.

சுந்தரபாண்டியன் | |
![]() | |
நண்பனின் காதலுக்காக தான் ஏற்கனவே பின்னால் சுற்றிய கதாநாயகி லட்சுமி மேனனிடம் தூது போகிறார் சசிகுமார்.
![]()
இந்நிலையில், சசிகுமாரின் காதல் விவகாரம் லட்சுமி மேனனின் வீட்டுக்கு
தெரிந்துவிட, அவளது முறைப் பையனான விஜய் சேதுபதிக்கு திருமணம்
முடித்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் முறைப் பையனை
மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சசிகுமாரின் ஆழமான காதலை புரிந்து கொண்ட லட்சுமி மேனனின் அப்பா இவர்களது
காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதனால் கோபமடைந்த லட்சுமி மேனனின்
முறைப்பையனும், இறந்து போன அப்புக்குட்டியின் நண்பனும் சேர்ந்து சசிகுமாரை
தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இவர்களோடு சசிகுமாரின் நண்பனும்
சேர்ந்து கொள்கிறான்.
![]()
சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதியில்
‘புரோட்டோ’ சூரியோடு இவர் செய்யும் கலாட்டாக்கள் நம் வயிற்றை பதம்
பார்க்கின்றன. ரஜினி ரசிகராக பஸ்சில் இவர் செய்யும் அலப்பறை நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
ஹீரோயின் ‘கும்கி’ லஷ்மி நாயர், பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு.
தமிழ் சினிமாவுக்கு கிராமத்துப் பெண்ணாக, நன்றாக நடிக்கத் தெரிந்த மற்றொரு
ஹீரோயின் கிடைத்திருக்கிறார். பஸ்சில் தன் பின்னால் சுற்றும் சசிகுமாரை
முறைப்பதில், தன் பார்வையிலே பேசுகிற தொனி அருமை.
படத்தில் இடைவேளை வரை சூரி கலகலப்பூட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு
திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.
![]()
விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு
பலம் கூட்டும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், ஹீரோயினின் அப்பாவாக வரும் தென்னவன்,
சசிகுமாரின் நண்பன் இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டியின் நண்பன் சௌந்தர
ராஜா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால்
பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. கதை நடக்கும்
உசிலம்பட்டி ஏரியாவை பிரேம்குமாரின் ஒளிப்பதிவு நேரில் பார்த்தது போன்ற
உணர்வை நமக்கு தருகிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளிலும், பைக்கில்
பயணம் செய்யும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை.
![]()
மொத்தத்தில் சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.
விஜய் சேதுபதி நடிகை : லஷ்மி மேனன் இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன் இசை : என்.ஆர்.ரகுநந்தன் ஓளிப்பதிவு : பிரேம்குமார் நன்றி விடுப்பு |
No comments:
Post a Comment