நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் தினங்களாக கொண்டாடபடுவது எமது மரபு. இதன் ஆரம்பத்தை நாம் நோககுவோம். மனித சமூகம் காட்டிமிராண்டி
நிலையில் இருந்து மனிதனாக வாழ ஆரம்பித்த போது. பெண் என்பவளே வியப்புக்குரியவளாக காணப்படுகிறாள்,
அவளது வயிறுபெரிதாகி வருகிறது பின் அவளால் புதிய உயிரை உலகுக்கு வளங்க முடிகிறத. சமுதா
வளர்சிக்கு அன்று இன பெருக்கம் வேண்டப்பட்ட
காலம் அது. இதனால் பெண் போற்றப்பட்டாள்.
தனது தேவைகளுக்கு பற்றாகுறை ஏற்படும் போது, தமக்கும்
அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக கற்பனை பண்ணுகிறன் மனிதன். அதையும் பெண்ணாகவே அவனால்
கற்பனை பண்ண முடிகிறது. பண்டைய நாகரீகம் வளர்ந்த நாடுகளான எகிப்து, மொசொப்பொட்டேனியா
போன்ற இடங்களிலே கண்டெடுக்கப்பட்ட ஆதி தெய்வ உருவங்கள் பெரிய வயிற்றுடனும், மார்பகஞ்களுடனும்
கூடிய பெண்உருவங்களே.
புதியதோர் உயிரை தன்னுள்
ஆக்கி வளர்த்து உலகுக்ககு அளிப்பவள் பெண் எனக் கண்டு வியந்த அம்மக்கள், பெண்ணுக்கு
முக்கியத்துவம் அளித்தனர், மிதிப்பு வணக்கமும், ஆக அதுவே தாய் கடவுள் வழிபாடாகவும்
மாறுகிறத பெண்களே பூசாரிகளாகவும் இருந்தனர்.சமூகத்தையும் வழி நடத்தினர்.
பண்டய மக்கள் கூட்டம்
வேட்டை கிடையாத போது தெய்வம் தம்மில் கோபம் கொண்டதாக எண்ணி, தெய்வத்தை பிரீதி பண்ண,
இளம் பெண் ஒருவளை கொற்றவையாக கொண்டு அவளை அலங்காரம் பண்ணி எருமை மாட்டிலே ஏற்றி ஆரவரமாக
வாதியங்களுடன் ஊர்வலமாக அழைத்தச் சென்று அவள் முன் பல பலிகளை நடாத்தி கொற்றவையை திருப்தி
படுத்தினர், இவ்வாறு செய்வதால் தமக்கு வேட்டையிலே மிருகங்கள் அதிகம் கிடைக்கும் எனவும்
நம்பினர்.
மனித சமுதாயம் நிலத்தை பண்படுத்தி
விவசாயம் என்ற ஒன்றை கண்டறிந்தபோது அதன் பயனை பெற நீண்ட நாடுகள் காத்திருக்க வேண்டி
இருந்தது. இயற்கை யை நம்பவேண்டும். வேட்டையோ அல்லது மந்தை மேய்போ போல உடநடியாக உணவு
கிட்டைத்து விடாது, அந்த உற்பத்தியை பெருக்க பல முயற்ச்களில் ஈடுபட்டனர். அன்று இந்த சிந்தனையே மக்கள் பெண் போன்ற ஒன்றே பூமியும்
என கருதினர். அவள் கற்பமுற்று காலம் தாழ்த்தியே குழந்தை பிறக்கிறது. அதே போன்றே சில
காலம் காத்திருந்தே பூமியும் தாயாகிறாள். நிலத்தை உழஆரம்பிக்கும் பொளுது கலப்பையின்
நுகத்திலே எருதுகளுக்கு பதிலாக இரு நிர்வானமான பெண்களை கொண்டு உழவினை ஆரம்பித்தனர்.
இதனால் நிலமகள் நாணி அதிக விளைச்சலை தருவாள் எனவும் நம்பினர். இவை எல்லாம் இன்று வேடிகை
ஆக தோன்றலாம், ஆனால் எந்தவித அறிவும் இல்லாத மனித கூட்டத்தின் சிந்தனையே இது.

இருக்கு வேதம் இன்று சமுதாயத்திற்கு
கிடைக்கும் ஆதி நூல், சமுதாய ஆரம்ப கால சிந்தனையை அறிவதற்கு மனிதனுக்கு கிடைத்த மிக
பழைய நூல் என்பதனால் யூனஸ்கோ நிறுவனம் இதை காப்பாற்றிவருகிறது. இதில் ஒரு சுலோகம்.
கூறுவது, நிலமள் நாணுகிறாள் அதை கண்ட இறைவன் மகிழ்நது ஆண் விந்துவை பொளிகிறான் (அதுவே
மழை) அவள் மகிழ்ந்து சிலிர்த்து காயும் கனியுமாக எம்மை காப்பாற்றுகிறாள் என்கிறது.
தொல்கு டி மக்கள் வாழ்வு நோக்கம் இன்பமுடன் வாழ்வதே. ஆகவே இயற்கை வாழ்வோடு ஈடுபாடு
வழ்ந்த மக்கள், தாம் கண்டடு, கேட்டு, உணர்ந்தவற்றை, தாம் அறிந்த அளவில் விளக்கம் கொடுக்க
முற்பட்டனர். இதனடியா பிறந்ததே தாய் தெய்வ வழிபாடு. இன்றும் ஆந்திர தெலுங்கு சமூகத்திலே
ஒரு பெண்ணை தெய்வமாக அலங்கரித்து அவளுக்கு பூஜைகள் செய்யும் வளமை உண்டு. இது தவிர பெண்குறியினை மையமாக கொண்ட சடங்குகளை இன்றும் பளம் குடிமக்களிடையே காணகூடியதாக
உள்ளது. பெண் குறியை பூமி தாய்க்கு வெளிக்காட்டி, பூமியின் வளத்தை பெருக்குவ தென்பது
பளங்குடி மக்கள் மத்தியில் காணப்படு வதொன்று. இதன் நோக்கம் விளைசலை பெருக்குவதற்கு
பூமியை தூண்டுவதாகும்.சமுதாயம் ஓர்அளவு விருத்தி அடைந்நதபோதும் , ஆரம்ப நோக்கம் கைவிட பட்ட போதும் எச்ச சொச்சமாக இந்த சிந்தனை இளையோடி கொண்டு இருப்பதை காணலாம். முக்கோண வடிவமே
பெண்குறியீடு, இண்றும் கேரளதேசத்து பெண் தெய்வ.வழிபாட்டிலே
முக்கோண வடிவிலான கோலங்களளை வரைந்து பூஜை நடத்துவர். இந்த முக்கோண வடிவத்தை மொகஞ்சோநதாரோ
குறிஈடுகளிலும் காணலாம். இவ்வாறு தோன்றிய வழிபாடே செழிப்பு விருத்தி வளரச்சி அத்தனையும்
பெண்ணாகவே பார்க்ப்பட்டது. இந்த சிதனையின் அடிப்படையிலேயே பெண் கன்னிபருவம் எய்தியதும்
பூப்பெய்திநாள் எனப்படுகிறது. அதாவது இனிமேல் சமுகத்தை விருத்தி செய்யு சக்தியை பெற்றுவிட்டாள்
எனபதைஅடிப்படையாக கொண்டு இந்த சொல் தோன்றி உள்ளது. எந்த வளத்தையுமே பெண்ணாக, கண்ட சமதாய
சிதனையே பெண்தெய்வ வழிபாடாக மாறி, காலத்தின் ஓடடத்திலே வாழ்வை வளம் படுத்த வேண்டிய
கல்வி, செல்வம், வீரம், அத்தனையையும் அருழும் தெய்வங்களாக மிழிர்ந்துள்மையை காண்கிறோம். விழாவை கொண்டாடும் இளய சமுதாயத்திற்கு, தாய் தெய்வ
வழிபாடு தோன்றுவதற்கான காரணிகள் என்ன என்பதை எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொருவர் கடமையுமாகும்.
இன்றய வளர்ந்து வரும்
எமது சிறார் எதற்குமே விளக்கத்தை அறிய விரும்புபவரகள். இவற்றை விளக்குவதால் எமது கொண்டாட்டங்கள்
வழிபாடுகளில் அவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தமது சமூக சிந்தனையை மதித்துப் போற்றுவர்.
No comments:
Post a Comment