- செய்தித்தொகுப்பு -கரு
xx முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களின் மீது அன்சாக் வண்டி மோதியது
xx நடைபாதை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் காயம்
முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களின் மீது அன்சாக் வண்டி மோதியது
மெல்மேர்ன் நகரில் நடைபெற்ற அன்சாக் ஊர்வலத்தில் வண்டி மோதியதால்; இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 25ம் திகதி நடைபெற்ற அன்சாக் தின ஊர்வலத்தில் இராணுவ வண்டியொன்று இருந்தாற் போல் மிக கூடிய சக்தியோடு வேகமாக முன்னேறி பல முன்னாள் இராணுவ வீரர்களை கீழே விழுத்தியது.
அன்றைய தினம் பிற்பகல் 12.35 மணி அளவில் சென்ற் கில்டா வீதியில் ஆர்ட்ஸ் சென்ரருக்கு முன்னால் நடைபெற்ற இந்த இராணுவ வாகன விபத்தில் இரண்டு முன்னாள் இலங்கை வீரர்கள் காயமடைந்து அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் உடனே அவ்விடம் சென்று காயப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு உதவி புரிந்தார்கள்.
காயப்பட்ட நாலு வேறு வீரர்களும் அந்த இராணுவ வாகனத்தை ஓட்டிய 64 வயதுள்ள மனதால் பாதிப்படைந்த சாரதியையும் இராணுவ வாகனத்திற்கு பின்னால் வந்த ஒருவரையும் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் 70, 80, 90 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
காவல் துறையினர் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ வாகனத்தை இந்த விபத்து நடந்ததிற்குரிய காரணத்தை அறிய ஆராய்ச்சி செய்தார்கள்.
இளைப்பாறிய இலங்கை இராணுவ வீரர்களின் அவுஸ்ரேலிய சங்கம் இப்படி ஒரு விபத்து நடந்திருந்தும், அடுத்த அன்சாக் தினத்திலும் தாங்கள் பங்கு பற்றுவதாக கூறியுள்ளனர்.
நடைபாதை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் காயம்
சிட்னி உள்மேற்குப் பகுதியில் இரண்டு கட்டிடங்களுக்கிடையேயுள்ள நடைபாதை உடைந்ததில் உயர்தர பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயப்பட்டுள்ளார்கள்.
நியூவிங்ரன் கல்லூரியில் கடந்த நத்தார் விடுமுறை நாட்களில் போடப்பட்ட இந்த நடைபாதை ஆணிகளால் மட்டுமே இணைக்கப்பட்;டிருந்தது. இந்த நடைபாதை இரண்டு மாதங்கள் மட்டுமே உபயோகத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த நீண்ட வாரஇறுதி விடுமுறையில்; 100 டழஉமநச கள் அந்த மரநடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டது. முதல் தடைவாக 7ம் வகுப்பு மாணவர்கள் அவற்றை பாவிக்கச் சென்ற போது பாரம் தாங்கமுடியாமல் நடைபாதை உடைந்து விழுந்துள்ளது.
ஸ்ரன்மோரிலுள்ள இந்த தனியார் பாடசாலையில் பயிலும் 12,;13; வயது நிறைந்த மாணவர்கள் ஒன்றரைமீPற்றர் ஆழத்தில் விழுந்ததில், அந்த இடம் மாணவர்களும் பாடசாலை பைகளும் புத்தகங்களும் மரப்பலகைகளும் லொக்கர்களும் நிறைந்த குழியாக காணப்பட்டது.
ஆசிரியர்களும் மற்றய மாணவர்களும் உடனடியாக சென்று அந்த 16 மாணவர்களையும் இழுத்து வெளியே எடுத்தார்கள். அவர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.
மாணவர்களை உடைந்த நடைபாதையிலிருந்து காப்பாற்றியதற்காக 12ம் வகுப்பு மாணவர்சபை அங்கத்தவர் துயஉம டீழசவழடழவவi உட்பட இரண்டு மாணவர்களுக்கும் மூன்று ஆசிரியர்ககளுக்கும் விருதுகள் (டிசயஎநசல யறயசனள) வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment