சட்டவிரோதமாக ஆஸி. செல்லவிருந்த 93 பேர் கைது
வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்
இம்மாத நடுப்பகுதிக்குள் எஞ்சியவர்கள் மீள்குடியமர்த்தப்படுவர் - கோத்தபாய
ஓமந்தை - காங்கேசன்துறை ரயில் பாதை மீள்கட்டுமானப் பணிகள் 2014 இல் முடிவடையும் - கோத்தபாய

சட்டவிரோதமாக
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 93 பேர் நேற்று அதிகாலை கடற்படையினரால்
கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய
தெரிவித்தார்.
காலியிலமைந்துள்ள கொஸ்கொட எனும் இடத்தில் 68 பேரும் பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களில் இருபெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட 93 பேரில் இச்சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் ௭ன சந்தேகிக்கப்படும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
09/08/2012 | |
![]() |
By
AM. Rizath |

காலியிலமைந்துள்ள கொஸ்கொட எனும் இடத்தில் 68 பேரும் பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களில் இருபெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட 93 பேரில் இச்சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் ௭ன சந்தேகிக்கப்படும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்
வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான கைதிகளில் மற்றுமொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்ருக்ஷன் மரியதாஸ் என்பவரே மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது நிமலரூபன் என்ற கைதி மரணமாகியமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி ![]() |
By
Nirshan Ramanujam 08/08/2012 |
சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்ருக்ஷன் மரியதாஸ் என்பவரே மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது நிமலரூபன் என்ற கைதி மரணமாகியமை குறிப்பிடத்தக்கது.
இம்மாத நடுப்பகுதிக்குள் எஞ்சியவர்கள் மீள்குடியமர்த்தப்படுவர் - கோத்தபாய
வடக்கில் மீள்குடியேற்றம்
செய்யப்படாதவர்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
'இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி" என்ற தொனிப்பொருளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முகாம்களில் இருக்கும் 5 ஆயிரத்து 424 பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்படாமல் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி By
M.D.Lucias ![]() 08/08/2012 |
'இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி" என்ற தொனிப்பொருளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முகாம்களில் இருக்கும் 5 ஆயிரத்து 424 பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்படாமல் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஓமந்தை - காங்கேசன்துறை ரயில் பாதை மீள்கட்டுமானப் பணிகள் 2014 இல் முடிவடையும் - கோத்தபாய
ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் முடிவடையும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
'இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி" என்ற தொனிப்பொருளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கின் போதே கோத்தாபாய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று முதல் 10 ஆம் திகதி வரையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறும் இந்த சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில்
43 நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 200 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி ![]() |
By
M.D.Lucias 08/08/2012 |

No comments:
Post a Comment