மேலும் சில பக்கங்கள்

சரஸ்வதி தோத்திரப் பாடல்கள்

 










செந்தமிழ்ச் செல்விநின் செம்பதங்கள் பிடித்தேன்

சித்திகள் அருள்வாய் அம்மா      

சித்திகள் அருள்வாய் அம்மா!

                                      (செந்தமிழ் )                                                                                                           

சிந்தையிலே மலர்ந்து செந்நா வினிலே கனிந்து

செவியினிலே செழுந் தேனாய் இனித்திடும்

                                      (செந்தமிழ்)                                                                               

நல்லோரின் நாவிலே நடம்புரி தெய்வமே

எல்லோர்க்கும் அருள்புரி ஆனந்தமே

 கல்யாணியே கல்விக் காரணியே பாரில்

நல்வாணியே உன்னை நாடி வந்தேன் அம்மா!

                                     (செந்தமிழ்)

                                                                    

சிற்பரையே தாயே யிந்தச் சிறியனேன்  பிழைபொறுப்பாய்

கற்பகத் திருவுருவே கபாலி மனோகரியே

பொற்பதத் தாமரையே புவிதனில் கதிநீயே

நற்பதி தில்லைவதி  நாயகிநீ தஞ்சமம்மா!

                                                                     

சுந்தரத் தமிழ்கொண்டு  மந்திரம் ஓதிவந்தேன்

வந்தா தரித்திட மனந்தான் இரிங்கலையோ?

எந்தாய் நீயல்லையோ? ஏழைக்(கு)அருள்வ தெப்போ?

சிந்தா மலர்ப்பாதம் சிரஞ்சூட்டும் நாளெதுவோ?

                                     (செந்தமிழ்)                                                

                                                           

2)

 செந்தமிழ்த் தேன்மாந்தும் செல்வீஎன் கலைவாணீ

 பைந்தமிழ்ப் பாமாலை சூடவந்தேன் - அம்மா

                           சூடவந்தேன் - அம்மா

அருள் சுரவாய்நீ மருள் கழைவோய் நீ

வருந் திருவேநீ அரு மருந்தேநீ அம்மா!

                                     (செந்தமிழ்)

 

வான்பொழியும் மாமழைபோல் வற்றாது கலைச்செல்வம்

ஊன்கலந்து உளங்கனிய ஊட்டிடுவாய் அம்மா!

                        

வித்தக வீணையை ஏந்திநிற்பாய் - உன்னை

விரும்பும் அடியவர் வினை கழைவாய்!

நித்தமும் உனைத்தொழும் பத்தருக்கே தினம்

சித்தி எல்லாம் தந்தே திருவருள் செய்திடும்

 

 

 

 

பங்கய நாயகி பாரதி ரூபிணி

எங்களுக் கருள் இறைவிநீ

திங்களும் நாணிடும் மங்கல வாணிநீ

திவ்ய சொரூபிநீ தேமொழீ

சுந்தர நற்றமிழ் துலங்கிட வித்துவம்

தந்திடுவாய் என்சரஸ்வதீ

மந்திர வீணை இசைத்துநல் ஆசியை

வழங்கிடுதேவீ கல்யாணீ !

                                 (செந்தமிழ்)




இயற்றியவர்--

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி

பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

1)


No comments:

Post a Comment