அழிந்து
வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமுகமுழவு/குடமுழா
ஐமுகமுழவு/குடமுழா
- தோற்கருவி
அமைப்பு
குறிப்பு

சைவர்களின் நம்பிக்கைப்படி வாணாசுரன்
திரிபுர அசுரர்களில் ஒருவன். தனது புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமான் இரக்கம் மேலிட்டு இரு
அசுரரை தன் வாயிற்காவலராகவும் கடைசி தம்பியான வாணாசுரனை தன் ஆடலுக்கு முழவு
இசைக்கும் கலைஞனாகவும் மாற்றி விடுகிறார். இதனை சுந்தரரின் திருப்புன்கூர்
திருப்பதிகத்தில் காணலாம்.
மூஎயில்
செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர்
என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ
கரிகாடு அரங்கு ஆக,
தேவ
தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில் திருப் புன்கூர் உளானே!



திருநெல்வேலியை
சேர்ந்த நண்பர் திரு சங்கரநயினார் அவர்கள் திருவாரூரில் தியாகேசர் கோவிலில் இசைக்கப்படும்
ஐமுகமுழவின் காணொலியை கொடுத்தார்கள். தேவமங்கை(சுமதி)
என்கிற
அம்மையார் இசைக்கும் காட்சியை காணொளி பகுதியில் நீங்கள் காணலாம்.
சோழ மன்னர்கள் பல கோவில்களிலும் இந்தக் கருவியை நிறுவியுள்ளார்கள். ஆனால் அவை இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல குடமுழாக்கள் அருங்காட்சியகங்களில் உறங்குகின்றன. சில களவாடபட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டன.
பல
உருக்கி பழைய பித்தளை கடைக்கு சென்று இருக்கலாம். தமிழகத்தில் சில வருடங்கள் முன்பு வரை
30 குடமுழாக்கள் இருந்தாக சொல்கிறார்கள். இன்றைய
நிலையில் 5 மட்டுமே கணக்கில் உள்ளது.
திருவாரூர்,
திருத்துறைப்பூண்டி
தவிர திருவாருர் தியாகராஜ சுவாமிகள் நினைவு இல்லம், சென்னை
அரசு அருங்காட்சியகம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்இசைச்சங்கம் (ராஜா
அண்ணாமலை மன்றத்தின் இரண்டாவது மாடியில்) காட்சி பொருளாக
மூன்று குடமுழாக்கள் உள்ளன. இவையன்றி தமிழ்கத்தில் ஒரு கோவிலில்
குடமுழா இசைக்கும் ஒரு காணொளி இணையத்தில் உள்ளது. இது எந்த
இடம்/கோவில் என்று எனக்கு தெரியவில்லை.
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவிலிலும்
இக்கருவி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைமாதம் நிகழும் பெருவிழா காலத்திலும், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் (சோமாஸ்கந்தர்) வசந்த மண்டபம் எழுந்தருளும் போதும் மட்டுமே
இவ்வாத்தியம் வாசிக்கப்படுகின்றது. இக்குடமுழவை 'சீகாருடையார் மல்லாண்டான் சோழகோனார்' என்பவர் தானமாக வழங்கிய செய்தி அந்த
இசைக்கருவியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
ஐமுகமுழவின் ஆரம்ப
வடிவமான முழவு தமிழகத்தில் வழக்கொழிந்து விட்டது. நாம்
நமது அலட்சியத்தால் தொலைத்த இக்கருவி கேரளத்தில் “மிழவு”
என்கிற
பெயரில் வழக்கில் உள்ளது. ஒருமுக கருவியான மிழவு எப்படி உருவாக்கப்படுகிறது,
எப்படி
இசைக்கப்படுகிறது என்பதன் முழு விபரங்களை கேரள அரசு ஆவணப்படுத்தியுள்ளது.
காணொளி
பகுதியில் நீங்கள் அவற்றை காணலாம். முழவின் ஆரம்ப
வடிவம் மண்ணால் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக கேரள மாநிலம் வைக்கமொலி என்கிற இடத்தில்
கண்டெடுக்கப்பட்ட மண் மிழவு உள்ளது. திருச்சூர் மற்றும்
இரிஞாலக்குடி கோவில்களில் மிழவு இசைக்கப்படுகிறது. குடியாட்டம்
என்கிற கேரளக் கலை வடிவத்திலும் மிழவு இசைக்கப்படுகிறது.
புழக்கத்தில்
உள்ள இடங்கள்
திருவாரூர் தியாகேசர் திருக்கோவில்
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர்
கோவில் (திருவாரூரில் இசைப்பவரே இங்கேயும் சித்திரை பெருவிழா
நாட்களில் இசைக்கிறார்)
பாடல்
குடமுழா பற்றிய குறிப்புகள் 1,6,7,11 ஆகிய திருமுறைகளில் உள்ளன.
திருமுறை
1 - திருவெங்குரு - சம்பந்தர்
வண்டணைகொன்றை வன்னியுமத்த
மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர்
விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம்
பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி
யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
திருமுறை
7 - திருமுருகன்பூண்டி – சுந்தரர்
விட்டி
சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப்
பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட
லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட
பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
திருமுறை
7 - திருப்பைஞ்ஞீலி – சுந்தரர்
தக்கை
தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க
ரைகுட முழவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க
மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும்
ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே
திருமுறை
11 - திருக்கைலாய ஞானஉலா
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம்
தடாரி படகம் இடவிய
திருமுறை
11 - மூத்த திருப்பதிகம் - காரைக்காலம்மையார்
துத்தம், கைக்கிள்ளை,
விளரி,
தாரம்,
உழை,
இளி
ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை
யோடு,
தகுணிதம் துந்துபி தாளம்
வீணை
தமருகம்,
குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்
காடே
கந்தபுராணம்
- தெய்வயானையம்மை திருமணப் படலம் - கச்சியப்பர்
கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்
தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்
மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி
மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப்
போனார்
காணொளி
கேரளம்
-சரவண பிரபு
ராமமூர்த்தி
(வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்
கருவிகள்
குடமுழா – குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ் இசைக் கருவியும் தற்கால
நிலையும் - ச. யோகேஸ்வரி)
2 comments:
அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.
அன்பன்
மா. அருச்சுனமணி
அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.
அன்பன்
மா. அருச்சுனமணி
Post a Comment