மேலும் சில பக்கங்கள்

உலகச் செய்திகள்

டிரம்பின் புதியவரி- பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை

பாலஸ்தீன துணைமருத்துவர்கள் படுகொலை - இஸ்ரேல் தெரிவிப்பதை நிராகரித்தார் உயிர் பிழைத்தவர்

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும்- ஆயத்தொல்லா கமேனியின் ஆலோசகர்

காசாவில் இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிப்பு - பெருமளவு பகுதி ஆக்கிரமிக்கப்படும் - இஸ்ரேல் அறிவிப்பு

மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப் - பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட விரும்புவதாக கருத்து



டிரம்பின் புதியவரி- பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை

03 Apr, 2025 | 08:51 AM

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரிகளை அறிவித்துள்ளார்.

100 நாடுகளிற்கு டிரம்ப் வரிகளை விதித்துள்ளார்.இவற்றில் 60 நாடுகள் உயர் இறக்குமதி வரிகளை எதிர்கொள்கின்றன.சீனா, வியட்நாம், கம்போடியா மற்றும் இலங்கை  உட்பட பல ஆசிய நாடுகள் அதிக வரியை எதிர்கொண்டுள்ளன.

மேலும் அனைத்து வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல்களிற்கும் டிரம்ப் 25 வீத வரியை விதித்துள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நடைமுறைக்கு வரும்.

இந்த வரிகள் அமெரிக்கர்கள் சுரண்டப்படுவதை தடுக்கும் தேசிய கடனை அடைக்கும், அமெரிக்காவின் தேசிய உற்பத்தியை மீட்டெடுக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனத்தில் அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சித் தலைவரான ஓலு சோனோலா,  "அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்திற்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்"  என  தெரிவித்துள்ளார்.பல உலகநாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்  மந்த நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி   




பாலஸ்தீன துணைமருத்துவர்கள் படுகொலை - இஸ்ரேல் தெரிவிப்பதை நிராகரித்தார் உயிர் பிழைத்தவர்

Published By: Rajeeban

03 Apr, 2025 | 12:30 PM

பாலஸ்தீன துணைமருத்துவர்களை  இஸ்ரேல் கொலை செய்தவேளை அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் இது தொடர்பில் இஸ்ரேல் தெரிவித்துள்ளவற்றை நிராகரித்துள்ளார்.

எனது சகாக்களிற்கு என்ன நடந்ததுஎன்பதை பார்த்த  உயிர்தப்பிய ஒரேயொரு நபர் நான்தான் என  முன்தெர் அபெட் கையடக்க தொலைபேசியில் தனது சகாக்களின் படங்களை பார்த்தவாறு தெரிவித்தார்.

மார்ச் 23ம் திகதி அம்புலன்ஸின் முன்பக்கத்திலிருந்த தனது இரண்டு சகாக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்புலன்ஸின் பின்பக்கத்தின் ஊடாக நிலத்தில் குதித்து இவர் உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

நாங்கள் அதிகாலையில் எங்களின் தலைமையகத்திலிருந்து வெளியேறினோம் என அவர் காசாவில் பணிபுரியும் பிபிசியின் நம்பகதன்மை மிக்க சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு காயமடைந்தவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும்பாலஸ்தீன செம்பிறை சங்கத்தினர்சிவில் பாதுகாப்பு அமைப்பினர்இபாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரவாவில் கூடி அதிகாலையில் புறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"4.40 மணியளவில் முதல் இரண்டு வாகனங்கள் புறப்பட்டு சென்றனஇ4.50 அளவில் இறுதி வாகனம் வந்ததுஇஐந்து மணியளவில் ஐநா அமைப்பின் கார் மீது வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது" என அவர் தெரிவித்துள்ளார்.

என இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் 9 ஹமாஸ் உறுப்பினர்களும்இபாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் ஒரு உறுப்பினரும் கொல்லப்பட்டதாக  இஸ்ரேல்  தெரிவித்துள்ளது.

எனினும் முன்தெர் இதனை நிராகரித்துள்ளார்.

'பகலும் இரவும் ஒரே மாதிரியே செயற்படுவோம்இவெளி உள் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்இஇது பாலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் என தெரிவிப்பதற்கான அனைத்து விடயமும் காணப்படும்இவாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வரை அதன் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்."

'என்னை இஸ்ரேலிய படையினர் வாகனத்தின் சிதைவுகளிற்குள் இருந்து வெளியே இழுத்தனர்இகண்களை கட்டினர்இ கைதுசெய்தனர்இ15 மணித்தியலாங்கள் விசாரணை செய்தனர்" என அவர் தெரிவித்துள்ளார்.

