ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு
பான் கீ மூன்– மன்மோகனை சந்திக்காது ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்
இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: இந்தியா
யாழ். வேம்படி மகளீர் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டம்
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் சர்ச்சைக்குத் தீர்வுகாணுங்கள்: பழைய மாணவர் கண்டனப் பேரணி
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்
யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி
பயங்கரவாதத்துக்கு பின்னான நல்லிணக்கம்: ஸ்ரீலங்காவின் அனுபவம்
ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலைமை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பங்களும்,உறவினர்களும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வருகின்றது.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாக சென்றுள்ளனர்.
இவர்களில் பலர் ஆஸி.யை சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதிகளவானவர்கள் இதுவரை எவ்வித தொடர்புகளும் இன்றி இருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஆஸி. நோக்கி சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் அதிகளவானவர்கள் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவர்.
இவர்கள் படகுக்கட்டணமாக 5 இலட்சம் ரூபா தொடக்கம் 9 இலட்சம் ரூபா வரை செலுத்தியே சென்றுள்ளனர்.
பலர் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கிளிநொச்சி,நீர் கொழும்பு கடற்கரையூடாகத் தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மூர்வீதி,பனங்கட்டுக்கோட்டு,வங்காலை,
பேசாலை,தலைமன்னார் உட்பட மன்னார் மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் அதிகளவான தமிழர்கள் ஆஸி. நோக்கிச் சென்றுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்ற பலர் இது வரை தமது குடும்பத்தினருடனும்,உறவினர்களுடனும் எதுவித தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என அவர்களுடைய உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளதோடு இவர்களுடைய நிலைவரம் தொடர்பில் எங்கு முறையிடுவது எனத் தெரியாத நிலையில் உறவினர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். நன்றி வீரகேசரி
பான் கீ மூன்– மன்மோகனை சந்திக்காது ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்
![]() |
By
General 2012-09-03 0 |

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த இருவர் கொண்ட குழு ௭திர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை சந்திக்காமலேயே நாடு திரும்பியுள்ளார்.
பான் கீ மூனை மட்டுமன்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமல் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.அணிசேரா நாடுகளின் 16 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் சென்ற ஜனாதிபதி அங்கு வைத்து இவ்விருவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் ௭னப் பரவலாக ௭திர்பார்க்கப்பட்டிருந்தது.
௭னினும் அவ்விருவரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை ௭ன்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஜனாதிபதி கடும் அதிருப்தி கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.தெஹ்ரானில் தங்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை மட்டுமே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்ஷாய், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமட் நிஜாட், லெபனான் ஜனாதிபதி ஜெனரல் மிஷெல் சுலைமான் ஆகியோரையும் ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமய்னியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முஸ்லிம் நாட்டு தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தி கொள்வது தொடர்பிலேயே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது ௭ன்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ௭திர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நன்றி வீரகேசரி
இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: இந்தியா
![]() |
By
General 2012-09-05 0 |

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண ௭ச்சரிக்கை குறித்து ஊடகங்கள் ௭ழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலு ள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பயண ௭ச்சரிக்கையை நாம் கவனத்திற்கொண்டுள்ளோம் ௭ன இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களின் நெருக்கமான கலந்தாலோசனையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது ௭ன்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் ௭ன அவர் கூறினார்.
சில முக்கிய விஜயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்னறிவிக்கப்படாமல் இட ம் பெற்றமையும் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ‘‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான வரலாற்று, கலாசார, இனத்துவ மற்றும் சிவில் உறவுகளில் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொட ர்பு முக்கிய அங்கமாகும் ௭ன்பதை நான் கண்டுள்ளேன். கொழும்பிலுள்ள ௭மது உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் சுமார் 200,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு சுமார் 175,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது ௭ன அவர் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
யாழ். வேம்படி மகளீர் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டம்
05/09/2012

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் சர்ச்சைக்குத் தீர்வுகாணுங்கள்: பழைய மாணவர் கண்டனப் பேரணி
![]() |
By
General 2012-09-06 |

