பாகிஸ்தானில் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; 81 பேர் பலி
நைரோபி கடைத் தொகுதி தமது கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு படையினர் அறிவிப்பு
பாகிஸ்தான் பூகம்பம்: 280 பேர் பலி
பாகிஸ்தானில் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; 81 பேர் பலி

கடந்த சில
வருடங்களில் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இது
கருதப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்கள்
நடத்தப்பட்ட வேளை அந்த தேவாலயத்தில் சுமார் 400 பேர் வரை இருந்ததாக
கூறப்படுகிறது. தாக்குதலையடுத்து குறித்த தேவாலயத்திற்கு விசேட பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
நைரோபி கடைத் தொகுதி தமது கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு படையினர் அறிவிப்பு
24/09/2013 கென்ய தலைநகர் நைரோபியில் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த
கடைத் தொகுதியை முற்றிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக
அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கடைத்தொகுதியில் பாதுகாப்பு பிரிவினர் தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆக்கிரமிப்பின் போது போராளிகளால் 62 பேர்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

போராளிகள் கடந்த சனிக்கிழமை மேற்படி வெஸ்ட்கேட் கடைத்தொகுதியை ஆக்கிரமித்து தாக்குதலை நடத்தினர்.
இதன்போது அங்கு சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் இருந்துள்ளனர்.
இவர்களை போராளிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல் ஷபாப் போராளிகள் உரிமை கோரினர்.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் கென்ய வானொலி
அறிவிப்பாளரான ருஹிலா அடரியா – சூட், கானா கவிஞர் கொபி அவூனொர்,
ஜனாதிபதி உஹுறு கென்யட்டாவின் மருமகனான முபுகுவா மவன்கி,
மவன்கியின் எதிர்கால மனைவி ரோஸ்மேரி வஹிட்டோ, கனேடிய
இராஜதந்திரியான அன்னமேரி டெஸ்லொஜஸ், இரு பிரான்ஸ் நாட்டவர்கள்,
அவுஸ்திரேலியர் ஒருவர், 3 பிரித்தானியர்கள், சீனப் பெண்ணொருவர்,
பிறிதொரு கனேடிய பிரஜை, நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர்,
தென்கொரிய பிரஜை ஒருவர், இரு இந்தியர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடித்து
வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் முகமாக அந்தக் கடைத் தொகுதியை சூழ
பெருமளவு படையினர் குவிக்கப்பட்டனர்.
அவர்களை மீட்கும் பணியும் தொடங்கியது. தாக்குதலில் பெருமளவானோர்
கொல்லப்பட்டதுடன், காயமடைந்துமுள்ளனர். பலர் உயிராபத்தின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் தொடர்ந்து பலர் பணயக்கைதிகளாக பிடித்து
வைக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி வேட்டு சத்தங்களும் வெடிப்பு
சத்தங்களும் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள்
கூறுகின்றன.
பாகிஸ்தான் பூகம்பம்: 280 பேர் பலி
No comments:
Post a Comment