* எண்ணெய் கசிவினால் 17,000 பேர் வேலை இழப்பு
* இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது
* ஜேர்மன் இசைநிகழ்ச்சி 19 ரசிகர்கள் பலி
எண்ணெய் கசிவினால் 17,000 பேர் வேலை இழப்பு
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியிலுள்ள பிரிட்டிஷ்
பெற்றோலியம் நிறுவனத்தின் கடலில் இருந்து எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் 11பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், பாரிய இயந்திரமொன்று உடைந்து கடலுக்குள் விழுந்ததில் எண்ணெய் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு கடலில் எண்ணெய் கசிய ஆரம்பித்தது. இதனையடுத்து, குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை அடைக்கும் பணிகள் கடந்த 3 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்படும் வரையில் அந்த இடத்திலிருந்து இடைவிடாது எண்ணெய் கசிந்தவண்ணமுள்ளது. இதனால், கடலின் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய்ப் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன்பிடி, கடல் சார்ந்த பணிகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17பேர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
அந்தவகையில் லூசியானா, புளோரிடா, அலபாமா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் மாகாணங்களின் மீன்பிடித் தொழிலும் கடல் சார்ந்த சுற்றுலாப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.அத்துடன், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் அகழ்வதற்கு 6 மாத கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
மேலும் இந்த எண்ணெய்க் கசிவு காரணமாக பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் ரீதியிலான பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நட்டம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த எண்ணெய்க் கசிவு காரணமாக, மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன. அத்துடன், மீ்ன்பிடிப் படகுகளும் சுற்றுலாப் படகுகளும், கப்பல்களும் இந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடல் பிரதேசத்தினைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரித்தானிய பெற்றோலிய நிறுவனம் பல கோடிக்கணக்கில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் மிரர்
##############################################################################################
அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர்.
புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன் மேற்படி நபர்கள் வீதியில் நடந்து சென்றதை அவதானித்த பொலிஸார் அந்;நபர்களை கைது செய்து எல்லைக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முழங்கால் வரை அவர்களின் கால்கள் நனைந்திருந்ததால் அவர்கள் படகில் அழைத்துவரப்பட்டு கரையோரத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனினும் சந்தேகத்திற்கிடமான படகுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நபர்கள் அனைவரும் 20-40 வயதானவர்கள் எனவும் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் அமெரிக்க நாணயத்தாள்கள் அவர்களிடம் இருந்ததாகவும் அவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களிடம் பை எதுவும் காணப்படாத போதிலும் செல்லிடத் தொலைபேசிகளை வைத்திருந்தனர்.
அந்நபர்கள் தம்மைப்பற்றிய விபரங்களை புலனாய்வாளர்களுக்கு வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
###################################################################################
ஜேர்மன் இசைநிகழ்ச்சி 19 ரசிகர்கள் பலி

டுய்ஸ்பர்க் நகரில் சில தினங்களாக நடைபெற்று வந்த 'லவ் பரட்' இசை நிகழ்ச்சியொன்றில் சுமார் 14 இலட்சம் பேர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது
சனிக்கிழமை பெரும் எண்ணிக்கையானோர் சுரங்கப்பாதையொன்றுக்கூடாக செல்ல முயன்றபோது நெரிசல் ஏற்பட்டு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுரங்கபாதைக்கூடாக இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஒரேயொரு வாசலே இருந்தது. ஏற்கெனவே அங்கு கூட்டம் அதிகமாகிவிட்டபடியால் அந்த வாயிலை அடைத்த பொலிஸார்இ மறுபுறமாக வருமாறு ரசிகர்களுக்கு அறிவித்தல் விடுத்ததையடுத்து பலர் முண்டியடித்துக்கொண்டு விரைந்து செல்லமுற்பட்டனர் எனவும் இதன்போது 19 பேர் உயிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இனிமேல் லவ் பரட் இசை நிகழ்ச்சி நடைபெற மாட்டாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழ் மிரர்
No comments:
Post a Comment