ளது.
மேலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்திய மற்றும்
பாகிஸ்தானிடையான முறுகள் நிலை தொடர்பிலும் இதன்போது
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே பாகிஸ்தானில் எல்லைப் பகுதியில் நடத்தப்படும் ஆளில்லா விமான
தாக்குதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பிலும் நவாஸ்
ஷரீப் ஒபாமாவிடம் விளக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்
No comments:
Post a Comment