மேலும் சில பக்கங்கள்

மெல்பேணில் தமிழ்மொழியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் விழா!

 அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், விக்றோறிய


மாநிலத்தில்
, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய, விக்றோரிய கல்விச் சான்றிதழ் ( VCE ) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.

கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா எதிவரும் 09.03.2026 - திங்கட்கிழமை, பி..   5.00  மணிக்குக் கீழ்க்குறிப்பிடப்படும் முகவரியில் நடைபெறவுள்ளது

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் பணியும் பாராட்டிக் கௌரவிக்கப்படத்தக்கதாகும். அதனால், இந்த நிகழ்வில் ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்று, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் தலைவர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தெரிவித்தார்.

இந்த விழாவில், செல்விகள் மோஷிகா பிரேமதாச, ஸ்ரீஷேகா பிரேமதாச சகோதரிகளின் வீணைக் கச்சேரி, செல்வன் நிஷித் ராஜன்பாபுவின் மெல்லிசைப் பாடல்,  துசியந்தி ராஜராஜன், வினுசாகினி இராஜராஜன் சகோதரிகளின் நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. மேலும், சங்கத்தின் உபதலைவர், திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், முதுபெரும் எழுத்தாளர், திரு. லெ.முருகபூபதி அவர்கள், சேவைநலன் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, அன்புடன் அழைக்கிறது, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம். அனுமதி இலவசம்.

விழா நடைபெறும் இடம்:   Clayton Hall, 264, Clayton Road, Clayton  Vic  3168

காலம்: 09.03.2026 - திங்கட்கிழமை, பி..   5.00 மணி

--------------------

 

 

No comments:

Post a Comment