மேலும் சில பக்கங்கள்

பீஜித் தீவில் தமிழ் கற்பிக்கும் திட்டம் - 2025

 06-04-2025


Sivagnana Tamil Peravai Inc., Australia

சிவஞானத் தமிழ்ப் பேரவை ஆஸ்திரேலியா

Reg No:  INC2100326      ABN: 47 223 168 903

Reg. Address: 17 RINGAROOMA CIRCUIT WEST HOXTON NSW 2171 Australia.

Email: sivagnanatamilperavai.australia@gmail.com


அன்புடையீர் வணக்கம்!

                   …….தெற்கு

மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்

கண்ணற்ற தீவினிலே – தனிக்

          காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்...

என்று பாரதியார் பீஜித் தீவினிலே அல்லற் பட்ட தமிழர்களைப் பற்றிக் கவிபாடிக் கலங்கினார்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெள்ளையர்கள் தமிழர்களைப் பீஜித் தீவுக்கு அழைத்துச் சென்று அங்கு கரும்புத் தோட்டங்களிலே கடுமையாக வேலை செய்யப் பணித்தார்கள்.  அவர்களின் கடும் உழைப்பினாலே காடெல்லாம் பொன் கொழிக்கும்  நாடாயிற்று.  அவர்களைக் கொண்டு சென்ற வெள்ளையர்கள் அதனால் செல்வந்தராயினார்கள்.  தமிழர்கள் ஏழைகளாகவே இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டினையும் இழந்து தாங்கள் யாரென்பதே அறியாத மானிடராகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்ற தமிழர்கள் தென்னிந்திய சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்.  இச்சங்கம் நாடெங்கும் பல பள்ளிக்கூடங்களைக் கட்டித் தம் பிள்ளைகள் படிப்பதற்கு வழிசெய்தது. வழமையான கல்வியோடு தமிழும் கற்பிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இப்பள்ளிக்கூடங்களில் தமிழைப் படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லாமற் போனதால் தமிழ்க் கல்வி நின்று போயிற்று.  ஒரு சந்ததியே தமிழைப் பேசாமல், படிக்காமல் விட்டுவிட்டது.

இந்த நிலைமையை மாற்றித் தொலைந்து போன இத் தமிழரை மீட்டெடுக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வந்தோம்.

தளராத எம் முயற்சியால் இந்த ஆண்டு மூன்று ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து பீஜித் தீவுக்குச் சென்றுள்ளார்கள்.  மூன்று வெவ்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் இவர்கள் தமிழ் படிப்பிக்கின்றார்கள்.  மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தமிழைக் கற்கின்றார்கள்.  தமிழர் அல்லாத பீஜி நாட்டினரும் தமிழைக் கற்பதில் ஆர்வம் காட்டிப் படிக்கின்றார்கள் என்பது சிறப்பான செய்தியாகும்.


இவர்களுக்குத் தமிழை விரைவாகக் கற்பிக்கக் கனடாவைச் சேர்ந்த திரு இராசரத்தினம் அவர்களின் பாடத் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.  இதற்கான பாடப் புத்தகங்களைக் கனடாவில் இருந்து அனுப்பி வைக்க 12,000 கனேடியன் டொலர்கள் செலவாகின்றது.  இத்தொகை திரு இராசரத்தினம் அவர்களின் பெருமுயற்சியால் அங்குள்ள அன்பர்கள் தந்த நன்கொடையாலே 4,500 கனேடியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.  இது சுமார் 5,000 அவுத்திரேலிய டொலர்களாகும்.  இத்தொகையில் பெரும்பகுதியை நாம் இங்கு சேகரித்தால் புத்தகங்களை அங்கு அனுப்பி இப்பிள்ளைகள் விரைவாகத் தமிழைக் கற்க ஆவன செய்யலாம்.



எம் உயிரினும் மேலான தமிழ் உலகெங்கும் தொடர்ந்து வாழ இத்தகைய திட்டங்கள் மிகவும் அவசியமாகும்.  எனவே  இத்திட்டத்துக்கு உங்கள் அன்பான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

நீங்கள் வழங்கும் நன்கொடை முழுவதும் பீஜித் தீவில் தமிழ் கற்பிக்கும் திட்டம் – 2025 எனும் இப்பணிக்காக மட்டுமே செலவிடப்படும். இந்த நற்பணிக்கு ஆதரவளிக்கும் உங்களனைவருக்கும், பீஜித் தீவில் தமிழ் கற்பிக்கப்படும், பணிக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கும், அவற்றை அங்கு கொண்டு சேர்ப்பதற்கும் ஆகும்  வரவு-செலவு கணக்குகள் அடங்கிய அறிக்கை அனுப்பப்படும். சிவஞானத் தமிழ்ப் பேரவை நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கின்றி நடத்தப் படும் நிறுவனமாகும்.

உங்கள் நன் கொடையை எமது பின்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

Account Name – Sivagnana Tamil Peravai Inc

            Bank    - Bendigo Bank

            BSB – 633 000

            Account Number – 219 199 270

            Please state your name and Fiji in the description field.

மேலும் விபரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். 

          மா. அருச்சுனமணி +61 414 537 970

          த. நந்திவர்மன் +61 434 314 240

          அன்பு ஜயா +61 423 515 263

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிசெய்யும் இந்த அறப்பணிக்கு ஆதரவளிப்பீர்!

 நன்றி.

வணக்கம்.

சிவஞானத் தமிழ்ப் பேரவையினர்

 





No comments:

Post a Comment