மேலும் சில பக்கங்கள்

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025

 




 



விழா நாயகன்:-- 

தமிழ் நாட்டில்லிருந் து வருகை தந்து சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்தை இருப்பிடமாக்கி திருப்பொலிய வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய பணி ஆற்றிய ‘மாவைக் கவுணியன்’

 சிவத்திரு பண்டிதமணி க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார் அவர்கள்





திகதி :- 24 - 05 – 2025  சனிக்கிழைமை

இடம் :- அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம்

நேரம் - மாலை 4.45 மணி

(பார்வையாளர் தயவு கூர்ந்து 4.30 மணிக்கு அரங்கிற்கு வருகைதந்து விழாவினைச் சரியாக 4.45 மணிக்கு ஆரம்பிக்க உதவவும்)

சிறப்புப் பேச்சாளர்கள் :-

 Ø  கலாநிதி சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள்

Ø  Ø திருமதி கலையரசி சின்னையா அவர்கள் (முன்னாள் யாழ்.பல்கலைக்கழகச் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்)

Ø   Øஇன்னிசை விருந்து:- மருத்துவ கலாநிதி யதுகிரி லோகதாசன் அவர்கள்

 

Ø சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனார் இயற்றிய செந்தமிழ்ப் பூக்கள் நூல்கள் அறிமுகம் (சிறுவர் பாடல்கள்- இரு பகுதிகள் )

 

தமிழ் ஆர்வலர்கள் அன்புடன் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்கும்வண்ணம் தயவாக வேண்டப்படுகிறார்கள்.

 

மேலதிக தகவல்களுக்குத் தொடர்புளுக்கு :-

விழா அமைப்பாளர்கள்- சட்டத்தரணி  பூ . ஞானாகரன் - 0406517125

சிவஞானச் சுடர்- பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார். 0452114620

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விழா நாயகன் பண்டிதமணி   நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்களைப் பற்றிய  சிறு குறிப்பு

 

தோன்றிற் புகழொடு தோன்றுக என்று அருளிய பொய்யாமொழிப் புலவரின் வாக்கிற்கு அமையத் தமிழுக்கு அணிசேர்க்கத் தமிழ்நாட்டிலே தோன்றியவர் இன்றைய விழா நாயகரான நவநீத கிருஷ்ண பாரதி என்பவராவர். காலத்தால் மூத்த மொழியான தமிழ்மொழியாம் எங்கள் தாய்மொழி பலருக்குப் பெருமையையும் உயர்வையும் தந்தது. ஆனால் அத்தகைய தமிழுக்குப் பெருமை சேர்த்த ஈழப்புலவர்கள் வரிசையிலே நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - சிவசம்புப் புலவர் – சின்னத்தம்பிப்புலவர் - குமாரசுவாமிப் புலவர் ஆகியோரின்   வரிசையிலே வைத்துப் போற்ற வேண்டியவர்   நவநீத கிருஷ்ண பாரதி அவர்கள். சோழவள  நாட்டிலே மணல்மேற்குடிக்குப் பக்கத்திலுள்ள கரவட்டங்குடி எனும் ஊரிலே சீரும் சிறப்புடனும் வாழ்ந்தவர் சுப்பிரமணிய  பாரதியார். எங்கள் மகாகவி அல்ல! இவர் வேறொரு பாரதியார். இவரின் இளைய புதல்வரே இன்றைய விழா நாயகரான நவநீதகிருஷ்ணபாரதி ஆவர்.

 இவரின் அன்புத் தாயார் பெயர் தைலம்மையார். இளமைப் பராயத்திலிருந்தே கல்வி கேள்விகளிலே  சிறந்து விளங்கியதுடன் எல்லோரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுத் திகழ்ந்தவர் பாரதியவர்கள்.