அம்புலன்சினை ஹமாஸ் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம்இஅனைவரும் பொது மக்கள் நாங்கள்  எந்த குழுவையும் சேர்ந்தவர்கள் இல்லைஇமக்களை பாதுகாப்பதற்காக அம்புலன்ஸ் சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம் வேறு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 




அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும்- ஆயத்தொல்லா கமேனியின் ஆலோசகர்

Published By: Rajeeban

02 Apr, 2025 | 12:39 PM

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவரின்  ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆயத்தொல்லா அலி கமேனியின் ஆலோசகருமான அலி லரிஜானி இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது நடத்தையை மாற்றவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

சாகோஸ் தீவின் டியாகோகார்சியா தளத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் ஈரான் மீது குண்டுவீசினால் அல்லது இஸ்ரேலை குண்டுவீச்சில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டால், அது ஈரான் வேறு விதமான முடிவை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என அலி லரிஜானி தெரிவித்துள்ளார்.

ஈரான் எடுக்கும் முடிவு அமெரிக்காவின் நலன்களிற்கு உகந்ததாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுவிவகாரம் தொடர்பில் அமெரிக்கா தவறிழைத்தால்,ஈரான் தன்னை பாதுகாப்பதற்காக அணுவாயுதங்களை நோக்கி நகரவேண்டிய நிலையேற்படும் என ஈரானின் ஆன்மீக தலைவரி;ன் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஈரானிற்கும் அதன்  ஆதரவு சக்திகளிற்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா டியாகோ கார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு அதிநவீன போர் விமானங்களை  அனுப்பியுள்ளது.

அணுவாயுதங்களை உருவாக்குவதை தடை செய்து கமேனி  பிறப்பித்த மத ஆணையை ஈரான் பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள லரிஜானி ஆன்மீக தலைவரின் பட்வா நாங்கள் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்கின்றது,பட்வா என்பது அரசியல் உத்தரவுகளில் இருந்துவேறுபட்டது, அவரின் இந்த கடிதத்தை  ஏற்கனவே ஐநாவிற்கு அனுப்பியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்ந்தும் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் உள்ளது அமெரிக்காவின் இராணுவநடவடிக்கை இதனை மாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 





காசாவில் இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிப்பு - பெருமளவு பகுதி ஆக்கிரமிக்கப்படும் - இஸ்ரேல் அறிவிப்பு

02 Apr, 2025 | 10:47 AM

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை விஸ்தரிக்கவுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ்  அறிவித்துள்ளார்.

காசாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலின் பாதுகாப்பு வலயங்களுடன் சேர்க்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெறும் பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்கள் ஹமாசினை அழிக்கவேண்டும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இதுவே யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப் - பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட விரும்புவதாக கருத்து

Published By: Rajeeban

01 Apr, 2025 | 01:56 PM

அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறை  தெரிவு செய்யப்படுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்  முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மூன்றாவது தடவை போட்டியிட்டால் அவருக்குஎதிராக போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிடுவது சிறப்பான விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசமைப்பு ஒருவர் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அனுமதிக்காத போதிலும் டிரம்ப் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான தனது   விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நான் மூன்றாவது தடவை  ஜனாதிபதியாவதற்கான  சில வழிமுறைகள் உள்ளன என  என்பிசியின் பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா உங்களிற்கு எதிராக அவர் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் அதனை விரும்புகின்றேன்  அது சிறந்த விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதயாக பதவி வகிப்பதற்கான  வழிமுறைகள்  உள்ளதா என்பது குறித்து நான் இன்னமும் ஆராயவில்iலை என தெரிவித்துள்ள டிரம்ப் ஒரு வழியுள்ளது என சொல்கின்றார்கள் அது என்னவென்று எனக்கு தெரியாது என  குறிப்பிட்டுள்ளார்.

1951 இல் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 22 திருத்தம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது, இது எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என  குறிப்பிடுகின்றது.

இதேவேளை தனது முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடன் தான் உறவில் உள்ளதாக டைகர்வூட்ஸ் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரிவித்தார் என   குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் நான் அவருடன் சில தடவைகள் கோல்வ் விளையாடினேன்,அவர் மிகச்சிறந்த நபர் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்,அவர்இது பற்றி எனக்கு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இருவர் குறித்தும் எனக்கு மகிழ்ச்சி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்புகின்றேன்,என டிரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






No comments:

Post a Comment