.
தற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment