நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் தினங்களாக கொண்டாடபடுவது எமது மரபு. இதன் ஆரம்பத்தை நாம் நோககுவோம். மனித சமூகம் காட்டிமிராண்டி
நிலையில் இருந்து மனிதனாக வாழ ஆரம்பித்த போது. பெண் என்பவளே வியப்புக்குரியவளாக காணப்படுகிறாள்,
அவளது வயிறுபெரிதாகி வருகிறது பின் அவளால் புதிய உயிரை உலகுக்கு வளங்க முடிகிறத. சமுதா
வளர்சிக்கு அன்று இன பெருக்கம் வேண்டப்பட்ட
காலம் அது. இதனால் பெண் போற்றப்பட்டாள்.
தனது தேவைகளுக்கு பற்றாகுறை ஏற்படும் போது, தமக்கும்
அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக கற்பனை பண்ணுகிறன் மனிதன். அதையும் பெண்ணாகவே அவனால்
கற்பனை பண்ண முடிகிறது. பண்டைய நாகரீகம் வளர்ந்த நாடுகளான எகிப்து, மொசொப்பொட்டேனியா
போன்ற இடங்களிலே கண்டெடுக்கப்பட்ட ஆதி தெய்வ உருவங்கள் பெரிய வயிற்றுடனும், மார்பகஞ்களுடனும்
கூடிய பெண்உருவங்களே.
புதியதோர் உயிரை தன்னுள்
ஆக்கி வளர்த்து உலகுக்ககு அளிப்பவள் பெண் எனக் கண்டு வியந்த அம்மக்கள், பெண்ணுக்கு
முக்கியத்துவம் அளித்தனர், மிதிப்பு வணக்கமும், ஆக அதுவே தாய் கடவுள் வழிபாடாகவும்
மாறுகிறத பெண்களே பூசாரிகளாகவும் இருந்தனர்.சமூகத்தையும் வழி நடத்தினர்.
பண்டய மக்கள் கூட்டம்
வேட்டை கிடையாத போது தெய்வம் தம்மில் கோபம் கொண்டதாக எண்ணி, தெய்வத்தை பிரீதி பண்ண,
இளம் பெண் ஒருவளை கொற்றவையாக கொண்டு அவளை அலங்காரம் பண்ணி எருமை மாட்டிலே ஏற்றி ஆரவரமாக
வாதியங்களுடன் ஊர்வலமாக அழைத்தச் சென்று அவள் முன் பல பலிகளை நடாத்தி கொற்றவையை திருப்தி
படுத்தினர், இவ்வாறு செய்வதால் தமக்கு வேட்டையிலே மிருகங்கள் அதிகம் கிடைக்கும் எனவும்
நம்பினர்.
மனித சமுதாயம் நிலத்தை பண்படுத்தி
விவசாயம் என்ற ஒன்றை கண்டறிந்தபோது அதன் பயனை பெற நீண்ட நாடுகள் காத்திருக்க வேண்டி
இருந்தது. இயற்கை யை நம்பவேண்டும். வேட்டையோ அல்லது மந்தை மேய்போ போல உடநடியாக உணவு
கிட்டைத்து விடாது, அந்த உற்பத்தியை பெருக்க பல முயற்ச்களில் ஈடுபட்டனர். அன்று இந்த சிந்தனையே மக்கள் பெண் போன்ற ஒன்றே பூமியும்
என கருதினர். அவள் கற்பமுற்று காலம் தாழ்த்தியே குழந்தை பிறக்கிறது. அதே போன்றே சில
காலம் காத்திருந்தே பூமியும் தாயாகிறாள். நிலத்தை உழஆரம்பிக்கும் பொளுது கலப்பையின்
நுகத்திலே எருதுகளுக்கு பதிலாக இரு நிர்வானமான பெண்களை கொண்டு உழவினை ஆரம்பித்தனர்.
இதனால் நிலமகள் நாணி அதிக விளைச்சலை தருவாள் எனவும் நம்பினர். இவை எல்லாம் இன்று வேடிகை
ஆக தோன்றலாம், ஆனால் எந்தவித அறிவும் இல்லாத மனித கூட்டத்தின் சிந்தனையே இது.