தனது இளமைப் படிப்பை இராமசாமிப் புலவரிடத்திலும்   பின்னர் பிரபல பண்டிதரான கோபாலையரிடமும் மேற்கொண்டார். மேலும் தமிழிலும்; சைவத்திலும் பாண்டித்தியம் பெறுவதற்காக நற்றிணை உரையாசிரியரான பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் மற்றும் சோழவந்தான் அரசன் சண்முகனார் ஆகியோரிடமும் கல்வி பயின்று தமிழ் இலக்கணம் இலக்கியம் சமய சாத்திரங்கள் ஆகியவற்றிலே பெரும் புலமை படைத்து விளங்கினார். இயல்பாகவே பாக்களை யாப்பதிலும் சலியாது சொற்பொழிவாற்றுவதிலும் மிக்க திறமையைக் காட்டிவந்த பாரதியார்   தனது 18ஆவது வயதிலேயே பாலைக்காடு விக்ரோரியா கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருவாவடுதுறை அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத் திருமுறை ஆய்வுத் துணைவராகவும் தொடர்ந்து திருவாரூர்க் கல்லூரியிலே தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதியாரின் முத்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும்   தமிழீழச் சான்றோனாகிய   சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களைக் கவர்ந்தது. அவரின் அன்பான அழைப்புக்குச் செவிசாய்த்த பாரதியார் யாழ்ப்பாணத்து மருதநாமடத்திலே அமைந்த இராமநாதன் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைமைப் பேராசிரியராகப் பதவியேற்றார்.   சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்திலே குடியேறியிருந்து தனது பணிகளை ஆரம்பித்தார். தொடர்ந்து யாழ். பரமேசுவரா   கல்லூயிலே தமிழ்துறைக்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.    1936ஆம் ஆண்டிலே பரமேசுவர பண்டித ஆசிரிய கலாசாலை  நிறுவப்பெற்றதுடன் பாரதியார் அதன் தமிழ்த் தலைமைப் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்திலேயே நூற்றுக்கணக்கான தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கிய பெருமை பாரதியாரையே சாரும். 

சாந்த குணமும் எவர்க்கும் தீங்கு நினையாப் பெருமுள்ளமும் கலைபயில் தெளிவைப் பிரதிபலிக்கும் கம்பீரத் தோற்றமும் அவை அஞ்சா ஆற்றலும் தர்க்க நெறியுரைக்கும் சொல்வன்மையும் உரைவிரிக்கும் பேராற்றலும் நவநீதகிருஸ்ண பாரதியாரின் புகழை நாற்றிசையும் பரவவைத்தது.

பரம்பரைப் புலவர்கள் மரபிலே தோன்றிய   

காரணத்ததால் கவிதை யாப்பது இவருக்குக் குலவித்தையாகி விட்’டது. 

v உலகம் உய்யும்வண்ணம் திருவாய் மலர்ந்தருளிய தேன்தமிழாகிய  திருவாசகத்திற்கு..

v என்பை உருக்கி இருள்சேர் இருவினைத் துன்பம் அகற்றித் தூய சிவன் பாதமலர் சேர்க்கும் தேன்தமிழ் வாசகத்திற்கு..-

v கல்நெஞ்சையும் கசிந்து உருகவைத்து நினைவில் அருள்சுரக்கவைத்து அருள்பெருக்கும்  திருநெறிய தமிழ்வாசகத்திற்கு..

v பொல்லாதவர்களையம் போக்கறுத்து வாழவைத்து திருவைந்தெழுத்தைச் சொல்லாதவர்களையும் சொல்லவைக்கும் மாமருந்தாய் மலர்ந்த தமிழ் வாசகத்திற்கு 

vஅவநெறியில் செல்வோரையும் சிவநெறியில் நிற்கவைக்கும் தேன்‌‌பொதிந்த திருவாசகத்துக்குத்   தித்திக்கச் சிறந்த  பேருரை விரித்த பேராளன் சிவத்திரு நவநீதகிருஸ்ணபாரதி அவர்களே!

தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டு ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பாரதியாரும் ஒரு காரணகர்த்தாவாக இருந்தவர். மன்றத்தினர் அவரை அதன் தலைவராக்கியதுடன் பண்டிதமணி என்னும் பட்டத்தையும் வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள்.

இதனை அடுத்து 1952ஆம் ஆண்டிலே ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கம் இவருக்குப் புலவர்மணி என்னும் ட்டமளித்ததுடன் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது.

பண்டிதமணிகளை உருவாக்கும் பணியுடன் தேசநேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் பெரும்பணி ஆற்றினார். அத்துடன் பல சிறந்த நூல்களையும் இய ற்றித் தமிழுக்கு அணிசெய்த பாரதியார் டிசம்பர் மாதம் 1954ஆம் ஆண்டு சிவபதம் எய்தினார். அவர் எழுதிய திருவாசகப் பேருரை அவரின் நினைவையும் அன்னார் புகழையும் என்றும் வாழவைக்கும்

 

--------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment