இந்தியத் திரைத் துறையில் தனக்கென்று ஓர் உன்னத இடத்தை தக்க வைத்த நிறுவனம் ஜெமினி ஸ்தாபனம். இதன் அதிபர் எஸ் .எஸ் . வாசன் பிரம்மாண்டமான முறையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் தயாரித்த சந்திரலேகா மாபெரும் வெற்றி படமானது. அது மட்டுமன்றி வட இந்திய சினிமா உலகத்தை தென்னிந்திய சினிமா பக்கம் வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தது. இன்னும் சொல்லப் போனால் வாசன் தமிழை விட ஹிந்தியில் எடுத்த படங்களே பெரு வெற்றிகளை படைத்து பணத்தை வாரி வழங்கியது.
வாசனின் மறைவை அடுத்து அவரின் சன் எஸ் . எஸ். பாலன்
கைகளுக்கு நிர்வாகம் மாறியது. ஆனந்த விகடன் நிர்வாகம், ஜெமினி ஸ்டுடியோஸ், படத் தயாரிப்பு, ஜெமினி கலர் லேப் என்று எல்லாம் பாலனின் தலையில் விடிந்தது.
கைகளுக்கு நிர்வாகம் மாறியது. ஆனந்த விகடன் நிர்வாகம், ஜெமினி ஸ்டுடியோஸ், படத் தயாரிப்பு, ஜெமினி கலர் லேப் என்று எல்லாம் பாலனின் தலையில் விடிந்தது.
1975 ம் வருடம் கன்னடத்தில் சித்திராமலிங்கய்யா இயக்கி வெற்றி கண்ட பூதையன் மகா ஆய்யு படத்தை ஜெமினி நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்க பாலன் முடிவு செய்தார். ஜெமினி நிறுவனத்துக்கு உரிய முறையில் பிரம்மாண்டமான தயாரிப்பாக படத்தை எடுக்க விரும்பிய பாலன் ஒரே செலவில் படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கினார்.
கிராமத்தில் வடி கட்டிய கஞ்சனாக வாழும் பணக்காரன் தர்மலிங்கம் . ஏழைகளுக்கு பணத்தை கடனாக கொடுத்து வட்டியாக பிழிந்தெடுத்து அவர்களின் கொஞ்ச நஞ்ச நிலங்களையும் பிடுங்கி எடுப்பவன். இறக்கும் தருவாயில் தன மகன் நாகப்பனிடம் ஊரில் இருக்கும் எவருக்கும் இரக்கம் காட்டாதே , உதவி செய்யாதே என்று சொல்லி விட்டு மாண்டு விடுகிறான். மகனும் தந்தை சொல்லை சிரம் மேல் கொண்டு நடக்கிறான். இவர்களுடைய அட்டூழியத்தால் பாதிக்கப் படும் குடும்பங்களுள் கந்தன், கண்ணம்மா குடும்பமும் ஒன்று. நாகப்பனிடம் அடமானம் வைத்த சொத்தை மீட்க நீதிமன்றத்தை நாடுகிறான் கந்தன். ஆனால் வழக்கில் தோல்வியடையவே சொத்தையும் இழந்து, மேலும் கடன்காரனாகிறான். இதனால் நாகப்பன் மீது அவனுக்கு வன்மம் கூடுகிறது. ஆனால் திடிரென்று கிராமத்தில் ஏற்படும் பயங்கர வெள்ளம் எல்லோருடைய வாழ்வையும் புரட்டி போடுகிறது.
இவ்வாறு அமைந்த படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பவர்கள்
தர்மலிங்கமாக வரும் சுந்தர்ராஜனும்,நாகப்பனாக வரும் லோகேஷ் இருவரும்தான். சாமி படத்துக்கு தீபம் காட்டி விட்டு உடனே அதனை அணைத்து எண்ணெய்யை சேமிக்கும் காட்சி மூலம் தர்மலிங்கத்தின் கதாபாத்திரத்தை உணர்த்தி விடுகிறார் டைரக்டர். அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சுந்தரராஜன். அளவான வார்த்தை, கடுமையான பார்வை மூலம் ரசிகர்களின் ஆத்திரத்தை பெறுகிறார் லோகேஷ். நான்கு மொழிகளிலும் இவரே வில்லன். இவர்களுக்கு அடுத்து கோகுல்நாத் கவனத்தை பெறுகிறார். இவர்களுடன் சகுனியாக வரும் வி .எஸ் .ராகவன் நடிப்பும் கவனத்தை கவருகிறது.

முத்துராமன் , மஞ்சுளா ஜோடி ஆரம்பத்தில் ஆடிப் பாடி , பின்னர்
கஷ்டங்களை சந்திக்கிறது. ஆனாலும் மஞ்சுளா இளமை துள்ளலுடன் காட்சி தருகிறார். ஜெயந்தி முரட்டு கணவனின் சாந்தமான மனைவி. இவர்களுடன் சுருளிராஜன், நீலு கோஷ்டிகளின் காமடி படத்துக்கு பலம்.
கஷ்டங்களை சந்திக்கிறது. ஆனாலும் மஞ்சுளா இளமை துள்ளலுடன் காட்சி தருகிறார். ஜெயந்தி முரட்டு கணவனின் சாந்தமான மனைவி. இவர்களுடன் சுருளிராஜன், நீலு கோஷ்டிகளின் காமடி படத்துக்கு பலம்.
படத்துக்கு இசை வி. குமார். அவர் இசையமைத்த படங்களுள் பெரிய பஜெட் படம் என்று இந்த படத்தை சொல்லலாம். சிவப்புக்கல்லு மூக்குத்தி, படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம், பாடல்கள் இனிக்கின்றன . புதுமைப்பித்தனின் பகை கொண்ட உள்ளம் துயரத்தின் வெள்ளம் பாடல் கருத்தாழத்துடன் ஜீவிக்கிறது.
சென்னையில் சொந்தமாக ஜெமினி ஸ்டுடியோ இருந்த போதும் கர்நாடகாவுக்கு சென்று கால்ஸாபுர கிராமத்தில் செட் போட்டு , குடிசைகள் , கடைகள், தெருக்கள் எல்லாம் அமைத்து ஒரு புதிய கிராமத்தையே படத்துக்காக அமைத்திருந்தார்கள். சாந்தாராம் அமைத்த இந்த கிராம செட் அசத்தலானது. பிற்காலத்தில் பாரதிராஜா, பாக்யராஜா போன்றோர் கிராமங்களுக்கு சென்று படமெடுக்க இது ஓர் முன்னோடியானது.
அதே போல் இறுதி கிளைமாக்ஸ் கட்சியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்து குடிசைகளை அடித்துச் செல்லும் காட்சி மனதை பாதை பதைக்கச் செய்கிறது. ராஜாராமின் கேமரா கைவண்ணம் கிரேட் .
படத்தை பெரும் பொருட் செலவில் பாலன் தயாரித்து இயக்கினார். ரசிகர்கள் எல்லோரும் நல்லவரே என்று நம்பி அவர் எடுத்த எல்லோரும் நல்லவரே படம் ரசிகர்களின் ஆதரவை பெற தவறியது. தெலுங்கில் ஓரளவு வெற்றி பெற்ற போதும் தமிழ், ஹிந்தி இரண்டும் காலை வாரியது . இதன் விளைவாக ஜெமினி பட நிறுவனம் மூடு விழா கண்டது. ஜெமினி கலர் லேப் கை மாறியது. ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடம் அடுக்கு மாடி கட்டடங்களாகின. சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான வெற்றி படத்துடன் தலை நிமிர்ந்த ஜெமினி நிறுவனம் , எல்லோரும் நல்லவரே படத்தோடு தன் திரை பயணத்தை முடித்துக் கொண்டது.
No comments:
Post a Comment