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவிவரும் அதிபர் சர்ச்சைக்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டுமெனக்கோரி நேற்றுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்கு பாடசாலையின் வளாகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பழைய மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் யாழ்.கல்வித்தரம் வீழ்ச்சியடைவதாகவும் இப்பாடசாலையில் நிலவிவரும் நிர்வாக ஒழுங்கீனத்துக்கு நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பை ஏற்படுத்துவதற்காகவுமே இப்போராட்டத்தினை நடத்துவதாகக் கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மகஜரின் முழுமையான விபரம் வருமாறு,
வேணுகா சண்முகரட்ணம் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2.7.2012ஆம் திகதியன்று தனது பதவியினைப் பொறுப்பேற்றார்.
ஆயினும் அவரிடம் பிரதி அதிபரால் பொறுப்புக்கள் கையளிக்கப்படாதமை தொடர்பாக பல முறையீடுகள் அனுப்பப்பட்டன. இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், பொதுச்சேவை ஆணைக்குழு, கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோரிடமிருந்து அறிவுறுத்தற் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதும் எமது பாடசாலையின் நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு யாழ்.கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் இவர்களுக்கே உண்டு.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினராகிய நாங்கள் ஏறத்தாள மூன்று மாத காலமாக எமது பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பாக நிலவி வரும் குழப்ப நிலையினால் பெரிதும் வேதனையுறுகின்றோம். பொறுப்பான பதவியில் உள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறாக தமது கடமையினைச் செய்யாதிருப்பது மிகவும் விரக்திக்குரியதாகும்.
யாழ்.கல்வித் திணைக்களம், மாகாணக் கல்விஅமைச்சு என்பன விடுமுறை காலத்திற்குள்ளும் நடவடிக்கை ஏடுக்காததை சுட்டிக்காட்டி ஒரு வேலைநாள் அவகாசம் அளித்து 3.9.2012 ஆம் திகதி அன்று கடிதமொன்றை வழங்கியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை யாழ்ப்பாணத்தின் கல்வித் தராதரத்தினை வீழ்ச்சிக்கும், பாடசாலைகளின் நிர்வாக ஒழுங்கீனத்துக்கும் அடிகோலும், இந்த நிலைமை இன்னும் மூன்று மாதத்தில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்களின் கல்வியினைப் பெரிதும் பாதிக்கும், இதனால் பாதிப்புறுவது எமது கல்லூரியின் புகழும் மாணவர்களின் கல்வித்தரமும், கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பை ஏற்படுத்தல், கடந்த தவணைப் பரீட்சை விடைத்தாளைப் பார்வையிடப் பெற்றோர் அழைக்கப்படாமை, பாடசாலையில் நிறுவுனர் தினம், பரிசளிப்பு விழா உட்பட பல வருடாந்த நிகழ்வுகள் நடத்தப்படாமை, பிரதானமாக பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் உள ரீதியான பாதிப்பும் நிர்வாகச் சீர்குலைவும், முறையான அதிபர் இருக்கும் போது இடமாற்றம் பெற்ற பிரதி அதிபர், அதிபர் என்ற ரீதியில் கையொப்பமிடும் ஆவணங்கள் செல்லுபடியற்றதாகும் தன்மை. இதற்கு கல்வி அதிகாரிகளும் துணை போவது கண்டிக்கத்தக்கது.
போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்து யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோருகின்றோம் என்றுள்ளது.நன்றி வீரகேசரி
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்-

யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியொன்றையும் நடத்தினர்.

கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமான பேரணி இந்தியத் தூதரகம் வரை சென்றது. புறக்கோட்டை வர்த்தக சங்கங்களின் சார்பாக இந்திய உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
Pics By: Suranthiran









நன்றி வீரகேசரி
![]() |
By
General 2012-09-06 1 |

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியொன்றையும் நடத்தினர்.

கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமான பேரணி இந்தியத் தூதரகம் வரை சென்றது. புறக்கோட்டை வர்த்தக சங்கங்களின் சார்பாக இந்திய உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
Pics By: Suranthiran










நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி
![]() இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்தியா, 50 ஆயிரம் வீடுகளை கட்ட உதவி அளித்து உள்ளது. இதில், முதல்கட்டமாக, 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. கால் ஏக்கரில் வீடு: இதன் ஒரு பகுதியாக, கண்டி-யாழ்ப்பாணம் "ஏ 9' நெடுஞ்சாலையில், முகமாலை அருகே, புதுக்காடு, கரந்தையில், 50 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீடும் கால் ஏக்கர் நிலப் பரப்புக்குள் கட்டப்பட்டு உள்ளது. இங்கு குடியேறி உள்ள, தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியர் கூறுகையில், ""கடந்த ஆண்டு இங்கு குடியேறினோம். இந்த வீடும், இடமும் வசதியாக உள்ளன. மின் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு அருகே உள்ள ஊரில் தான், நாங்கள் வசித்து வந்தோம். இங்கிருந்து கொண்டே சொந்த ஊரில் வேளாண் பணிகளை துவக்கி உள்ளோம்,'' என்றனர். இவர்களைப் போல், இங்குள்ள பலர் தங்கள் சொந்த ஊர்களில், வேளாண் பணிகளை துவக்கி உள்ளனர். போரில் பலியான குழந்தை: இங்கு வசிக்கும், விக்னேச ராசா என்பவர் கூறுகையில், ""என் சொந்த ஊரில் காணியை குத்தகைக்கு எடுத்து, அதில் விவசாயம் செய்கிறேன். மிளகாய், சிறு பயிறுகளை பயிரிட்டுள்ளேன். என்னுடைய ஆறு மாத குழந்தை, போரில் குண்டடி பட்டு இறந்துவிட்டது. அந்த சோகம் தீரவில்லை என்றாலும், நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைத் துவங்க முயல்கிறேன். இது நிறைவேறுமா என்பது, எனக்கு தெரியவில்லை. இறைவன் கையில் தான் உள்ளது,'' என்றார். ஒவ்வொரு வீட்டுமனையும், கால் ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ளதால், குடியிருப்போர், தோட்டங்களை அமைத்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். தோட்டங்களில், காய்கறி, பூக்கள், சிறு தானியங்களை சாகுபடி செய்கின்றனர். அமைதி நீடிக்க வேண்டும்: குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டுள்ள பொது கிணற்றில் இருந்து, குடத்தில் தண்ணீர் சுமந்து வந்து, சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, கனகமணி தங்கராசா என்பவர் கூறுகையில், ""இறுதிகட்ட போரின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில், என் கணவர் தங்கராசா குண்டு அடிபட்டு இறந்தார். அங்கேயே மண்ணைத் தோண்டி உடலைப் போட்டேன். எந்த சடங்கும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. போர் முடிந்து மீள் குடியேற்றத்தின் போது, இந்தியா உதவியுடன் கட்டியுள்ள இந்த வீட்டை தந்தனர். வீடு வசதியாக உள்ளது,'' என்றார். மேலும், ""வீட்டைச் சுற்றி காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் உள்ளேன். இதை ஆதாரமாக கொண்டு பிழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பக்கத்து ஊரில் உள்ள சிதைந்து போன பழைய வீட்டை புனரமைக்கும் பணியில், என் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர். எங்கள் நிலத்தில் மீண்டும் சாகுபடி செய்யவும் முயல்கிறோம். அமைதி நீடித்தால் நாங்கள் வாழ முடியும்,'' என்றார். இங்குள்ள பெரும்பாலானோர், குடும்ப உறுப்பினர்களை போரில் இழந்து உள்ளனர். தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியினர், தங்கள் 21 வயது மகனை இழந்தனர். இந்த காயங்கள் ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். கட்டுமானத்தில் குளறுபடிகள்: குண்டுவீச்சினால், தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டு இருந்த இவர்களுக்கு, புதிய வீடுகள், புதிய வாழ்க்கைக்கு மையமாக அமைந்து உள்ளன. நிறைகள் பல இருப்பினும், இவை இந்திய கட்டுமானம் என்பதால், சில குறைகளும் உள்ளன. கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில வீடுகளின் கதவுகள் பெயர்ந்து நிற்கின்றன. கூரைக்கு காட்டு கம்புகளை பயன்படுத்தியதால், அவை உளுத்துவிட்டன. அதற்கு பதிலாக முற்றிய பனை மரத்தை பயன்படுத்தி இருக்கலாம். அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்; செலவும் குறைந்திருக்கும் என்று, அந்த பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.
- தினமலர் - நன்றி தேனீ
|
|||||
|
No comments:
Post a Comment